குக்கர் மூடியில் வெயிட் போடுதல்
சிறு துளையின் வழியே பென்சிலை உள்ளே போடுதல். இது சம்முவின் ஃபேவரைட். ஓரே நேரத்தில் பத்து பென்சில் வரை போடுகிறாள்.
பாட்டிலை மூடுதல். இன்னும் மூடத் தெரியாது. ஆனால் மூடியை மேலே வைக்கத் தெரிகிறது.
வடிவங்களின் பெயர்கள் தெரிவதால், நான் கேட்கும் வடிவத்தை பையிலிருந்து எடுத்து டப்பாவில் போடுதல்
டூத் பிக்கை எண்ணெய்க் கரண்டியின் துளைகளின் போட வேண்டும். வயதிற்கு அதிகமோ என்று யோசித்தேன். ஆனால் விருப்பமாக செய்தாள். பொதுவாக சம்முவுடன் விளையாடும் பொழுது போன் போன்ற அவசரத்திற்கு கூட எழுந்திருக்க யோசிப்பேன். டூத் பிக் சற்று கூர்மையாக இருந்ததால் ஒவ்வொரு வினாடியும் கவனம் அவள் மீதே வைத்திருக்க வேண்டியதாகிவிட்டது.
நான் முன்பே சொன்னது போல இவை அனைத்தும் ஒரு நிமிடத்திற்கு மேல் செய்ததால் வெற்றி பெற்றவை. :))






