Solar oven பற்றி இங்கு படித்தவுடன் செய்ய வேண்டும் என்ற ஆவல் தீஷுவிற்கு இருந்ததோ என்னவோ எனக்கு இருந்தது. இரண்டு வாரயிறுதியில் வெவ்வேறு பொருட்கள் வைத்து முயற்சித்தோம்.
தேவையானப் பொருட்கள் :
1. பீட்ஸா பெட்டி அல்லது ஷூ பெட்டி அல்லது மூடியுடன் கூடிய அட்டைப் பெட்டி
2. அலுமினியம் ஃபாயில்
3. பாலீதின் பேப்பர்
4. கறுப்பு பேப்பர் (இருந்தால் உபயோகப்படுத்தலாம்)
செய்முறை:
1. பீட்ஸா அட்டையைத் திறந்து, உள்ளே முதலில் கறுப்பு பேப்பர் வைத்து ஒட்டி விட்டோம்.
2. கறுப்பு பேப்பரின் மேல் அலுமினியம் ஃபாயில் வைத்துவிட்டோம்.
3. அட்டையின் மூடியில் 3 இன்ச் ஓரங்களில் விட்டுவிட்டு மூன்று பக்கங்களில் வெட்டிவிட்டோம். மூடி எந்த பகுதியில் அடிப்பகுதியில் இணைந்திருக்கிறதோ, அந்தப் பகுதியை வெட்ட வேண்டாம். இப்பொழுது மூடியில் இன்னொரு மூடி இருப்பது போல் இருக்கும்.
4. அந்த இன்னொரு மூடியை அலுமினியம் ஃபாயில் வைத்து கவர் செய்து விட்டோம்.
5. அந்த சிறிய மூடியைத் திறந்து வைத்து, வெட்டிய பகுதியை பாலீதின் கவரால் மூடி வைத்து விட்டோம்.
6. சோலார் அவண் ரெடி. வெயிலில் வைக்கும் பொழுது அந்தச் சிறிய மூடியில் (நாம் வெட்டி ஃபாயில் ஒட்டியது) சூரிய ஒளி படும் படி வைக்க வேண்டும். சூரிய ஒளி அதன் மேல் பட்டு reflect ஆகி அவண்ணுள் வைத்திருக்கும் பொருள் மேல் பட வேண்டும்.
முதல் வாரத்தில் இரு கிண்ணங்களில், ஒரே அளவு, ஒரே வெப்ப அளவில் தண்ணீர் எடுத்துக் கொண்டோம். ஒன்றை அவணுள் வைத்து விட்டோம். மற்றொன்றை வெளியில் வைத்து விட்டோம்.
எங்களிடம் நம் உடம்பு சூட்டைக் கண்டறியும் தெர்மாமீட்டர் தான் இருந்தது. அதில் ஒர் அளவுக்கு மேல் வெப்பத்தை அளக்க முடியவில்லை. ஆனால் தொட்டுப்பார்த்தாலே வித்தியாசம் உணரமுடிந்தது.
தீஷு எழுதி வைத்த ரீடிங்க்ஸ்..
Start time 12:36 PM
Little Hotter 1:13 PM (Outside 34.9, Inside High)
Hot 3:30 PM (Outside 36.0, Inside High)
Burning 3:53 PM
Burning என்று அவள் எழுதியிருப்பது கிண்ணத்தின் சூடு. தண்ணீர் அல்ல..:))
சென்ற வாரம் ஃபிரட் மேல் சீஸ் தூவி வைத்தோம். கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் வெளியே சென்று விட்டு வந்தோம். சீஸ் உருகி இருந்தது.
மொத்தத்தில் இது ஒரு வெற்றிகரமான சோதனை :))

Just curious..What is the melting point of the cheese you used? :-)
ReplyDeleteஎனக்குத் தெரியலேயே வருண். பாக்கெட் மீதும் தகவல் இல்லை. ஆனால் கம்மி என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் சற்று சூடானப் பொருட்கள் மீது போட்டாலே உருகத் தொடங்கி விடும்.
Deleteபாராட்டுகள்....!
ReplyDeleteநன்றி மனோ
Deleteசோலார் அவண்-னை விட, தீஷு அவர்களின் ரீடிங்க்ஸ் சூப்பர்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteசோதனை வெற்றி:)! அருமையாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteபிஸ்ஸா டப்பாவை இது போல வேறு வண்ண பேப்பர்கள் ஒட்டி இன்டோரில் பொருட்களை வைத்து எடுக்கப் பயன்படுத்தலாமே என்கிற ஐடியாவுடன் நன்றி சொல்லிப் போகிறேன்:)!
அருமையான யோசனை ராமலக்ஷ்மி மேடம்.. நன்றி வருகைக்கும் யோசனைக்கும்..
Deleteசிறப்பான சோதனை.....
ReplyDeleteஉங்கள் தொடர் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்.... தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள் தியானா.
வருகைக்கு மிக்க நன்றி வெங்கட்
Deleteஅன்புள்ள தியானா,
ReplyDeleteஎன் முதல் வருகை இது.
உங்கள் அனுபவப் பகிர்வுகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
அதுவும் சோலார் அவன் நல்ல முயற்சி. குழந்தைகளுடன் இம்மாதிரி முயற்சி செய்வது அவர்களது கற்பனைத் திறனை சிறப்பாக்கும். முன் உதாரண அம்மாவாக உங்களைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.
நான்குபெண்கள் தளத்தில் நான் எழுதிவரும் செல்வ களஞ்சியமே தொடரை நீங்கள் படித்து பின்னூட்டம் கொடுத்தது சந்தோஷமாக இருந்தது. உங்களுக்கு நேரமிருக்கும் போது முந்தைய பகுதிகளையும் படித்து உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
ரஞ்சனி
முதல் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.. கண்டிப்பாக மற்றப் பகுதிகளையும் வாசிக்கிறேன்..
Deleteவாழ்த்துக்கள் நண்பரே.........
ReplyDeleteநன்றி மணிகண்டா..
ReplyDeleteகாலத்திற்குத் தேவையான நல்ல செய்முறை முயற்சி..உனக்கும் ஆர்வத்துடன் செய்யும் தீக்ஷுவிற்கும் வாழ்த்துகள்..தொடருங்கள், சமியும் விரைவில் சேர்ந்து கொள்வாள் :)
ReplyDelete