தீஷுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள் பல. இந்த முறை பிறந்தநாளைச் சொந்தங்களுடன் கொண்டாட விரும்பி மதுரைக்குச் சென்றிருந்தோம். தீஷு தன் பிறந்தநாளை ஒரு மாதம் முன்பிலிருந்தே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டாள். தினமும் தனக்கு இன்று தான் பிறந்தநாளா என்பாள். மே 8 என்று சொல்லிக் கொடுத்தவுடன், யார் எப்பொழுது பிறந்த நாள் என்று கேட்டாலும் மே 8 என்று சொல்லி எதிர்பார்த்திருந்தாள். தன் பிறந்தநாளுக்கு சுடிதார் தான் வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.
மே 8 அன்று காலையில் மதுரை சென்று அடைந்தோம். முதலில் எங்களை வரவேற்றது வெயில். அன்று தான் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் என்று நினைக்கிறேன். எதைத் தொட்டாலும் சூடு. அங்கே பிறந்த வளர்ந்த எங்களுக்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. அன்று காலையே திருப்பரங்குன்றம் சென்றோம். அன்று பெளர்ணமி என்பதால் பயங்கரக் கூட்டம். சாமியைப் பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நிதானமாக சென்று வந்த தினங்கள் ஞாபகத்திற்கு வந்து சென்றன.
மே 8 வெள்ளி என்பதால், அலுவலகத்திலிருந்து பல சொந்தங்களுக்கு வர முடியாத காரணத்தால், மே 9 அன்று விழா வைத்திருந்தோம். கேக் வெட்டியப்பின் விளையாட என நான்கைந்து விளையாட்டுகள் யோசித்து வைத்திருந்தோம். ஆனால் நேரமின்மை காரணமாக ஓரிரண்டு மட்டுமே விளையாட முடிந்தது. இந்த முறையேனும் அனைவரின் வாழ்த்துகளையும் தீஷு பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
மே 10 அன்று மதுரை அருகிலுள்ள பிள்ளையார்பட்டியில் தீஷுவிற்கு முடி இறக்கினோம். அவள் முறைக்காகக் காத்திருந்த பொழுது தன் முறை எப்பொழுது வரும் என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டேயிருந்தாள். ஆனால் சென்று அமர்ந்தவுடன் அழ ஆரம்பித்துவிட்டாள்.
இவ்வாறு முதல் மூன்று நாட்களுக்குச் சுற்றியதோடு சரி. அதன் பின் இரண்டு நாட்களுக்கு வெளியே வர விடவில்லை வெயில். படித்தப் பள்ளி, கல்லூரி சென்று பார்க்க விருப்பம் உள்ளது. அடுத்த முறையேனும் வெயில் இல்லாத நாட்களில் சென்று மதுரையைச் சுற்றி வர வேண்டும்.
Games to play with 3 year old without anything
2 years ago
வாழ்த்துகள் தீஷூ! பிறந்தநாள் உடையில் கலக்கலா இருக்காங்க! :-)
ReplyDelete//தன் பிறந்தநாளுக்கு சுடிதார் தான் வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.//
:-)
அந்தப் படத்தில் தீஷுவைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? பெற்றோர் விரும்பம் கேட்காமல் மற்ற குழந்தைகளின் படங்கள் வலையேற்ற வேண்டுமே என்ற காரணத்தால் நல்ல படங்களைப் போட முடியவில்லை.
ReplyDeleteஅந்த சுடிதார் குழந்தை தீஷுவா நம்பவே முடியல!!!
ReplyDeleteபிறந்தநாளுக்கு சுடிதார் தான் வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.//
அமித்துவுக்கு கூட இப்பவே தன் ட்ரஸ்ஸின் மீதான விருப்பம் ஆரம்பித்துவிட்டது...
இந்த போஸ்டை எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். belated b'day wishes to dear Dheekshu
ReplyDelete