இன்று தீஷு முதலில் மெக்னெட்டிக் எழுத்துக்களால் எண்கள் உருவாக்கி விளையாட வேண்டும் என்றாள். அனைத்து எண்களையும் சரியாக வாசித்தாள். அவளுக்கு ஒரளவுக்கு இரண்டு இலக்க எண்கள் வாசிக்கத் தெரிகிறது. ஹண்ரட் போர்டு நன்றாக பழகி விட்டால் 99 வரை எழுதுவது சுலபமாக இருக்குமென நினைக்கிறேன்.
இன்று அவளுக்குக் கூட்டல் சொல்லிக் கொடுத்தேன். நிறைய நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் வயதுக்கு இது அதிகமோ என்று தோன்றியது. முயற்சி செய்து பார்க்கலாம் என்று இன்று ஆரம்பித்தேன். இதற்கு மூன்று கிண்ணங்களும் (அதில் ஒன்று கண்ணாடி, மற்ற இரண்டும் ஒன்று போல் இருக்கும்), மற்றும் கண்ணாடி கற்களும் எடுத்துக் கொண்டோம். முதலில் ஒரு நோட்டில் 1 + 2 = என்று எழுதி, கூட்டல் குறி மற்றும் = அறிமுகப்படுத்த, வாசித்துக் காட்டினேன். பின் முதல் கிண்ணத்தில் ஒரு கல்லும், இரண்டாவது கிண்ணத்தில் 2 கற்களும் போட்டேன். இரண்டு கிண்ணங்களில்லுள்ள கற்களையும் மூன்றாவதாக இருக்கும் கண்ணாடி கிண்ணத்தில் கொட்டினேன். இறுதியில் கண்ணாடி கிண்ணத்திலிருப்பதை கீழே கொட்டி எண்ணினேன். பின் நோட்டில் =க்கு அடுத்து எழுதிக் காட்டினேன்.
தீஷு விருப்பமாகச் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வரிசை மாற்ற வில்லை. நான் என்ன சொன்னேனோ அனைத்தையும் செய்தாள். ஒன்பது கணக்குகள் செய்து முடித்து விட்டாள். ஆச்சரியமாக இருந்தது. அந்தத் தாளை தேதியிட்டு பத்திரப்படுத்திவிட்டேன். விருப்பம் இருப்பதால் இனி தினமும் ஐந்து பத்து நிமிடங்களுக்குச் செய்யச் சொல்லலாம் என்று நினைத்திருக்கிறேன்
Games to play with 3 year old without anything
2 years ago
ஆகா! இப்படிதான் சைல்ட் பிராடிஜி எல்லாம் உருவாகறாங்களா! வாழ்த்துகள்,தீஷுவிற்கும் உங்களுக்கும்!
ReplyDelete:-)
நன்றி முல்லை. ஆனா பிராடிஜி எல்லாம் நாங்க செய்றதுக்கு பெரிய கம்பரிஷன்.
ReplyDelete