கடந்த ஒரு மாதமாக நான் என் கணவரிடம் சொல்வது - வாரயிருதியில் தீஷுவுடன் ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி செய்ய வேண்டும் என்று. "Day with Daddy" என்று அதற்கு நான் பெயரும் வைத்து விட்டேன். அவர் ஒத்துக் கொண்டாலும், தீஷுவின் உடல் நலக்குறைவு, வாரயிறுதி வேலைகள் போன்றவற்றால் அவர்களால் செய்ய முடியவில்லை. கடந்த வாரயிறுதியில் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், இரண்டு வேலைகள் செய்து முடித்து விட்டார்கள்.
ஃப்ரிட்ஜ் வந்த அட்டைப்பெட்டியை தீஷுவிற்கு ஒரு சிறிய வீடு போல் வடிவமைத்துத் தந்தார். செய்யும் பொழுது இது என்ன பெரிய விஷயமா என்று எனக்குத் தோன்றியது. ஆனால் தீஷுவிற்கு மிகவும் பிடித்து விட்டது. தன் விளையாட்டுப் பொருட்களை வீட்டிலுள் எடுத்துச் சென்றே விளையாடுகிறாள். வீடு தயார்யானவுடன் தீஷு கேட்ட முதல் கேள்வி "வீட்டுக்கு எங்கிருந்து கரெண்ட் வரும்?".
பெங்களூரில் இப்பொழுது அடிக்கடி மழை பெய்கிறது. அப்பாவும் பெண்ணும் மிளகாய், முள்ளங்கி போன்ற செடிகளை வைத்திருக்கிறார்கள் (இது நாங்கள் வசிக்கும் வீட்டின் முன், அட்டை வீட்டில் இல்லை). முள்ளங்கி வேர் மூலம், மிளகாய் விதையிலிருந்து வரும் என்பது தீஷுவிற்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். குழி தோண்டுவது மட்டும் தான் தந்தையின் வேலை (அதிலும் பாதி தான் தான் செய்வேன் என்றாள்). மிளகாய் உரித்து விதை எடுத்தது, விதையைத் தூவியது, குழியை மூடி தண்ணீர் விட்டது என அனைத்தையுமே தீஷுவே செய்தாள். இருவரும் தண்ணீரும் விடுகின்றனர். செடிகளின் வளர்ச்சியைத் தெரிவிக்கிறேன்.
Games to play with 3 year old without anything
2 years ago
/*செடிகளின் வளர்ச்சியைத் தெரிவிக்கிறேன்.
ReplyDelete*/
சொல்லுங்க... தீஷு எப்படி தோட்டம் மீது அக்கறையாக இருக்கிறாள் இன்று சொல்லுங்கள்
ஓ .. குட்.. வீட்டுல காத்துவரலன்னா ... கரண்ட் சரியா குடுக்காத அரசாங்கம்ன்னு கொடிபிடிப்பாளா தீஷு..
ReplyDelete:)
கலக்கல்! தீஷூவின் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்! அப்புறம் day with daddy நல்ல ஐடியா! :-)
ReplyDeleteகண்டிப்பா சொல்றேன் அமுதா.
ReplyDeleteஆமா முத்துலெட்சுமி. செய்தாலும் செய்வாள். டிம் லைட்டைப் போட்டுவிட்டு, அட்டை வீட்டிலுள் சென்று தன் பொம்மையைத் தூங்க செய்கிறாள்.
நன்றி முல்லை.
அழகான பதிவு + புகைப்படங்கள் !!
ReplyDelete