நானும் என் கணவரும் காபி பிரியர்கள் இல்லையென்றாலும் தினமும் இரண்டு முறை குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள். என் கணவர் ஃபில்டர் காபி அருமையாக தயார் செய்வார். நான் போட்டால் டிகாஷன் இறங்காது. :)). அதனால் இன்று வரை எங்கள் வீட்டு காபி டிபார்ட்மென்ட் அவரிடம் தான் உள்ளது. இங்கு வந்த புதிதில் ஃபில்டருக்கான நல்ல காபிப் பொடி கிடைக்கவில்லை. ப்ரூ உபயோகித்துக்க் கொண்டே, பல காபிப் பொடிகளை முயற்சித்துக் கொண்டிருந்தார். ஃபில்டருக்கான பொடி கிடைத்தவுடன், ப்ரூவை நிறுத்திவிட்டார். கால் பாட்டில் ப்ரூ, அதிக நாள் ஆனதால் கட்டியாகி இருந்ததை சமீபத்தில் கவனித்தோம். தூக்கிப் போடவா என்றவரிடம், பெயிண்ட்டிங் முயற்சித்துப் பார்க்கிறேன் என்றேன். இணையத்தில் தேடினேன். சரியான செயல்முறை கிடைக்கவில்லை. இரண்டு மூன்று முயற்சிகளில் எப்படி செய்வது என்று எங்களுக்குப் பிடிபட்டது. மிகவும் எளிதானது.
தேவையான பொருட்கள்
2. பேப்பர்
3. பெயிண்ட்டிங் ப்ரஸ்
செயல்முறை
1. நமக்குப் பிடித்த ஒரு படத்தை பேப்பரில் வரைந்து கொள்ளவும். கனமான பேப்பரில் செய்தால் நன்றாக இருக்கும். கனமான பேப்பர் இல்லாத்தால் நான் பிரிண்ட் அவுட் எடுக்கப் பயன்படும் பேப்பரில் தான் செய்தேன்.
2. காபிப் பொடியில், தண்ணீர் கலந்து டிகாஷன் தயார் செய்து கொள்ளவும். சற்று கட்டியாக இருக்க வேண்டும். முதலில் நான் மிகவும் தண்ணீராக தயார் செய்து விட்டேன். உபயோகப்படுத்த முடியவில்லை.
3. முதலில் படத்தின் மேல் வரைந்து கொள்ளவும்.
4. படத்தினுள் மிகவும் சிறிய அளவில் எடுத்து, நிரப்பவும்.
5. எங்கெங்கு ஷேடிங் தேவையோ, மீண்டும் அங்கே நிரப்பவும்.
தீஷுவிற்கு வெறும் காபி கலரில் இருந்தது பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். வேறு கலர் சேர்க்கலாமா என்று கேட்டு கொண்டியிருந்தாள். கால் மணி நேரத்தில் ஒரு படம் முடித்து விடலாம்.
மிகவும் தண்ணீரான டிகாஷன் |
இரண்டாவது முயற்சியில் ஒட்டகச்சிவிங்கி |
காயும் முன் தூக்கிப் பார்த்தப் பூக்கள் |
அட... அழகாக இருக்கிறது... பாராட்டுக்கள்...
ReplyDeleteஇப்போதே காஃபி டப்பாவை திறந்து வைக்கிறேன்... ஹிஹி...
உங்க மனைவி பாத்துடாம திறங்க :)
Deleteஹாஹா தனபாலன்! கிரேஸ் சொன்னது முற்றிலும் சரி..
Deleteஅழகாக இருக்கிறது தியானா! பில்டர் காபி பொடியை விட, இன்ஸ்டன்ட் காபி பொடியில் அழகாக வருகிறது..இது என் கண்டுபிடிப்பு :)
ReplyDeleteகலவை தயார் செய்து ஒரு நாள் வைத்துப் பின் உபயோகித்தால் நன்றாக இருக்கும் என்று படித்தேன்..முயற்சித்துப் பார்க்கவில்லை.
காபிப் பொடி விலை மலிவாகவா இருக்கிறது ?
ReplyDeleteத ம 2
சிறிய அளவில் தான் தேவைப்படுகிறது. ஒரு ஸ்பூன் போதும். வருகைக்கு நன்றி
Deleteஅழகா இருக்குங்க. பசங்க பள்லியிலிருந்து வந்ததும் செய்யச் சொல்றேன்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவித்தியாசமான சிந்தனையில் வரைந்த படம் மிக அழகாக உள்ளது.... தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDeleteமிக மிக....அருமையக உள்ளது!
ReplyDeleteநானும் இத் போன்று செய்த அனுபவம் 34 வருடங்களுக்கு முன்....அப்போது மரம் வரைய பிரௌன் கலர் கையில் இல்லை! கைக்கு கற்பனையில் உதவியது இந்தக் காப்பிபொடிய்தான்...இன்ஸ்டண்ட் அல்ல....அரைத்த காப்பி பொடி......வரைந்ததும் காயும் அந்தப் பொடியை ஊதிவிட்டால் போதும்.. கலனர் நன்றாகப் பதியும்.....அது போல் மன்சளுக்கு மன்சள்பொடி.....சிவப்பிற்கு குங்குமம்....இப்படி....வீட்டில் கலர் வாங்கித் தர மறுத்ததால்..திருட்டுத்தனமாக....உபயோகித்து...சோதனை செய்தது....அப்புறம் இன்ஸ்டன்ட்......!!!! இப்போது செய்வதில்லை! ...
நல்ல பகிர்வு!!
-கீதா.....
அழகாய் இருக்கிறது..... ரங்கோலிக்கு தில்லியில் பயன்படுத்திய காபித்தூளை காயவைத்து உபயோகித்தது நினைவுக்கு வந்தது.
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தியானா..
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-5.html
வாழ்த்துகள்! :)
தெரிவித்தற்கு நன்றிகள் கிரேஸ், தனபாலன்!
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் தோழி .தங்களின் தளத்திற்கு
நான் இன்று தான் முதல் முறையாக வந்துள்ளேன் .சிறப்பான ஆக்கங்கள்
கண்டு மனம் மகிழ்ந்தேன் .கவிதைப் பிரியையான நான் தங்களின் நட்பையும் இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கின்றேன் .மேலும் தமிழோடு இணைந்திருப்போம் .தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் .கை வேலை மிகவும் சிறப்பாகவுள்ளது பயனுள்ள தளம் இது சிறந்து விளங்கட்டும் .
காப்பி குடிக்க மட்டுமா என்று அசத்திவிட்டீர்கள்
ReplyDelete