Friday, May 29, 2009

உதவுங்களேன்

தீஷுவிடம் சேட்டைகளும் விஷமங்களும் குறைவு. அவள் செய்வது நமக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டால் போதும், பொதுவாக அதைச் செய்யமாட்டாள். ஆனால் இப்பொழுது சில நாட்களாக அவளின் சில செயல்களில் மாற்றங்கள் கொண்டுவர முயல்கிறோம். ஆனால் அவளிடம் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. சில பழக்கங்களில் நாட்கள் போனால் மாற்றம் வரும் என்றாலும் வருமா என்ற சந்தேகமும் உள்ளது.

1. நாங்கள் தீஷுவை டா போட்டுக் கூப்பிடுவது வழக்கம். இப்பொழுது அந்தப்பழக்கம் அவளுக்கு வந்து விட்டது. என்னிடம் வந்து ஒரு தோழி போல் என்னடா ஆச்சி என்பது அழகாய் இருந்தாலும், தன் தந்தையை கவுண்டமணி தோரணையில் டேய் அப்பா எனும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. சொல்லிப் பார்த்தாகி விட்டது. அதுவும் பிறர் முன்னிலை அழைக்கும் பொழுது இன்னும் கஷ்டமாக இருக்கிறது. நானும் அவளை டா போட்டுக் கூப்பிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அவளிடம் மாற்றம் இல்லை.

2. அனைவரையும் மரியாதை இல்லாமல் வா போ என்றே கூறுவது. அவளுக்கு மரியாதைப் பற்றியெல்லாம் தெரியாது என்றாலும் வயதானோரை அழைப்பது கஷ்டமாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் முன்னிலையிலேயே மரியாதையாகச் சொல் என்றால் மாட்டேன் என்கிறாள். அது இன்னும் கஷ்டம்.

3. தீஷு யாரிடமும் அதிகமாக பழக மாட்டாள். அதுவும் புதியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவளிடம் கேள்வி கேட்டால், அவள் பதில் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம். மிகச் சில நேரங்களில் பதில் சொல்லுவாள். இல்லையேல் நான்கைந்து முறை கேட்டப்பின் வேறு வழி இல்லாமல் நான் பதில் சொல்லுவேன். இப்பொழுது இந்தப் பழக்கம் மிகத் தெரிந்தவர்களிடமும் தொடர்கிறது. நான் என் கணவர் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்கிறாள். பிறர் கேட்டால் அவர்கள் முகத்தையேப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். அவர்கள் பேசுவது புரியவில்லையா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் கேள்வியை நான் திரும்பக் கேட்டால் என் முகம் பார்த்து பதில் வருகிறது.

4. அவளுடைய பொம்மையைக் குளிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கையிலேயே வைத்திருக்கிறாள். அந்தப் பொம்மையைத் துவைக்கவும் முடியாது. வாங்கும் பொழுதே அது தான் வேண்டும் என்று வாங்கி விட்டாள். ஒரு முறை என் அம்மா துவைத்தார்கள். ஆனால் அது அடிக்கடி துவைத்தால் தாங்காது. அதில் எத்தனை கிருமிகள் இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது. மேலும் அதை வெளியே எடுத்துச் செல்லும் பொழுது அழுக்கு பொம்மையைப் பார்க்க அசிங்கமாகவும் இருக்கிறது. வேற பொம்மை மாற்றவும் விட மாட்டேன் என்கிறாள். ஒளித்து வைத்தாலும் அவளுக்குத் தெரிந்து விடுகிறது.

தீர்வு சொல்லுங்களேன்.

10 comments:

  1. This too shall pass! தானா மாறிடும்-ன்னு எனக்கு எல்லோரும் சொன்னதை உங்களுக்கும் சொல்றேன்! ;-)

    1. எனக்கு வேற மாதிரி பிரச்சினை இருந்துச்சு..டி போட்டு பேசறது, ஆனாஅ எங்க வீட்டில் அந்த பழக்கம் இல்லாதபோதும்! ஆனா இப்போ அப்படி இல்ல..பப்பு அதை மறந்துட்டா. நாங்க அவளை வாங்க போங்க-ன்னு சொல்ல ஆரம்பிச்சோம், அவளும் அதே ரிபீட் செஞ்சா! அதுக்காக ஓரேயடியா மாறிட்டான்னு கிடையாது, ஆனா டி போட்டு பேசறது இல்ல!


    2. வா போ - அது இப்பவும் இருக்கு. ரொம்ப பாசமா ஆகிட்டா வாங்க/போங்கதான்!

    3. பள்ளிக்குச் சென்றபின் பரவாயில்லை. (ஆனால் இதுகுறித்து மிகவும் கவலைப்பட தேவையில்லை என்பது என் கருத்து. )

    தீஷூ சமத்து!! இப்போ தீஷூ வெர்ஷனைத்தான் நான் கேக்கணும்! என்ன சொல்றீங்க?!! ;-))

    ReplyDelete
  2. இதெல்லாம் தானா மாறிடும் தான் நெனைக்கிறேன்.

    ஏன்னா நீங்க சொல்ற இதே மாதிரி பழக்கங்கள் நிறைய குழந்தைகளிடமிருப்பதை நான் பார்த்திருக்கேன். ஸ்கூல் போக ஆரம்பிச்சவுடனே மாறிடுது.

    வர்ஷினி இப்போ அவங்க தாத்தாவை டேய் தாத்தா என்று கூப்பிட ஆரம்பித்திருக்கிறாள்.

    தப்பும்மா என்று சொல்லும் போது சிரிக்கிறாள்.

    நாம் எவ்வளவு எப்படி பேசினோம் என்று நமக்குத் தெரியாது, ஆனால் நாட்பட நாட்பட மாற்றம் வரும்.

    ReplyDelete
  3. அதே போல் இன்னொரு பொம்மை வாங்கிக் கொடுங்கள் அப்போது எப்படி என்று பார்ப்போம் (ஏதோ எனக்கு தெரிந்த ஐடியா!) :))


    வரும் பின்னூட்டங்கள் எனக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உதவும்.. :)))

    பொழிலன் இப்போது தான் வா என்று அழைக்கக் கற்று இருக்கிறான்... சிறு குழந்தை அதனால் எதுவும் கண்டுகொள்ளவில்லை நான்...

    தாத்தா வா என்றும், ஆச்சி வா, அம்மா வா என்றும் அழைக்கிறான் எல்லாரையும் ஏய் என்று வேறு கூப்பிடுகிறான்.. அப்பாவை மானிட்டரில் பார்க்கும் போது அப்பா வா என்கிறான்..

    இது பரவாயில்லையா? நாளடைவில் மாறிவிடும் தானே?

    ReplyDelete
  4. நன்றி முல்லை. எங்க அம்மாவும் இதெல்லாம் மாறி விடும் என்றார்கள். ஆனால் நானும் சில நாட்களாக முயற்சித்தும் மாறாததால் தான் வருத்தப்படத் தோன்றுகிறது.

    //ரொம்ப பாசமா ஆகிட்டா வாங்க/போங்கதான்!
    //
    சமத்து பப்பு!!! தீஷு ரொம்ப பாசமாகிட்டா ஒரே டா மயம் தான்

    I am sure!! தீஷு வெர்ஷனில் என்னைப் பற்றி நிறைய கம்பிளைண்ட் இருக்கும்.

    ReplyDelete
  5. //ஏன்னா நீங்க சொல்ற இதே மாதிரி பழக்கங்கள் நிறைய குழந்தைகளிடமிருப்பதை நான் பார்த்திருக்கேன். ஸ்கூல் போக ஆரம்பிச்சவுடனே மாறிடுது.
    //

    எனக்கும் நம்பிக்கை இருக்கு அமித்து அம்மா. ஆனால் அவள் எந்த விசயத்தையும் இத்தனை தடவைகள் அவளுக்குத் தெரிவிக்க வைத்ததில்லை. அதனால் தான் எழுதினேன். நன்றி உங்கள் கருத்துக்கு!!!

    ReplyDelete
  6. //அதே போல் இன்னொரு பொம்மை வாங்கிக் கொடுங்கள்//

    அது மாதிரி இங்கு கிடைக்கவில்லை ஆகாயநதி!! இல்லாவிட்டால் என்றோ மாற்றிவிட்டிருப்பேன்.

    //இது பரவாயில்லையா? நாளடைவில் மாறிவிடும் தானே?
    //

    பொழிலன் குழந்தை ஆகாயநதி.. அவன் பேச ஆரம்பிக்கும் பொழுதே இப்படி பேசு அப்படி பேசு என்றால் அவனுக்கு discouragingஆ இருக்கும். ஆனால் தீஷு மாதிரி மூன்று வயது குழந்தைக்கு மரியாதைக் கொடுக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
    நன்றி உங்கள் கருத்துக்கு!!!!!

    ReplyDelete
  7. டிஸ்கி: இது ஜாலி பின்னூட்டம், காண்டாவக் கூடாது:):):)

    இங்க சந்தனமுல்லை, அமித்து அம்மால்லாம் சொல்லிருக்கறதை நம்பாதீங்க. எங்கம்மா கூட இப்டித்தான் நெனச்சு விட்டுடாங்க. ஆனா, பாருங்க நான் எப்டி தறுதல கணக்கா தாண்டவமாடுறேன்னு:):):)

    ReplyDelete
  8. சரி தான் தீஷூ அம்மா... அதனால் தான் நான் கண்டுகொள்வதில்லை... நீங்கள் எல்லாரும் புலம்புவதைப் பார்த்து தான் கொஞ்சம் பயந்துவிட்டேன் ஒரு வேளை இப்போதே பழக்கிவிட வேண்டுமோ என்று...

    நன்றி தீஷு அம்மா! :)

    ReplyDelete
  9. என்ன rapp பண்றது? நம்ம நினைக்கிறத்தெல்லாம் நடந்திடுமா? முன்ன பின்னத் தான் இருக்கும். பாவம் உங்க அம்மா.. அவுங்க நினைச்சது நடக்கல. விதி யாரை விட்டது?

    ReplyDelete
  10. எல்லாம் தானா சரியாகிவிடும். நாம் பிறரிடம் மரியாதையாகப் பேசுவதைக் கண்டே அவர்களும் மாறிவிடுவார்கள். பழகுவது எல்லாம் பள்ளி சென்ற பின் அவர்கள் குணத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். இந்த துணி பிரச்னையும் அப்படி தான். முன்னாடி எல்லாம் யாழ் தலையணை உறையைத் துவைக்க விட மாட்டாள். இப்ப எல்லாம் பாரு கிருமி இருக்கு , துவைத்து தருகிறேன் என்றால் புரிந்து கொள்கிறாள். எனவே நீங்கள் சொல்லிக் கொடுங்கள்... மாறவில்லை என்று கவலை வேண்டாம்... மாறிவிடுவாள்

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost