தீஷுவிற்கு இன்று கத்தி உபயோகப்படுத்தச் சொல்லிக் கொடுத்தேன். மொட்டைக் கத்தி ஒன்று கிடைத்தது. அதை வைத்து வாழைப்பழம் வெட்டப்பழக்கினேன். இதற்கு முதலில் தோலை உரிக்கச் செய்தேன். பின்னர் கத்தியை எவ்வாறு பிடிக்க வேண்டும் என்பதை செய்து காட்டினேன். விருப்பமாக வெட்டினாள். "கத்திக்கிட்ட கை கொண்டு வரக்கூடாது", "தோல் உரித்து நானே தருவேன்", "கட் பண்ணினதை எடுத்து பத்திரத்தில போடு" - இவை அனைத்தும் நான் காய் வெட்டும் பொழுது அவளிடம் சொல்வது. அவை அனைத்தும் எனக்குத் திரும்ப சொல்லப்பட்டது. வெட்டியப்பின் கத்தியையும், சாப்பிங் பேடையும் கழுவி வைக்கச் சொன்னேன். செய்தாள்.
தீஷு தண்ணீர் ஊற்றுவது, அளந்து ஊற்றுவது முதலியவற்றை விரும்பமாகச் செய்வதால் தினசரி வாழ்வில் அவை எவ்வாறு உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை உணர்த்த சாதம் வைக்கப் பழக்கலாம் என்று எண்ணினேன். அதற்கு முதல் படியாக குக்கர் மூடவும் திறக்கவும் சொல்லிக் கொடுத்தேன். அவளுக்கு மூடிவதற்கு சிரமமாக இருக்கிறது. எளிதாக திறக்கிறாள். குக்கரைக் கொடுத்தவுடன் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் தன் கற்பனை விளையாட்டுக்களை ஆரம்பித்து விட்டாள். இன்னும் அரிசியாத்தான் இருக்கு. குக்கர் சூட இருக்கு தொடாத போன்றவை. விரும்பமாகச் செய்தாள்.
பன்சிங் மிஷின் உபயோகப்படுத்தச் செய்து காட்டினேன். எவ்வாறு பேப்பரை வைக்க வேண்டும் என்பதிலிருந்து ஆரம்பித்தேன். ஆர்வத்தைக் கூட்டுவதற்காக பேப்பரை முதலில் இரண்டாக மடித்து பன்ச் செய்தோம். முடித்தப்பின் பேப்பரை விரித்துக் காட்டினேன். அடுத்து அடுத்த பேப்பரை மூன்று முறை மடித்து செய்யச் சொன்னேன். முடிவில் அவளுக்கு பன்ச் செய்வதை விட பேப்பர் மடிப்பதில் விருப்பமாகி விட்டது. கிட்டத்தட்ட பேப்பரின் ஓரங்களை இணைத்து மடிக்கிறாள். அரை மணி நேரம் வரை வெவ்வேறு வடிவங்களில் மடித்துக் கொண்டே இருந்தாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
She looks smart. She will learn fast.I wish our Amma taught us this early.
ReplyDeleteRadha
:) சாதமும் வாழைப்பழமும் சாப்பிட இந்தா வரென்..
ReplyDelete