Tuesday, September 30, 2008

எழுத்துப் பயிற்சி

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால், நான் எழுதுவதைப் பார்த்து தீஷுவும் எழுத விரும்பினாள். எனக்கு இரண்டு வயது குழந்தைக்கு எழுத சொல்லித் தர இஷ்டமில்லை. ஆனால் அவள் பேப்பரில் ஏதாவது எழுதி விட்டு 'A' எழுதி இருக்கிறேன், 'B' எழுதி இருக்கிறேன், கரெக்டா என்பாள். மாண்டிசோரி அம்மையின் கூற்று "Follow your child". எழுத சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன். முதலில் மாண்டிசோரி முறையில் உப்புத் தாளில் எழுத்துக்களைச் செய்ய முடிவு செய்தேன்.




மாண்டிசோரி முறையில், உப்புத் தாளில் செய்த எழுத்துக்களை கையால், தடவ செய்து, எழுத்துகளை எழுதும் முறையை விளக்க வேண்டும். ஆனால் உப்புத் தாளில் செய்வது கடினம் என்று எண்ணி, Feltயில் எழுத்துக்களைச் செய்து, அட்டைகளில் ஒட்டிவிட்டேன்.

நான் செய்ய எடுத்தக் கொண்ட நேரளவு கூட தீஷு, அதை உபயோகப்படுத்தவில்லை. மாண்டிசோரி முறையில் மண்ணில் எழுதப் பழக்கலாம் என்று எண்ணினேன். மண்ணிற்கு பதில் ரவையை ஒரு தட்டில் கொட்டி எழுத செய்தேன். அதை சில நேரங்களில் பயன்படுத்துகிறாள்.
ஆனால் அவளுக்கு பேனாவில் எழுதுவதற்கு தான் பிடித்திருக்கிறது. இப்பொழுது 12 முதல் 15 எழுத்துகள் வரை சரியாக எழுதுகிறாள்.

2 comments:

  1. நிறைய கற்றுக் கொள்ள இருக்குங்க உங்க பதிவுல. நானும் என் சின்ன பெண்ணிற்கு சிலவற்றை செய்து பார்க்கிறேன்...

    ReplyDelete
  2. நன்றி அமுதா. சின்ன பெண்ணுடன் சேர்ந்து செய்து பாருங்கள். ஒரு வேலையை முடித்தவுடன் அவங்க முகத்தில ஒரு சந்தோஷம் இருக்கும் பாருங்க, அதற்காகவே நிறைய செய்யத் தோணும்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost