Tuesday, October 28, 2008

பப்புவிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று மூன்றாவது பிறந்த நாள் காணும் சந்தனமுல்லை பப்புவிக்கு தீஷுவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். Wish you a very happy Birthday Pappu!

Tuesday, October 21, 2008

வாத்து பாஷை தெரியுமா?

நான் தீஷீவிற்கு படித்து காட்டுவது போல, அவள் தன் வாத்து பொம்மைக்கு படித்துக் காட்டுகிறாள். எனக்கு ஒண்ணும் புரியல. அது வாத்து பாஷையா இருக்குமோ?
லாப்டாப்பில் இருக்கும் டெஸ்க்டாப்

நல்ல ஆளாப் பார்த்து சந்தனமுல்லை இந்த கேள்வி கேட்டாங்க. எனக்கு தினமும் பார்த்தாலும் என்ன இருக்குனு, நான் System பக்கத்தில இல்லாதப்ப கேட்டா தெரியாது. இன்னைக்கு என் டெஸ்க்டாப்பில இருக்கிறது இது தான்.நான் அழைக்க விரும்புபவர்கள் :1. அமிர்தவர்ஷினிஅம்மா

2. அமுதா

Monday, October 20, 2008

குறும்பு

ரொம்ப நாளா நான் இந்த மாதிரி பதிவு எழுதனும் நினைச்சிட்டு இருந்தேன். ஏனோ எழுதல. தீஷீவின் வளர்ச்சி அவள் வார்த்தைகளிலும், குறும்புகளிலும் தெரிகிறது.1. ரூமில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள். ஹாலிருந்து "தீஷீ வா" என்றேன். பதிலில்லை. மறுபடியும் கூப்பிட்டேன். பதிலில்லை. கூப்பிடுவதை நிறுத்திவிட்டேன். கோபமாக இருக்கேன் என்று நினைத்தாளோ என்னவோ, "அம்மா வா" என்றாள். நான் பதில் சொல்லவில்லை. "ஒரு தடவை சொன்னா கேட்கனும், இங்க வா" என்றாள்.2. "நிவேதிதா(என் தம்பி மகள்) எங்கடா?".


"அவ அவ வீட்டில இருக்கா?" .


சில நொடிகளில், "அவ இந்தியாவில் இருக்கா". என்றாள்.


எனக்கு ஆச்சரியம். "நீ எங்க இருக்க?".


"நான் பார்சிப்பன்னில (எங்க ஊர்) இருக்கேன்".


"உனக்கு பார்சிப்பன்னி பிடிச்சிருக்கா?"


பிடிச்சிருக்கு என்பது போல தலையை ஆட்டினாள்.


"வேற என்ன பிடிக்கும்?"


"டாட்டா போக பிடிக்கும். லைப்ரேரி போக பிடிக்கும்"


என் பெண்ணுக்கு, அவள் விருப்பு வெறுப்பு செல்லத் தெரிகிறது. அவள் வளர்கிறாள்.

எங்களை Busy ஆகியவை

நான் கலர் காகிதங்களை பல வடிவங்களில் வெட்டி வைத்துக் கொண்டேன். தீஷு அதை வடிவங்கள் அடிப்படையில் பிரிக்க வேண்டும். இதை நாங்கள் முன்னமே செய்து இருக்கிறோம். இந்த முறை அவள் விருப்பமாக செய்யாதலால் 5 நிமிடங்களில் எடுத்து வைத்து விட்டோம்.

நாங்கள் Painting செய்து ரொம்ப நாள் ஆகி விட்டது. எங்கள் வீட்டு முன்னாலுள்ள மரத்திலிருந்து Pine cone (தமிழ் பெயர் தெரியவில்லை) உதிர்கிறது. அதை எடுத்து Paint பண்ணக் கொடுத்தேன். 2 நிமிடங்கள் பண்ணினாள். அதற்கு அப்புறம் அவளுக்கு பிடித்த Body paint பண்ண ஆரம்பித்து விட்டாள். 30 நிமிடங்களுக்கு நான் Free.

மீண்டும் ஒரு Tooth pick activity. Tooth pickயால் காகிதத்தில் குத்த வேண்டும். எழுத பயன்படும் இரு விரல்களும் இதில் பயன்படுத்தப்படுவதால், அவை இதன் மூலம் வலுவடையும். காகிதத்தைப் பிடித்துக் கொண்டு ஒரு கையால் அவளால் குத்த முடியவில்லை. காகிதத்தைப் பிடிப்பதற்கு நான் உதவி செய்ய வேண்டியிருந்தது.

Tell the Time with Thomas என்றொரு புத்தகம் எங்களிடம் உள்ளது. Thomas என்பது ஒரு Train இஞ்சினின் பெயர். சில குழந்தைகளுக்கு பிடித்த Cartoon character கூட. அந்த புத்தகத்தில் ஒரு சிறிய கடிகாரம் போன்று எண்கள் மற்றும் இரண்டு முட்கள் இருக்கும். புத்தகத்தில் காலை ஏழு மணிக்கு ஆரம்பித்து மாலை ஆறு மணி வரை ஒவ்வொரு மணி நேரமும் Thomas என்ன பண்ணியது என்று இருக்கும். அந்த டம்மி கடிகாரத்தில் குழந்தைகள் அந்த மணி நேரத்தை வைத்து மணி பார்ப்பதற்குப் பழகி கெள்ளலாம். கடந்த ஒரு வாரமாக தீஷுவிற்கு அந்த புத்தகத்தைத் திரும்ப திரும்ப படித்துக் காட்டியதில் எனக்கும் என் கணவருக்கும் மனப்பாடம் ஆகி விட்டது. Thomasயில் விருப்பமுள்ளதால், முந்தி வாங்கி ஆனால் தீஷீவிடம் கொடுக்காத Thomas train setயை எடுத்து கொடுத்தோம். ஆர்வமாக ஆரம்பித்தாள், ஆனால் எப்பொழுதும் போல எல்லா பொம்மைகளிடம் போலவும் அவள் ஆர்வம் சில நிமிடங்களில் போய் விட்டது.

Friday, October 17, 2008

ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு

தவிர்க்க முடியாத காரணத்தால், என்னால் தீஷுவுடன் நிறைய பொழுது செலவிடவோ, எழுதவோ முடியவில்லை. நாங்கள் முக்கியமாக செய்தவை.


காசுகளை சுத்தம் செய்தோம் (அரசாங்கத்திற்கு எங்களால் முடிந்த உதவி). மிதமான சூட்டிலான வெந்நீரீல் Baking soda கரைத்து, அதில் காசுகளை போட்டுக் கொண்டோம். காசுகளை பிரஷினால் தேய்த்து, இன்னொரு கிண்ணத்திலுள்ள சுத்தமான தண்ணீரில் போட வேண்டும். சுத்தமான தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு துணியில் போட்டு உலர்த்த வேண்டும். விருப்பமாக மூன்று நான்கு தடவைக்கு மேலாக செய்து கொண்டுயிருந்தாள்.


Sound sorting - மாண்டிசோரி முறையில் செய்யும் ஒரு விளையாட்டு. ஒரேவிதமான ஆறு டப்பாக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு இரண்டு டப்பாக்களில் ஒரே அளவு ஒரே பொருளைக் கொண்டு நிரப்ப வேண்டும். உதாரணத்திற்கு - பட்டன், பாசி, பருப்பு, அரிசி முதலியன. சத்தத்தைக் கொண்டு எந்த இரண்டு டப்பாக்களில் ஒரே பொருள் இருக்கின்றன என்று குழந்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். தீஷீவிற்கு பிரிக்கும் அளவிற்கு புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அதனால் மூன்று டப்பாக்கள் எடுத்துக் கொண்டேன். ஒரு டப்பாவில் ஒன்றும் வைக்கவில்லை. ஒன்றில் ஒரே ஒரு பாசி. மற்றொன்றில் நிறைய பாசி. நான் கேட்கும் டப்பாவை(சத்தமில்லை, ஒரு பாசி, நிறைய பாசி) அவள் எடுத்து தர வேண்டும். நன்றாக செய்தாள்.

Friday, October 10, 2008

இது தான் நாங்க பண்ணினோம்

நான் ஒரு முக்கிய வேலையில் இருந்தேன். தீஷு அவளாக பேசிக் கொண்டு இருந்தாள். Triangle, Rectangle போன்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப கேட்க என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். ஒரு kerchief வைத்து விளையாண்டு கொண்டுயிருந்தாள். விரிக்கும் பொழுது Rectangle என்றாள். மடிக்கும் பொழுது Triangle என்றாள். ஒவ்வொரு முறையும் ஒரு சிரிப்பு.தீஷு பிறந்த நாளுக்கு இந்த Pattern Blocks வாங்கினோம். அப்பொழுது அவளுக்கு இதை பண்ணுவதற்கு விருப்பம் இருக்கவில்லை. எடுத்து வைத்து விட்டோம். போன வாரம் மீண்டும் முயற்சி செய்தோம். நன்றாக செய்கிறாள். தாளில் கொடுத்திருக்கும் படத்தை வெவ்வேறு Shapes கொண்டு உருவாக்க வேண்டும்.தீஷு தூங்குகிறாளே என்று அவளுக்காக சில ஒட்ட வேண்டியதை ஒட்டிக் கொண்டு இருந்தேன். எழுந்து விட்டாள். தானும் ஒட்ட வேண்டும் என்றாள். ஒரு வெள்ளைத் தாளில் மற்றொரு வெள்ளைத் தாளை கிழித்து கிழித்து ஒட்ட சொன்னேன். கிழிக்க கஷ்டப்பட்டாள். என்னத்த கிழிச்சனு அவளை கேட்கலாம்.Knobless Cylinder - மாண்டிசோரி சாதன Patterns போன்று, நான் ஒரு பேப்பரில் வரைந்து கொண்டேன். இரண்டு copies print out எடுத்துக் கொண்டேன். ஒரு copyலுள்ள வட்டங்களை வெட்டி எடுத்து, அந்த வெட்டி எடுத்த வட்டங்களை, தீஷு மற்றொமொரு copyயில் சரியான அளவு வட்டங்களுடன் பொருத்த வேண்டும். நன்றாக செய்தாள்.

Wednesday, October 8, 2008

சும்மா டைம் பாஸ்

ஏற்கெனவே செய்த அல்லது விளையாண்ட விளையாட்டுகளை விளையாண்டு கொண்டுயிருந்தோம். வேற ஏதாவது செய்யலாம் அம்மா என்றாள். தோழி தீஷுவிற்கு clip, hair band, rubber band etc.. இருந்த ஒரு பெட்டியை கிப்ட் கொடுத்திருந்தாங்க. தீஷுவோ இப்ப மொட்டை போட்டுயிருக்கா. முடி வளர்வதற்கு 2 மாதங்களாகும். Band வைக்க ஏதுவான அளவிற்கு அடர்த்தியான முடியும் அவளுக்கு கிடையாது. அதனால் ரப்பர் பாண்டை எடுத்து ஒரு அட்டை குழாயில் மாட்டச் சொன்னேன். கிட்டத்தட்ட 4 dozen ரப்பர் பாண்டுகளை மாட்டி விட்டாள். அடுத்து ஒரு ப்ளூ, ஒரு ரோஸ் என்று மாற்றி மாற்றி மாட்டினாள். முப்பது நிமிடங்களுக்கு டைம் பாஸ் ஆனது. கைக்கும் வேலை கொடுத்தது போலானது.

Tuesday, October 7, 2008

வெட்டுதல் + கூட்டுதல்கத்திரிக்கோலை கை கண் ஒருங்கிணைப்பை (Eye hand Co-ordination) அதிகரிக்கப் பயன்படுத்தலாம். தீஷு அவ்வப்பொழுது பயன்படுத்துவாள். ஆனால் நேராக வெட்டத் தெரியாது. கொஞ்சம் வித்தியாசப்படுத்தவும், நேராக பேப்பரை வெட்டப் பழக்கவும், நான் பேப்பரை Strip Stripபாக வெட்டிக் கொடுத்தேன். தீஷு வெட்டின பேப்பரை வெட்ட கஷ்டப்பட்டாள். ஆகையால் மீண்டும் முழு பேப்பரையே கொடுத்து வெட்ட சொன்னேன். 30 நிமிடங்கள் வரை வெட்டிக் கொண்டு இருந்தாள்.

அடுத்ததாக அவளை வெட்டினப் பேப்பரை கூட்டி சுத்தம் செய்ய பழக்கினேன். எழுதும் குச்சியினால் ஒரு வட்டம் போட்டு அதில் பேப்பர் குப்பையை வைக்க சொன்னேன். சுலபமாக செய்து முடித்து விட்டாள். பின் முறத்தில் அள்ள சிறிது கஷ்டப்பட்டாள். சில நேரங்களில் கையை பயன்படுத்தி பேப்பரை எடுத்து முறத்தில் போட்டாள். முறத்தில் உள்ளதை குப்பைத் தொட்டியிலும் போட்டு விட்டாள்.


முடித்தவுடன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம், பெருமிதம்.

Monday, October 6, 2008

Picture Matching

இந்த விளையாட்டை நாங்கள் முன்பே செய்து இருக்கிறோம். படங்களை நான் இந்த websiteயிலிருந்து download செய்து கொண்டேன். ஒரு படத்தை ஒரு அறையிலும் அதே படமுள்ள மற்றொரு அட்டையை கிட்டத்தட்ட 15 அடி தூரமுள்ள மற்றுமொரு அறையிலும் வைத்து விட்டேன். படத்தை காட்டியவுடன் படத்தை மனதில் பதித்து அடுத்த அறைக்குச் சென்று மற்றொரு படத்தை எடுத்து வர வேண்டும். தீஷு 16 படங்களையும் சரியாக செய்தாள். அதே போல் கலர் அட்டைகளையும் இதே முறையில் சரியாக செய்தாள்.

எங்கள் கொலு

அட்டைப் பெட்டிகளைக் கொண்டு ஐந்து படிகள் கட்டி ( தேத்தி), கொலு வைத்துள்ளோம். தீஷுவிற்கு விவரம் தெரிந்து இது தான் முதல் கொலு. பொம்மைகளை எடுத்து விடுவாளோ என்று பயந்தோம். ஆனால் எடுக்கவில்லை. கொலுவில் ஒரு பொம்மை Dinning table உள்ளது. அதில் தான் உட்கார வேண்டும் என்றாள். அது பொம்மைக்கு என்றவுடன், அவளுடைய இரண்டு பொம்மைகளைக் கொண்டு வந்து Chairயில் உட்கார வைத்து விட்டாள். தினமும் காலையில் எழுந்தவுடன், கொலு முடிஞ்சிடுச்சி என்பாள் அவள் பொம்மையை எடுப்பதற்காக.

Thursday, October 2, 2008

Spooning ஐஸ்

முன்பே ஐஸ் வைத்து விளையாடி இருக்கிறோம். இப்பொழுது ஐஸை ஸ்பூன் மூலம் ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். ஐஸ் ட்ரையில் வைப்பதற்கு முன்னால், தீஷுவை விட்டு சிறிது Food colouring சேர்க்க வைத்தேன். முதலில் ஒரு பெரிய கரண்டியால் மாற்ற சொன்னேன். எளிதாக செய்து முடிக்கவே, ஸ்பூன் மூலம் மாற்ற செய்தேன். முதலில் கஷ்டப்பட்டாலும் பிறகு பழகி விட்டாள். தண்ணீர் ஊற்றி, மிதக்கும் ஐஸை மாற்றினோம். பிறகு கலர் மூலம் பிரித்தோம். Fun activity. இப்பொழுது எல்லாம், என்ன பண்ணலாம் என்றால், தண்ணி வச்சி விளையாடலாம் அம்மா என்று பதில் வருகிறது.

Pouring activities - ஒருங்கினைப்புக்கு

மாண்டிசோரியில் Pouring activities - ஒரு குடுவையிலிருந்து மற்றொரு குடுவைக்கு மாற்றுதல் Co-ordination + concentration மேம்படுத்த செய்யப்படுகிறது. அதில் இரண்டு வகை உள்ளது - Dry pouring (ஈரமில்லாத பொருட்களை ஊற்றுதல்), Wet pouring (ஈரமுள்ள பொருட்களை ஊற்றுதல்). முதல் படி - Dry pouring - அதற்கு அரிசி, பட்டாணி போன்றவற்றை உபயோகப்படுத்தலாம். ஊற்றும் பொழுது கொட்டமல் ஊற்ற வேண்டும். தீஷு ஒரளவுக்கு Dry pouring செய்யப் பழகி விட்டதால் நாங்கள் Wet pouring செய்தோம்.ஒரு டம்ளரிலிருந்து மற்றொரு டம்ளருக்கு தண்ணீரை மாற்ற வேண்டும். இரண்டு மூன்று அளவுகளில் டம்ளர் கொடுத்தேன். ஒரு டம்ளர் நிறைந்து விட்டால் நிறுத்தப் பழகவும், வெவ்வேறு அளவு டம்ளர்கள் வெவ்வேறு அளவு தண்ணிர் கொள்ளும் போன்றவற்றை விளக்குவதற்காக. கீழே கொட்டும் தண்ணீரை துடைக்க வேண்டும் என சொன்னவுடன், ஒவ்வொரு சிறு சிந்தளுக்கும், துடைத்துக் கொண்டு இருந்தாள். மிகவும் ரசித்து தண்ணீர் தீரும் வரை செய்து கொண்டுயிருந்தாள்.

நீளம் மூலம் பிரித்தல்

நான் dowel எனப்படும் மரக்குச்சிகளை வாங்கி வந்து 5, 10, 15, 20, 25 மற்றும் 30 cm என வெட்டிக் கொண்டேன். ஒவ்வொரு அளவிலும் 2 குச்சிக்கள் வெட்டிக் கொண்டேன். நீளத்தை வைத்துப் பிரிக்க வேண்டும். அதாவது ஒரே நீளமுள்ள இரு குச்சிகளையும் சேர்க்க வேண்டும். தீஷுவிற்கு புரிந்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் பண்ணவில்லை.

காசுக்களை உண்டியலில் போடுதல் கைகளுக்கான நல்லப் பயிற்சி. 25 காசுகள் எடுத்துக் கொண்டோம். தீஷீ மிகவும் விருப்பமாக திரும்ப திரும்ப நான்கு தடவைக்கு மேல் செய்து கொண்டு இருந்தாள்.

Wednesday, October 1, 2008

எண்ணுவதற்கு முன்னால்

தீஷுவிற்கு 1,2,3... சொல்லத் தெரியும். ஆனால் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பிருப்பது தெரியுமா என்று தெரியவில்லை. ஆகையால் 1க்கு ஒரு வட்டம், 2க்கு இரண்டு வட்டங்கள் என 10 வரை ஒரு வார்டு டாக்குமெண்ட் செய்து, அதில் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கல்லை வைக்க சொன்னேன். ஒவ்வொரு முறையும் கல்லை வைக்கும் பொழுது எண்ண வேண்டும். டாக்குமெண்டை Numerals download செய்து கொள்ளலாம்.

தீஷு சரியாக செய்தாள். எனக்கு அவள் கல்லை வைப்பதை விட கண்ணாடி கப்பிலிருந்து கல்லை எடுக்கும் சத்தம் தான் அவளுக்கு பிடித்திருந்தாக தோன்றியது.

தீஷுவிற்கு 1 முதல் 10 வரை சரியாக சொல்லத் தெரியும். 11 முதல் 20 வரை தெரியாது. ஆனால் 21 முதல் மறுபடியும் 1 முதல் 9 வரை கடைசியில் திரும்பி வருவதைப் புரிந்து கொண்டாள். அதை மீண்டும் சரியாக சொல்வாள். 30 நாம் சொல்ல வேண்டும். 31 முதல் 39 வரை சொல்வாள். இது போல் 99 வரை சொல்லத் தெரிகிறது. புரிந்து விட்டால் எல்லாமே சுலபம் தான்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost