நான்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் செய்தோம். இன்று மீண்டும் மாக்னெட்டிக் எழுத்துக்களால் இரண்டு இலக்க எண்கள் உருவாக்கி, அவளை வாசிக்கச் சொன்னேன். முனபு இடதிலிருந்து வலதிற்கு வாசிக்காமல், வலதிலிருந்து இடதிற்கு வாசித்தாள். இன்று அவ்வாறு செய்யவில்லை. முழுவதுமாக புரிந்து கொண்டாளா அல்லது இன்று மட்டும் ஏதோ அதிர்ஷடத்தில் நடந்ததா என்று இன்னொரு முறை செய்தால் தான் தெரியும்.
தீஷு பொனிக்ஸ் முறையில், எழுத்துக்களைப் படிக்கிறாள். ஆனால் அதை வார்த்தையாகச் சேர்த்துச் சொல்லத்தெரியவில்லை. உதாரணத்திற்கு CAT என்பதை cuh-auh-tuh என்கிறாள். ஆனால் CAT என்று சொல்லத்தெரியவில்லை. அதனால் இன்று மூன்று எழுத்து வார்த்தைகளுடைய படங்களை ஐந்து(CAT, DOG, PIG, OWL, FOX) எடுத்துக் கொண்டேன். நான் cuh-auh-tah என்று சொன்னேன். அவள் வார்த்தையைக் கண்டுபிடித்து, அந்த படத்தை எடுத்துத் தர வேண்டும். கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்பட்டாள். சிறிது நாட்களுக்குப் பின் முயற்சி செய்ய வேண்டும்.
தீஷுவிற்கு எழுதப் பழக்குவதற்கு முன், மாண்டிசோரி முறையின் உப்புத்தாளை ஒத்த உபகரணத்திற்காக நான் செய்தது இந்த Felt எழுத்துக்கள்.
தீஷு இதை உபயோகப்படுத்தவே இல்லை. ஒரு மூலையிலிருந்த அதை இன்று உபயோகப்படுத்தினோம். நான் எடுத்துக்கொடுக்கும் அட்டையை கண்களை மூடிக் கொண்டு, தடவிப் பார்த்து எழுத்தைச் சொல்ல வேண்டும். நான் அட்டையைக் குடுத்தவுடன், கையால் முழு அட்டையையும் தடவியே எழுத்துகளை கண்டுபிடித்து விட்டாள். மிகவும் விருப்பமாகச் செய்தாள்.
எப்பொழுதும் செய்யும் இந்த பொனிக்ஸ் விளையாட்டை, இப்பொழுது எப்படி விளையாட வேண்டுமோ அவ்வாறு விளையாடுகிறாள். முதலில் ஒரு படத்தை எடுத்துக் கொண்டு, அதன் முதல் எழுத்தைக் கண்டுபிடித்து, அதன் எழுத்தில் சேர்க்கிறாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment