Tuesday, July 16, 2013

குழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல!!

குழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள். 4 முதல் 10 வய்து குழந்தைகள் எழுதிய‌ 12 கதைகள் வந்திருந்தன. உண்மையாகவே  குழந்தைகளின் கற்பனைத்திறனைக் கண்டு வியந்து போனேன்.

நான் இ‍‍-புக் செய்வது இது தான் முதல் முறை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் செய்திருக்கவில்லை. நான் எதிர்பார்த்ததை விட நேரம் எடுத்து விட்டது. சரியாக ப்ளான் செய்யவில்லை என்று நினைக்கிறேன். முதலில் text document - டாக உருவாக்கி, PDF வாக மாற்றி, புத்தகம் போல் செய்யலாம் என்று ஆரம்பித்து முடித்தும் விட்டேன். ஆனால் திருப்தியாக இல்லை.

அதனால் இணையத்தில் பேஜ் உருவாக்கும் இலவச மென்பொருள் தேடத் தொடங்கினேன். புத்தகம் உருவாக்கும் அளவிற்கு எந்த மென்பொருளும் இலவசமாக கிடைக்கவில்லை. ஐந்து பக்கங்கள் மட்டும் அல்லது வாட்டர் மார்க் என்று பல இன்னல்கள் இருந்தன. ஒரே ஒரு டிஸைன் டெம்பிளேட் மட்டுமே என் தேவைக்கு ஏற்றது போல் இருந்தது. அதை வைத்து அனைத்துப் பக்கங்களையும் உருவாக்கியுள்ளேன்.

புத்தக வடிவில் வாசிக்க‌


http://data.axmag.com/data/201307/20130717/U104675_F229002/index.html

மேலுள்ள லிங்கை சொடுக்கினால் புத்தக வடிவில் வாசிக்க முடியும். Flash தேவை.PDF Download

1. டவுன்லோடு செய்ய விரும்புபவர்கள், எனது google docs - லிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

https://docs.google.com/file/d/0B9QoI8U_6Wlmeko1aXFuMDNOQ0E/edit?usp=sharing

Preview not available என்கிற மெஜேஸ் வருகிறது. ஆனால் டவுன்லோடு செய்ய முடிகிறது.

2. www.scribd.com இணையத்தளத்திலும் அப்லோட் செய்திருக்கிறேன். இங்கிருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

நேரம் எடுத்து கதை எழுதிய குழந்தைகளுக்கும், ஆர்வத்துடன் அனுப்பிய பெரியோர்களுக்கும் என் நன்றிகள். முதல் அனுபவம் என்பதால், தவறுகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். தாங்கள் அனுப்பிய கதைகளில் பிழைகள் இருந்தால், சுட்டிக் காட்டுகள். திருத்தி மீண்டும் வலையேற்றுகிறேன்.

நன்றிக‌ள்!!!

15 comments:

 1. நல்ல முயறசி பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தமிழானவன்..

   Delete
 2. ரொம்ப நன்றி தியானா! பப்புக்கிட்டே பகிர்ந்துக்கறேன்.

  நல்லா வந்திருக்கு புத்தகம்!! முக்கியமா, பொருத்தமான குட்டி குட்டி படங்களோட!! வாழ்த்துகள். குட்டீசுக்கும் உங்களுக்கும்!! :‍)

  ReplyDelete
 3. புத்தக வடிவில் வாசிக்க‌ லிங்க் வேலை செய்கிறது... PDF Download சொன்னதும் சரி...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தனபாலன்..

   Delete
 4. மிகவும் அருமையாகச் செய்திருக்கிறீர்கள்! நன்றி!

  The imagination in the kids' stories is incredible! A wonderful book and great fun to read! Thanks.

  /// Khurinji Malar alas Pappu ///

  ALIAS Pappa?!!

  ReplyDelete
  Replies
  1. மாற்றிவிட்டேன் சரவணன்.. தங்கள் திருத்தங்களுக்கும் நன்றிகள்!!

   Delete
 5. புத்தகம் நன்றாக வந்திருக்கிறது தியானா.... முதல் சில பக்கங்களை படித்தேன். தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். மாலையில் முழுதும் படித்து விடுகிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வெங்கட்..

   Delete
 6. Diyana! A big 'Hi' for the first time.
  I am/was a regular reader of your blog.
  My daughter is 3.5 years old, in a montessori school.
  I often do activities with her at home. Know what, you are the inspiration for that :) And your blog is the first search place for me to dig out some 'good edutainment' activity.
  I wanted to 'THANK YOU' for that always :) Today, after seeing thenbook you have complied, was completely impressed and started penning this comment. Good job Diyana! (not sure if your spelling is correct)
  Keep going & you have been an inspiration :)
  Mullai!!! you as well, you too are a great inspiration. Will try to comment in your blog too. Temporarily accept this comment :):):)
  Regards
  Gayathri S

  ReplyDelete
  Replies
  1. Thanks a lot Gayathri for your detailed and encouraging comment.

   Delete
 7. g
  GOOD JOB POONTHALIR SHALL BLOOM ..BLOSSM...MANY..

  ReplyDelete
 8. உங்கள் Stars on the Ground by dheekshu புத்தகத்தை scribd யிலிருந்து இறக்கிக்கொண்டேன். நன்றாக உள்ளது. நியூஜெர்சியில் என் பேரன் 2 வயது நிரம்பியவன்- இதுவரை சுமார் 48 புத்தகங்கள் வாசித்துவிட்டான். காலை எட்டு மணியிலிருந்து பத்து மணி வரை புத்தகம் வாசிப்பதும் லேப்டாப்பில் தமிழ் நர்ஸரி ரைம்ஸ் கேட்பதும் தான் அவனுடைய முக்கியமான வேலை. உங்கள் புத்தகம் விரைவில் சொல்லித்தருவேன். சென்னையில் என் மற்ற இரு பேரக்குழந்தைகள்- இரண்டாவதும் ஆறாவதும் படிப்பவர்கள்- நிச்சயம் ரசிப்பார்கள். பதினைந்து நாளில் சென்னை போனதும் பின்னூட்டம் தருகிறேன். இதுபோன்ற முயற்சிகளைத் தொடர்ந்து செய்யுங்கள்.-அட்லாண்ட்டாவிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost