Monday, December 22, 2008

கிரிபில்

1. தீஷு என்னிடம் கிரிபில் பண்ணப் போறேன் என்றாள். அப்படினென்றால் என்ன என்றேன். கிறுக்குவது போல் செய்துக் காட்டினாள். அது Scribble என்று அழுத்திச் சொன்னேன். அவளும் ciribble என்று அழுத்திச் சொல்லிக் காட்டினாள்.

2. தீஷு அவள் பொம்மை போனில் பேசிக் கொண்டிருந்தாள்.
என்னிடம் வந்து
"அம்மா கத்து"
"எதுக்குடா"
"கத்து"
சரி என்று ஆஆஆ என்று கத்தினேன்.
"No shouting.. I am talking on the phone"
இப்படியொரு சம்பவம் அவள் ஸ்கூலில் நடந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் அவளுக்கு ஒரு முழு வாக்கியம் இங்கிலீஷில் தெரிவதற்கு சான்ஸ் கம்மி.



3. இப்பொழுது டிரேஸிங் பண்ணுவதற்கு தீஷுவிற்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவள் பஸிலில் இருக்கும் Pieces வைத்து டிரேஸ் பண்ணுகிறாள். வட்டம் ஒரளவுக்கு வருகிறது. நுனியுள்ளப் பொருட்கள் சரியாக வருவதில்லை.



4. சென்ற வெள்ளிகிழமை நல்ல Snow பெய்தது. நான்கிலிருந்து ஆறு இன்ஞ் ஸ்னோ வரை இருக்கும். தீஷுவிற்கு விவரம் தெரிந்து முதல் ஸ்னோ. முதலில் பயப்பட்டாள். காலை வைக்க மாட்டேன் என்றாள். அப்புறம் மிகவும் பிடித்து விட்டது. அவளும் அவள் அப்பாவும் அரை மணி நேரம் வரை ஸ்னோவில் விளையாண்டு கொண்டுயிருந்தார்கள். அடுத்த நாள் எழுந்தவுடன் ஸ்னோவில் விளையாட வேண்டும் என்று ஒரே அடம். அப்புறம் ஸ்னோவில் ஒரு வாக் போயிட்டு வந்தார்கள்.

Wednesday, December 17, 2008

ஸ்னோமென் மாட்சிங்


இது ஒரு பிக்சர் மாட்சிங். முன்பு பூனை, நாய் போன்ற வெவ்வேறு படங்களை பொருத்தியிருக்கிறோம். ஆனால் வெறும் ஸ்னோமென், வெவ்வேறு டிரஸ்களில். படமும் சிறியது. இது அடுத்த லெவல். நான் இந்த படங்களை இங்கிருந்து எடுத்துக் கொண்டேன். எனக்கு download செய்வதில் பிரச்சனை இருந்ததால், Triciaவிக்கு mail பண்ணி வாங்கினேன். Thanks Tricia.


தீஷுவிற்கு செய்வதற்கு எளிதாக இருந்தது. கஷ்டமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஒரு முறை செய்து முடித்தப் பின், படங்களை அடுத்த ரூமில் வைத்து விட்டு, நான் ஹாலிலிருந்து படங்களைக் காட்டினேன். ஹாலிக்கு வந்து படங்களைப் பார்த்து விட்டு, ரூமிற்குச் சென்று எடுத்து வர வேண்டும். ஒரு படம் மட்டும் தப்பாக செய்தாள்.
அடுத்து இதில் Memory game விளையாட முயற்சித்தோம். எல்லா கார்டையும் திருப்பி வைத்து விட்டு மாட்ச் செய்ய வேண்டும். ஆனால் தீஷுவிற்கு புரியவில்லை. ஏதாவது ஒரு கார்டை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, அந்த மாட்சிங் கார்டு வரும் வரை, ஒவ்வொரு கார்டாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டுயிருந்தாள். கொஞ்ச நாள் கழித்து சொல்லித் தரலாம் என்று இருக்கிறேன்.

தீஷு வீட்டிலிருக்கும் நாட்களுக்கு என, புதிதாக ஒன்று இரண்டு activities, திரும்ப பண்ணுவதில் ஒரு இரண்டு, மூன்று முதல் நாளே யோசித்து வைத்திடுவேன். சில நாட்கள் நான் யோசித்து வைத்திருப்பது எல்லாம் செய்து விட்டு, அடுத்து என்ன என்பது போல் பார்ப்பாள். சில நாட்கள் நான் சொல்லும் எதுவும் பிடிக்காது. அவளுக்கு விருப்பமில்லை என்றால் எடுத்து வைத்து விடுவோம். வீட்டைச் சுற்றி சுற்றி வருவோம் என்ன செய்யலாம் என யோசிக்க. அப்படி கிடைத்தது தான் இது - Foam Alphabets. A B C மற்றும் 1 2 3 என வரிசையாக அடுக்க வேண்டும். எளிது தான். ஆனால் 36 எழுத்துகளில், ஒரு எழுத்தைக் கண்டுப்பிடிப்பதற்குக் கஷ்டப்பட்டாள். எழுத்தின் கலரைச் சொன்னவுடன் எளிதாக செய்தாள்.

தீஷு இப்பொழுது, வாத்து, பொம்மையை வைத்துக் கொண்டு அம்மா வி்ளையாட்டு விளையாடுவதற்கு ஆசைப்படுகிறாள். தன்னை duck அம்மானு கூப்பிடுமாறும் சொல்கிறாள். அவள் வாத்தையும், பொம்மையையும் ஏதோ இரட்டை குழந்தைகளைத் தூக்குவது போல் தூக்கி வைத்திருந்தாள். பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

Monday, December 15, 2008

மார்கழி

நான் தீஷுவைப் பற்றி எழுதுவதற்காகவே இந்த ப்ளாக் உபயோகிறேன். ஆனால் அமித்து அம்மாவின் இந்த பதிவைப் பார்த்தவுடன், மார்கழியில் நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.

திருமணத்திற்கு முன் மார்கழியில் பால், பாலினால் ஆன பொருட்கள், பூ, மை போன்றவற்றை உபயோகப்படுத்த மாட்டோம். தினமும் திருப்பாவை படிப்பது, அதிகாலை கோயிலுக்குப் போவது உண்டு. என் பிறப்பு, படிப்பு எல்லாம் மதுரையில் தான். வேலைக்காக பெங்களூர் சென்றேன். பெங்களூரிலும் மார்கழியில் காலையில் கேயில் செல்லும் பழக்கம் இருந்தது.

ஒரு நாள் கோயிலில் முதல் நாள் யாகம் முடிந்திருந்த குண்டத்திலிருந்து எல்லோரும் விபூதி, தானியம் முதலியவற்றை எடுத்துக் கொண்டுயிருந்தனர். நானும் போய் எடுக்கும் பொழுது, எனக்கு யாகத்தில் போட்ட காசு கிடைத்தது. மூன்று இரண்டு ரூபாய்கள் ஒட்டிக்கொண்டு ஆறு ரூபாய். நான் எடுத்தவுடன் பக்கத்திலிருந்த அம்மா, காசு கிடைச்சிருக்கு என்று சத்தமாக சொன்னார்கள். உடனே பக்கத்திலிருந்தவர்கள் எல்லாம் ஆண்டாள் கொடுத்தது, இந்த வருடம் திருமணம் ஆகும் என்றார்கள். அதே போல் எனக்கு அந்த வருடமே திருமணம் ஆனது. அத்தனை பேர் எடுக்கும் பொழுது, எனக்கு மட்டும் காசு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது.

என் கணவரும் திருமாலின் ஒரு அவதாரமான ஸ்ரீராமர் (பெயரும் தான்). பிறந்ததும் ஸ்ரீராம நவமியில் தான். Just a coincidence ?

Tuesday, December 9, 2008

மீண்டும் ஒரு Matching

எங்கள் வீட்டில் மாட்சிங் மிகவும் பிரபலம். பிக்சர் மாட்சிங் ( ஒரே படங்களை சேர்த்தல்), கலர் மாட்சிங் ( ஒரே கலருடைய இரு அட்டைகளை சேர்த்தல்), ஸ்ஷேப் மாட்சிங், சைஸ் மாட்சிங் என ஒரே மாட்சிங் மயம். நான் அட்டைகளை அடுக்க ஆரம்பித்தேன் என்றால், தீஷுவிற்குத் தெரிந்துவிடும் ஏதோ மாட்சிங் செய்யப் போகிறோம் என்று. இந்த முறை Lowercase, Uppercase matching. தீஷு லோவர் கேஸ் கண்டுபிடிப்பத்தால் இதை செய்தோம். நன்றாக செய்தாள். p, d, b மட்டும் கஷ்டம். முதலில் 6 எழுத்துக்கள் மட்டும் செய்தோம். அது நன்றாக செய்தவுடன் 26 எழுத்துக்களையும் மாட்ச் செய்தோம்.










இது ஏற்கெனவே செய்தது தான். ஆனால் அப்பொழுது நீளத்தால் பிரித்தோம். ஆனால் இப்பொழுது சிறிது முதல் பெரிது என அடுக்க வேண்டும். இது visual discriminationக்கு ஏற்றது.


மாண்டிசோரியின் Pink tower போல் உபயோகப்படுத்த வேண்டியதை Brown stairs போல் பயன்படித்தினோம். ஏற்கெனவே நிறைய முறை Pink tower போல் விளையாண்டுயிருப்பதால், ஒரு முறை சொன்னவுடன் தீஷுவிற்கு புரிந்துவிட்டது. இதுவும் visual discriminationக்குத் தான்


தீஷுவிற்கு எழுத்துக்களைச் சேர்த்தால் வார்த்தைகள் வருவது புரிந்திருக்கிறது. அவள் வாசிப்பதைப் பார்த்தவுடன் வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். லைட் பத்தாததால், வீடியோ தெளிவாகத் தெரியவில்லை. Simply Science என்னும் புத்தகத் தலைப்பை ஒவ்வொரு எழுத்தாகப் படித்து(?) Butterfly rocket என்கிறாள்.

Rain coat Fairy wings



முன்பெல்லாம் தீஷுவிற்காக ஏதாவது வாங்கிட்டு வந்தால் கண்டுக்க மாட்டாள். இப்பொழுது வாங்கும் பொழுதே அவளிடம் கேட்க வேண்டும். அவளுக்கு பிடிந்திருந்தால் மட்டுமே வாங்குவோம். வீட்டிற்கு வரும் வழியில் வாங்கின பொருள் எங்கனு கேட்டுக் கொண்டே வருவாள். வீட்டிற்கு வந்தவுடன் அந்த பொருளை உபயோகித்துப் பார்த்து விட வேண்டும்.

சென்ற வாரம் மாலில் அவளுக்காக ஒரு Rain coatடும், ஒரு Fairy wingsசும் வாங்கி வந்திருந்தோம். வந்தவுடன் இரண்டையும் போட வேண்டும் என்றாள். சூப்பர் காம்பினேஷன்(!).

இது எனது 100வது பதிவு.

Monday, December 8, 2008

டிஸம்பர் ஸீஸன்

எங்கள் வீட்டின் புதிய விளையாட்டு - ரைம்ஸ் கண்டுபிடித்தல். தீஷுவிற்குத் தெரிந்த ரைம்ஸ் அந்த பாடலை எப்பொழுதும் பாடும் ராகத்தில்(!) வார்த்தைகளுக்கு பதில் "னானா" என்று பாடுவோம். தீஷுவும் கிட்டத்தட்ட எல்லா பாடல்களையும் கண்டுபிடித்துவிடுவாள். நாங்கள் இரண்டு மூன்று முறை பாடியவுடன் தான் பாடுவதாகச் சொல்லிவிட்டு, இந்த "Bats are sleeping" பாடலைப் பாடினாள். ஒரளவுக்கு எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்களும் கேளுங்களேன்.









Powered by Podbean.com


இப்பொழுது தீஷுவிற்கு கீ-போர்ட் ஆசை வந்திருக்கிறது. ஏதாவது நாலு கீயை அழுத்திக் கொண்டு பாடுகிறாள். இந்த வீடியோ அவள் பின்னாளில் நன்றாக கீ-போர்ட் வாசிக்கக் கற்றுக் கொண்டால், கேலி செய்வதற்காக எடுத்து வைத்திருக்கிறேன்.

Thursday, December 4, 2008

ஜாடிக்கேத்த மூடி

இது ரொம்ப நாள் பண்ணனும் நினைத்த activity. காலி பாட்டில்கள் சேகரிக்கவே இரண்டு மாதங்கள் ஆச்சி. ஐந்து பாட்டில்களும் அதற்கேற்ற மூடிகளையும் கொடுத்து சரியாக பொருத்த வேண்டும். தீஷுவிற்கு தண்ணி பாட்டில் மூடி மூட கஷ்டமாக இருந்தது. எல்லா பாட்டில்களையும் திரும்ப திரும்ப திறந்து மூடிக் கொண்டுயிருந்தாள்.



ஸ்டாம்ப் தீஷுவிற்கு ரொம்ப பிடித்திருக்குது. இங்க் பேட் இல்லாததால் Paint வைத்து ஸ்டாம்ப் பண்ணுகிறாள்.


அவள நாங்கள் Strollerல வச்சி தள்ளிக்கிட்டிருக்கோம். ஆனா அவள் தன் பொம்மையா தள்ளுறா.

Tuesday, December 2, 2008

காலத்தின் கட்டாயமா?

தொலைக்காட்சியில் 30 நிமிட கமர்ஷியல் பார்க்க நேர்ந்தது. நம் ஊரில் ஏதாவது புது படம் ரிலீஸானால், சில நேரங்களில் 30 நிமிட விளம்பரம் போடுவது போல, இங்கு அடிக்கடி பீக் டைம் இல்லாத நேரத்தில் எல்லாவிதமான பொருட்களுக்கும் போடுவார்கள். அடிக்கடி குழந்தைகளின் படம் காண்பிக்கப்பட்டதால் அந்த விளம்பரத்தைப் பார்க்க ஆரம்பித்தோம். YourBabycanread என்பதன் விளம்பரம்.

சில சிடியும், Flashcardsசும் கொடுப்பார்கள் போலிருக்குது. அதை பிறந்த இரண்டு மூன்று மாதங்களிலிருந்து காண்பிக்க ஆரம்பித்தால், 1 வயதில் வாசிக்க(?) ஆரம்பிப்பார்கள் என்று காட்டப்பட்டது. 50 மாநிலங்கள் சொல்கிறார்கள், அதன் தலைநகரம் சொல்லிகிறார்கள் என்றனர். சில மழலைகளும் சொல்லின. அதிர்ச்சியாக இருந்தது.

இங்கிருக்கும் Kumon போன்ற டியூன் சென்டர்களில் 3 வயது குழந்தைகள் முதல் டியூன்(?) சொல்லிக் கொடுக்கிறார்கள். எனக்கு தெரிந்து இந்திய அடுத்து சீன, ஜப்பான் குழந்தைகள் தான் அதிக எண்ணிக்கையில் அங்கு படிப்பார்கள். அமெரிக்கர்கள் 6 வயது வரை பள்ளியில்(Preschool) சேர்ப்பதே அரிது. குழந்தைகளை குழந்தைகள் போல் வளர்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். அவர்கள் இந்த மாதிரி Early Education உபயோகப்படுத்துகிறார்கள் என்பதே ஆச்சரியம்.

இருபத்திநான்கு மணி நேரத்தில் பதினாறு மணி நேரத்திற்கு மேல் தூங்கும் குழந்தையிடம், அவர்கள் முழித்திருக்கும் சொற்ப நேரத்தில், சுத்தியுள்ள உலகத்தைக் கூட ரசிக்க விடாமல், அவர்களை இப்படி கொடுமைப்படுத்த வேண்டுமா? சீன, இந்திய குழந்தைகளிடம் பிற்காலத்தில் போட்டி போட வேண்டும் என்பதற்கான தயார்ப்படுத்துதலா? இந்த மாதிரி வாசிப்பதும், தலைநகரங்களையும் மனப்பாடம் செய்தலும் ஒரு வயது குழந்தைக்கு தேவையா? புரியவில்லை. பிற்காலத்தில் அவர்கள் நல்லா படிக்கலாம், படிக்காமலும் போகலாம். ஆனால் அவர்கள் குழந்தைப் பருவத்தை இழந்துவிட்டார்கள் என்பது என் கருத்து.

Monday, December 1, 2008

எத்தனை மாற்றங்கள்

ஒவ்வொரு நாளும் தீஷுவிடம் ஏதாவது மாற்றம் தெரியும். ஆனால் ஒவ்வொரு ஆறு மாதத்திலும் ஏதாவது கவனிக்கத்தக்க முன்னேற்றம் தெரியும்.

தீஷு முதல் ஒரு வருடம் வரை சரியாக தூங்கவும் மாட்டாள். தூங்க விடவும் மாட்டாள். ஒரு வயது பிறந்த நாள் முடிந்தவுடன் நல்ல மாற்றம். இராத்திரி முழுவதும் தூங்க ஆரம்பித்தாள். நடக்க ஆரம்பித்தாள். ஒன்றரை வயது இருக்கும் பொழுது ABCD, கலர் identification செய்ய ஆரம்பித்தாள். 20 காய்கறிகள் வரை கண்டுபிடித்தாள். இதற்காக நான் எதுவுமே செய்யவில்லை. அவள் பொம்மைகளிடமிருந்து கற்றுக் கொண்டாள்.

இரண்டு வயதில் தான் பேச ஆரம்பித்தாள். எழுத ஆசைப்பட்டாள். இந்த வயதில் தான் அவளுடன் Montessori activities ஆரம்பித்தேன். பாட்டுக்கள் பாட ஆரம்பித்தாள். தோசை அம்மா தோசை அவளுடைய favorite.

இப்பொழுது இரண்டரை வயது. பேச்சில் தெளிவு. எழுத்தில் தெளிவு. பதில் சொல்வதில் தெளிவு. நான் யோசித்துப் பார்த்தேன். குழந்தைகளை அருகிலிருந்து பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு தீஷு பிறப்பதற்கு முன் கிடைத்ததில்லை. அவள் வளரும் பொழுது, அவள் மூலம் குழந்தை வளர்ப்பைத் தெரிந்து கொண்டேன். அதை தவிர வேறு எதையும் சொல்லிக் கொள்ளும்படியாகக் கற்றுக் கொண்டதாய்த் தெரியவில்லை. ஆனால் இந்த குழந்தையிடம் தான் எத்தனை மாற்றங்கள்.

நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை, தீஷுவைப் பார்த்துக் கொள்ள, 2.5 வருடங்களாக லீவு எடுத்து இருந்தேன். போன வாரம் தான் resign செய்தேன். இனிமேல் தீஷு அம்மா என்ற வேலை மட்டும் தான். ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சிறு கவலை இருந்தது. அலைந்து திரியாமல், காம்பஸ் இண்டர்வியூவில் வாங்கிய வேலை என்பதால் மதிப்பு தெரியவில்லையோ என்று யோசிக்கத் தோன்றியது. ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லை, இருந்த வேலையையும் விட்டாகி விட்டது என்ற கவலை இருந்தது.அந்த கவலையை தீஷு போக்கி விட்டாள். அவள் டீச்சரைப் பார்த்த பொழுது, அவள் வாரத்தில் மூன்று அரை நாட்களுக்கு மட்டுமே பள்ளிக்கு வருவதால், என்னால் அவள் முன்னேற்றத்திற்கு credit எடுத்துக் கொள்ள முடியாது. You are giving her a safe environment at home for her explore and learn என்றார்கள். அவளுடன் வீட்டில் நான் செய்வதைச் சொன்னவுடன், "Why don't you come and work here as a teacher? If you can make a kid intelligent, you can make another 10 more" என்றார்கள். இந்தியா திரும்பும் எண்ணம் இருப்பதால் நான் commit பண்ணவில்லை. ஆனால் எனக்கு மிகுந்த சந்தோஷம். இது எனக்கு பிரமோஷன் போலவும், அவார்ட் போலவும் இருந்தது. கொடுத்துள்ள வேலையை உருப்படியாக செய்துள்ளோம் என்று தோன்றியது. எனக்கு வேலையை விட்டது இப்பொழுது கவலையாக இல்லைடா தீஷு.

Hundred board

தீஷுவின் ஸ்கூலில் ஒன்று முதல் முப்பது வரை அவளுக்கு சொல்லித் தரலாம் என்றதை அடுத்து, நான் அதை hundred board மூலம் சொல்லித் தரலாம் என்று இருக்கிறேன்.

Hundred board 10*10 கட்டங்கள் கொண்ட board. முதல் வரிசையில் 1 முதல் 10 வரை ஒவ்வொரு கட்டத்திலும் எழுதி இருக்கும். இரண்டாவது வரிசையில் 11 முதல் 20 வரை. இப்படியாக கடைசி வரிசையில் 91 முதல் 100 வரை. அதை போல் போர்டில் வைப்பதற்கு 1 முதல் 100 வரை எழுதியுள்ள காயின்ஸ்(coins) இருக்கும். குழந்தைகள் 1 முதல் 100 வரை அடுக்குவதன் மூலம் sequence, patterns, identification போன்றவற்றை கற்றுக் கொள்ளலாம்.




நான் excel sheetயில் 1 முதல் 100 வரை டைப் செய்து போர்டுக்கும், காயின்ஸ்க்கும் என 2 printout எடுத்துக் கொண்டேன். காயின்ஸ்யை வெட்டிய பிறகு போர்டில் வைக்கும் பொழுது, காயின்ஸ் சரியாக நிற்காமல் நகரும் என்ற காரணத்தால், நீண்ட விவாதத்திற்குப் பிறகு, காந்தம் உபயோகிக்கலாம் என்று தோன்றியது. cell-o-type போன்று காந்தம் rollலாக கிடைத்து. அதை காயின்ஸ்யில் ஒட்டி விட்டோம். நன்றாக இருக்கிறது.


தீஷுவிற்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவள் வரிசையாக அடுக்காமல், ஒரு காயின்யை எடுத்து, அதை போர்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ, அங்கு வைக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அதற்கு எண்ணைச் சொல்வதற்கும், எந்த வரிசையில் வரும் என்று சொல்வதற்கும் எங்கள் உதவி தேவைப்படுகிறது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost