தீஷுவின் விளையாட்டுப் பொருட்களில் அளவில் மட்டும் வித்தியாசம் உள்ள ஆனால் பார்ப்பதற்கு ஒன்று போலுள்ளப் பொருட்களை இரண்டு இரண்டாக எடுத்துக் கொண்டோம். எடுத்துக் கொண்டவை : ஆப்பிள், மரம், திராட்சை, கார், காரெட், எலுமிச்சை, ஒட்டகச்சிவிங்கி போன்றவை. அனைத்தையும் ஒரு தட்டில் வைத்திருந்தேன். முதலில் தட்டிலிருந்து ஒன்று போலுள்ள இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எது சிறியதோ அதை இடப்பக்கத்தில் வைக்க வேண்டும். பெரியதை வலப்பக்கத்தில் வைக்க வேண்டும். தீஷு விருப்பமாக செய்தாள். நான் போட்டோ எடுப்பதற்குள் முடித்துவிட்டாள். இதன் மூலம் ஒன்று போல் உள்ளவற்றைப் பிரித்தல் (Classification), அளத்தல் (Size measuring & Sorting) அறியப்படுகிறது.
நான்கைந்து நாட்களுக்கு முன்னால் நானும் தீஷுவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதற்கோ உயிருள்ளவை (Living), உயிரற்றவை (Non-Living) பற்றிச் சொன்னேன். அவளுக்கு அதில் விருப்பமிருந்ததால் கேள்விகள் பல கேட்டுக் கொண்டேயிருந்தாள். முதலில் நான் அவளுக்கு எளிதாகப் புரிய வைக்க உயிருள்ளவை பேசும், உயிரற்றவை பேசாது என்றேன். அவளும் வரிசையாக டேபிள், சேர், புக், நாய் என்று கேட்டுக் கொண்டே வந்தாள். மரம் என்றவுடன் உயிருள்ளது என்றேன். அது பேசாது என்றாள். ஆனால் அது வளரும் என்றேன். சேர், புக்கெல்லாம் வளராது என்றேன். அவளுக்குப் புரிந்தது போலிருந்தது. அவளின் புரிதலை அறிய, எடுத்துக் கொண்ட பொருள் உயிருள்ளதா, அற்றதா என்று சொல்ல வேண்டும் என்றேன். முதல் செய்முறைக்கு உபயோகப்படுத்திய பொருட்களையே எடுத்துக் கொண்டோம். வரிசையாக கேட்டுக் கொண்டே வந்தேன். அனைத்தையும் சரியாக சொன்னாள். இதேப் போல் பல முறையில் பிரிக்கலாம். உதாரணத்திற்கு: விலங்குகள் & தாவிரங்கள், காந்தப் பொருட்கள் & இல்லாதவை, கரைபவை & கரையாதவை, மிதப்பவை & முழ்குபவை போன்றவை. ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.
நல்ல பதிவு! சென்ற பதிவில் சல்வார் தீஷூ கலக்குகிறாள் என்று சொல்லி முடிப்பதற்கும் மொட்டையாக்கி விட்டீர்களே இந்த பதிவில்!! :-)
ReplyDeleteஉயிருள்ளது/உயிரற்றது - சில சமயங்களில் புரிந்துக் கொண்டதுப் போல் பேசுவாள் பப்பு, சில சமயங்களில் குழப்பம் தான்! (பறவை/ப்ளேன்!!)
தீஷூ வை பள்ளியில் சேர்த்தாயிற்றா?!
ஆமாம் முல்லை. மதுரைக்குப் போயிருந்த பொழுது மொட்டை போட்டுவிட்டோம். பள்ளிக்குச் செல்லும் முன் சிறிது முடி வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில். சேர்த்தாகிவிட்டது முல்லை. மாண்டிசோரி பள்ளி.
ReplyDeleteகற்றுக்கொண்டேன்.
ReplyDeleteநல்ல பதிவு! சென்ற பதிவில் சல்வார் தீஷூ கலக்குகிறாள் என்று சொல்லி முடிப்பதற்கும் மொட்டையாக்கி விட்டீர்களே இந்த பதிவில்!! :-)
வழிமொழிகிகிறேன்