Monday, May 18, 2009

கவர்ந்த தருணங்கள் 18/5/09

1. தீஷு தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என் கணவரைப் பார்த்து "பிச்சித்தாங்க" என்றாள். ஆபிஸ் கிளம்பும் அவசரத்திலிருந்த அவர், "உனக்குத் தோசையைப் பிக்கத் தெரியாதா?" என்றாள். அவள் மிகுந்த தன்னம்பிக்கையுடன்," எனக்கு ஆக்சுவலா பிக்கத்தெரியும், ஆனால் இப்ப லேசா பிக்க முடியல.." என்றாள்.

2. ஏதாவது டாய்(Montessori activities) சொல்லித்தா என்று வந்தாள். "அம்மா வேலையாயிருக்கேன், கொஞ்ச நேரம் ஆகட்டும்" என்றேன். வேலை முடித்து வந்து உட்கார்ந்த சில நிமிடங்கள் கழித்து வந்து "நீ டாய் சொல்லிக் கொடுப்பானு நான் wait பண்ணிட்டு இருக்கேன்" என்றாள். திரும்பவும் வந்து கேட்காமல், அவள் பார்வையில் சொன்னது பிடித்திருந்தது.

3. மீன் பண்ணையில் மீன் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏதோ தோன்றியவளாக மீன் முள்ளைப் பார்த்து "ஏன் மீன் உடம்புல ஸ்ட்ரா இருக்கு" என்று கேட்டாள்.

4. கோயிலில் பிரசாதமாக பால் கொடுத்தார்கள். என் கணவரிடம் கேட்டாள், "நீ காபி தானா குடிப்ப, ஏன் உனக்கு காபி கொடுக்காம பால் கொடுத்தாங்க" என்று

5. மொட்டைப் போடும் பொழுது அழுததை என் அம்மா, "ஏன்டா அழுத? அழுகை வந்துச்சா? என்றதற்கு "அழுக வரல.. நானா அழுதுட்டேன்" என்றாள்.

6. எங்கு செல்ல கிளம்பினாலும் எதில போகிறோம் என்று கேட்பாள். அன்று கிளம்பும் பொழுது கேட்டதற்கு கார் என்றேன். எதுக்கு கார்ல போகனும், பஸ்லேயே போகலாமே என்றாள். அதைக் கேட்ட என் கணவரின் உறவினர் "அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாள்" என்றார். என் அம்மா "அவள் அம்மா மாதிரியே இருக்கா" என்றார். என் தங்கை "குடும்பமே இப்படியா?" என்றாள்.

8 comments:

  1. /*எனக்கு ஆக்சுவலா பிக்கத்தெரியும், ஆனால் இப்ப லேசா பிக்க முடியல.." என்றாள்.*/
    :-)
    புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு

    ReplyDelete
  2. உங்கள் பதிவிற்குள் தற்செயலாக வந்தேன்.,உங்களை கவர்ந்த தருணங்களை , வார்த்தைகளாக்கி , அனைவரையும் கவர செய்கிறீர்கள். உங்கள் பதிவுகள் நான் படித்த வரை மிக அருமை ஆக உள்ளன. உங்கள் குழந்தைக்கு என் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. //
    எனக்கு ஆக்சுவலா பிக்கத்தெரியும், ஆனால் இப்ப லேசா பிக்க முடியல.." என்றாள்.
    //
    சூப்பர்!

    //
    "நீ டாய் சொல்லிக் கொடுப்பானு நான் wait பண்ணிட்டு இருக்கேன்"
    //

    நல்ல நினைவூட்டல் :)

    //
    "நீ காபி தானா குடிப்ப, ஏன் உனக்கு காபி கொடுக்காம பால் கொடுத்தாங்க" என்று

    ......................
    ...................
    "ஏன்டா அழுத? அழுகை வந்துச்சா? என்றதற்கு "அழுக வரல.. நானா அழுதுட்டேன்" என்றாள்.
    //

    ஹி ஹி ஹி! :)

    ReplyDelete
  4. டெம்ப்ளேட் சூப்பரா இருக்கு... :)

    ReplyDelete
  5. நன்றி அமுதா..

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுந்தர்.

    வருகைக்கு நன்றி ஆகாயநதி..

    ReplyDelete
  6. /*எனக்கு ஆக்சுவலா பிக்கத்தெரியும், ஆனால் இப்ப லேசா பிக்க முடியல.." என்றாள்.*/


    கோயிலில் பிரசாதமாக பால் கொடுத்தார்கள். என் கணவரிடம் கேட்டாள், "நீ காபி தானா குடிப்ப, ஏன் உனக்கு காபி கொடுக்காம பால் கொடுத்தாங்க" என்று

    சான்ஸே இல்லீங்க
    தீஷூ கலக்கல்ஸ்

    ReplyDelete
  7. நன்றி அமித்துஅம்மா.

    ReplyDelete
  8. கவர்ந்த தருணங்கள் நல்ல தொகுப்பு! தீஷூ கலக்கல்ஸ்!!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost