சப்பாத்தி மாவு பதத்திற்கு கோதுமை மாவை பிசைந்து கொண்டேன். சோழி, புளிங்கொட்டை, உளுத்தம் பருப்பு, சிறிய பொட்டு, பூண்டு போன்றவற்றை இரண்டு இரண்டாக எடுத்துக் கொண்டேன். அனைத்திலும் ஒன்றை மாவில் ஒளித்து வைத்து விட்டேன். மற்றொன்றை தட்டில் வைத்து விட்டேன். மாவிலுள்ளதை கண்டுபிடிக்க வேண்டும். மாவினுள் என்ன இருக்கிறது என்று தெரிவதற்குத் தட்டில் அதன் ஜோடியை வைத்திருந்தேன். நான் பொட்டு கண்டுபிடிப்பது கஷ்டம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பருப்பைக் கண்டுபிடிக்கத் தான் கஷ்டமாக இருந்தது அவளுக்கு. தீஷு திரும்ப திரும்ப கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செய்திருப்பாள். நேற்று முழுவதும் அதைப் பற்றி தான் பேச்சு. இன்று காலை எழுந்தவுடன் முதல் கேள்வி - பால் குடிச்சி முடிச்சவுடனே மாவில கண்டுபிடிப்போமா? என்று. இது கை விரலுக்கான பயிற்சி.
இது துணி வகைகளைப் பொருத்தியது போன்றது. உப்புத்தாளில் வெவ்வேறு வகையில் எடுத்து இரண்டு இரண்டு சதுரமாக வெட்டிக் கொண்டேன். அவளே அவள் வேலையை சரி செய்து கொள்வதற்காக ஜோடிகளின் பின்னால் ஒத்த வடிவத்தை வரைந்து கொண்டேன். ஒரே வகையான தாளைப் பொருத்த வேண்டும். விருப்பமாக செய்தாள் என்று சொல்ல முடியாது. ஒரு முறை பொருத்தி முடித்தவுடன், சரியாக செய்திருக்கிறாளா என்று பின்னால் வரைந்திருந்த வடிவங்களை வைத்து பார்க்கச் சொன்னேன். அடுத்த முறை பொருத்துவதற்கு முன்னாலே வடிவத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். இது தொடு உணர்வுக்கானப் பயிற்சி.

மாவில் இப்படியும் பண்ணலாமா? கலக்கறீங்க தீஷு அம்மா
ReplyDeleteவருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்.
ReplyDeleteநன்றி அமுதா.
அருமை தீஷூ! மாவு விளையாட்டு - ரசித்தேன்!
ReplyDeleteமாவு விளையாட்டு சூப்பர் தீஷூ!
ReplyDeleteதீஷு அம்மா உங்களுக்கு எப்படி இப்படியெல்லாம் ஐடியா வருகிறது... முடியல... உங்க மூளைக்காக ஒரு தங்க கிரீடம் போடலாம் :)
நன்றி முல்லை.
ReplyDeleteநன்றி ஆகாய நதி. Playdough clayயில் பண்ணலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தீஷுவிடம் இருக்கும் clay சிறிது கடினமாக இருந்ததால், சப்பாத்தி மாவு எடுத்துக் கொண்டோம்.
nice play
ReplyDelete