சென்ற வருட அன்னையர் தினத்திற்கு தீஷு பள்ளியிலிருந்து ஒரு சின்னச் செடி கொண்டு வந்தாள். அது வளர்ந்து சூரியகாந்தி பூக்கள் வந்தன. பூக்கள் காய்ந்தப்பின் விதைகளை எடுத்தோம். ஒரு பூவில் 65 விதைகள் இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. தீஷு பள்ளிக்கு விதைகளை எடுத்துச் சென்று வகுப்பிலுள்ள குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தாள்.
இப்பொழுது அந்தச் செடியிருந்த தொட்டியில் ஒரு செடித் தானாக வளர்கிறது. சூரியகாந்தி செடி தான். தீஷுவிடம் என்ன செடி என்று கேட்டவுடன், Sunflower plant என்று சொல்லிவிட்டு,
What if, இது ஒரு பெரிய மரமாச்சுனா? என்றாள்
என்னாகும்? என்றேன்
நான் தூங்கி எந்திரிக்கிறப்ப, என் பெட் மேலே நூல் நூலா இருக்கும்.. என்னடானு பார்த்தா அது அந்த மரத்தின் வேர்.. வேரே மண்ணுக்கு மேல வர்ற மாதிரி அது ஒரு பெரிய மரம். நான் Brush பண்ண பாத்ரூம் போனா, அங்க டாப்பயே வேர் மூடிறிச்சு..கிட்சன்ல வேர்.. வீடே தெரியல..
அப்புறம்.. பெரிய மரமாயிருந்தா Birds எல்லாம் இருக்குமே?
ஆம்.. நிறைய இருந்திச்சு.. நான் அவங்க கிட்ட ஹெல்ப் கேட்டேன்..அந்த வேர் எல்லாம் எடுக்க ஆரம்பித்தோம்..ஆனா வேரெல்லாம் எடுக்க முடியல.. பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட ஐடியா கேட்டேன்.. எல்லாரும் அவங்க ஐடியாவை ஒரு பேப்பரில் எழுதித் தந்தாங்க. அதுல பெஸ்ட் ஐடியா குழி தோண்டி வேர எடுக்கிறது. நாங்க எல்லாரும் சேர்ந்து குழியைத் தோண்டி, வேர்களை எடுத்து, வீட Save பண்ணிட்டோம்.
அந்த மரத்த என்ன பண்ணினீங்க?
அத எடுத்திட்டுப் போய் பார்க்ல திரும்ப Plant பண்ணிட்டோம்..கிட்ஸ் ஏறி விளையாட வசதியா இருக்குமே என்றாள்..
அவளேப் பார்த்துக் கொண்டே இருந்தேன். இதே வயசிலேயே இப்படியே இருந்துவிடேன் கண்ணம்மா அல்லது இதே கற்பனைத் திறனோடு வளரு என்று நினைத்துக் கொண்டே, நல்ல ஸ்டோரிடா..குட்.. என்றேன்.
படங்கள் : எங்கள் வீட்டில் வளர்ந்த பூக்கள். தீஷு எடுத்தது.

அற்புதம் தியானா..எவ்வளவு அருமையான கற்பனை..வாழ்த்துகள் தீக்ஷுவிற்கு
ReplyDeleteநன்றி கிரேஸ்..
Deleteஅழகு... அருமை...
ReplyDeleteதீஷுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்..
Deleteநல்ல கற்பனையல்ல நல்ல மனசு.அவளுக்கு இப்பவே பார்க்கல மரம் நடனும்ன்னு விருப்பம் இருப்பது பாராட்ட வேண்டிய விஷயமே.வாழ்த்துக்கள் குட்டியம்மா
ReplyDeleteநன்றி கவியாழி கண்ணதாசன்..
Deleteகதை நல்லாருக்கு தியானா! :) தீஷூவின் கற்பனைக்கு ஒரு ஓ!! :-)
ReplyDeleteநன்றி முல்லை..
Deleteகற்பனையும் அழகு. எடுத்த படங்களும் அழகு.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி மேடம்..
Delete