Saturday, January 31, 2009

முதல் certificate

தீஷு ஸ்கூலில் அவளுக்கு certificate கொடுத்திருக்கிறார்கள். Skill set : Writing numbers and counting. குழந்தைகளை உற்சாகப்படுத்த எல்லா குழந்தைகளுக்கும் அவர்களின் திறமைக்கு ஏற்றவாரு ஒன்று கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். Anyhow, இது தீஷுவின் முதல் certificate. Congratulations தீஷு.
தீஷுவிற்கு புரியவில்லை என்றாலும், பத்திரமா உள்ள வைச்சிரு அம்மா என்றாள்.

Friday, January 30, 2009

மூழ்குமா?



தண்ணீரில் போடப்படும் பொருட்களில் எவையெல்லாம் மூழ்கும், எவையெல்லாம் மூழ்காது என்பதைக் கண்டுபிடிக்க, சில மூழ்கும் பொருட்களையும், சில மூழ்காதப் பொருட்களையும் எடுத்துக் கொண்டோம். வரிசையாக ஒவ்வொன்றாக தண்ணீரில் போட்டோம். போடுவதற்கு முன் மூழ்குமா மூழ்காதா என்று கேட்பேன். கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் மூழ்காது என்றே பதில் சொன்னாள்.

மூழ்கும்/மூழ்காது முதல் ஸேஸன் முடிந்து ஒன்று இரண்டு வாரங்களான நிலையில், நேற்று, மீண்டும் செய்தோம். இந்த முறை மிதக்கும் கிண்ணத்தைப் போட்டு, அதில் அதிக கனமில்லாத வெட்டின ஸ்ட்ரா போட்டுக் கொண்டே வந்தோம் எப்பொழுது மூழ்கும் என்பதை கவனிக்க. ஆனால் ஸ்ட்ராவால் மூழ்கவில்லையென்பதால், கண்ணாடி கற்களைப் போட்டு மூழ்கடித்தோம். தீஷு புரிந்துக் கொண்டாள் என்று நினைக்கிறேன்.



சிறிது நேரம், அவள் இஷ்டப்படி தண்ணீரில் விளையாட விட்டேன். ஸ்ட்ராவை தண்ணீரில் போட்டும், தண்ணீரை மாற்றி ஊற்றியும் விளையாண்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது தான் ஸ்ட்ராவை, கண் கரண்டி (எண்ணெய் பட்சணம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கரண்டி) கொண்டு ஸ்ட்ராவை எடுக்கச்சொன்னேன். விரும்பமாக திரும்ப திரும்ப செய்துக் கொண்டிருந்தாள்.

Thursday, January 29, 2009

பயமாயிருக்கு

சிறிது உடல் நல குறைவினால், போன ஒரு வாரமாக ஒய்வு எடுத்தேன். மற்ற நாளிலும் ஒண்ணும் பெருசா வேலை செய்வது கிடையாது. இது official rest. மற்ற நாட்களில் Unofficial rest.

நேற்று சாப்பிட்டு முடித்தவுடன், கையில் ப்ளேட்டை வைத்துக் கொண்டே, ஏதையோ யோசித்துக் கொண்டுயிருந்தேன். தீஷு என்னைப் பார்த்து, "சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு இருக்காத. கை வலிக்குது, கால் வலிக்குது, மூக்கு(?) வலிக்குதுனு. எந்திரிச்சிப் போய் ப்ளேட்டை வை" என்றாள். அதிர்ந்து விட்டேன். என் அம்மா,மாமியாரிலிருந்து, என் கணவர் வரை யாருமே என்னை அப்படி சொன்னதில்லை. இரண்டேமுக்கால் வயதில் இப்படி என்றால், இருபது வயதில்? பயமாயிருக்கு.

புத்தகங்கள்

குழந்தைகளுக்கான ஆக்டிவிட்டீஸ் புத்தகங்களில் எனக்கு பிடித்தவை.

1. The playful toddler by Daniel,Becky
2. Scribble Art by MaryAnn F. Kohl
3. Preschool Art by MaryAnn F. Kohl
4. The encyclopedia of Infant and Toddler activities by Kathy Charner
5. Jump into Math by Rae Pica
6. Jump into Literacy by Rae Pica
7. Young at Art by Susan Striker
8. Unplugged Play: no batteries, no plugs by Bobbi Conner
9. 365 TV-Free activities you can do with your child by Steven J. Bennett and Ruth Bennett

இந்தியாவில் எதுவெல்லாம் கிடைக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் worth reading.

Thursday, January 22, 2009

இன்னைக்கு எல்லாம் சமையல் ஐட்டம் தான்

உப்புத்தாளில் பட்டையை(சமையலில் உபயோகப்படுத்துவது) உரச செய்தேன். ஏதோ புக்கில் படித்தது. இரண்டு விதமான உப்புத்தாளை எடுத்துக் கொண்டோம். தீஷு மிகவும் விருப்பமாக செய்யவில்லை. உரசியதிலிருந்து நல்ல வசனை வந்தது. அதை வெகு நேரம் முகர்ந்து பார்த்துக் கொண்டுயிருந்தாள்.



சமையல் பாத்திரம் எடுக்க உதவும் இடுக்கியை வைத்து, ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு சில பொருட்களை மாற்ற செய்தேன். நாங்கள் எடுத்துக் கொண்ட பொருட்கள் - ஸ்பூன், கிண்ணம், மூன்று வடிவத்திலான விளையாட்டு காய்கறிகள் மற்றும் ஒரு foam லேட்டர். ஸ்பூனையும் கிண்ணத்தையும் எளிதாக எடுத்துவிட்டாள். காய்கறிகள் எடுக்க முடியவில்லை. சிறிது நாட்களுக்கு பின் முயற்சி செய்ய வேண்டும்.



இட்லி தட்டை மாட்ட சிறிது நாளாக முயற்சி செய்து கொண்டுயிருந்தாள். இப்பொழுது மாட்ட வருகிறது. பாத்திரத்தின் அடியில் துளையிருப்பதால், அதை காம்பில் மாட்டுவது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

Tuesday, January 20, 2009

சில மாற்றங்கள்

தீஷுவிடம் சமீபத்திலுள்ள சில மாற்றங்கள்.

1. ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி இருக்கிறது. ஆங்கிலமும் தமிழும் ஒரே வாக்கியத்தில் வருகின்றன. "Duck is on Dheekshitha's தோள்" என்றாள். சிறிது நேரத்திற்கு பிறகு "Duck is on Dheekshitha's shoulders" என்றாள்.சில வார்த்தைகளும், வாக்கியங்களும் ஆச்சரியப்படுத்துகின்றன. prepare, scribble, shout, enough, போன்றவையும், "I want to clean up the mess" போன்றவையும். "I don't know", I like, I want போன்றவை சாதாரணமாக வருகிறது.

2. தன்னிடம் சொல்லப்படுபவைகளை, அடுத்தவர்களுக்கு சொல்கிறாள். ஸ்னோல பாத்து நட என்றதை, அவள் அப்பாவிடம் ஸ்னோல பாத்து நட விழுந்திடுவ என்று சொல்லத் தெரிகிறது.

3. நட்சத்திரத்தில் வீனஸ் கரெக்டாக கண்டுபிடிக்கத் தெரிகிறது. ஸ்னோ தண்ணீராகும் என்று புரிகிறது.

4. Pant, Jacket (including zipper), குல்லா, gloves, shoe எல்லாம் தானாக போடத் தெரிகிறது. தானாகவே தன் வேலையை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

5. Creative play அதிகமாகி விட்டது. டாக்டர் விளையாட்டு, தன் செப்பு பாத்திரத்தில் சமைப்பது போன்றவை. நான் டாக்டர் என்றால், டாக்டர் என்று தான் கூப்பிடுகிறாள். நானும் அவ்வாறே அவளை கூப்பிட வேண்டும்.

6. எப்படி கேட்டால் கிடைக்கும் என்று தெரிகிறது. Chips அதிகமாக சாப்பிட கொடுப்பதில்லை என்பதால், கேட்கும் பொழுதே மெதுவான குரலில் இது தான் கடைசி தடவை என்கிறாள்.

7. வாசிபதற்கு ஆர்வம் காட்டுகிறாள். ஆனால் இன்னும் concept புரியவில்லை.

8. தன் ஸ்டுலில் ஏறி நின்று, ஜன்னல் வழியே அடிக்கடி வேடிக்கைப் பார்கிறாள். ஸ்டுலில் நின்றி, sinkகில் தானே கையை சுத்தப்படுத்துகிறாள்.

9. ஏதோ கீழே விழுந்து உடையாமல் போனதற்கு, நல்ல வேளை என்றாள்.

10. Where is thumbkin என்ற பாடலை போலவே, where is notebook என்று பாடிக் கொண்டேத் தேடினாள். கிடைத்தவுடன் சரியாக, "Here I am" என்பதை, "Here it is" என்று மாற்றி பாடினாள்.

கார்ட்ஸ் & கவுண்ட்டர்ஸ் ( Cards and counters)

மாண்டிசோரி சாதனங்களை நான் வாங்க தயங்குவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவை மரத்தால் செய்யப்பட்டு இருப்பதால் கனமானவை, இந்தியாவிற்கு அனைத்தையும் தூக்கி வர முடியாது. இரண்டாவது என் மேல் நம்பிக்கையின்மை. எவ்வளவு நாளைக்கு செய்ய வைப்பேன் என்று தெரியாது. ஆகையால் அவற்றை வாங்குவதற்கு பதிலாக, என்னால் பேப்பரில் அவற்றை செய்ய முடியுமா என்று பார்ப்பேன். சாதனங்களைப் பயன்படுத்தும் அளவிற்கு effect இருக்காது என்றாலும், just an introduction. அப்படி நான் தயாரித்தது தான் இந்த Red and Blue rods.

அதிலுள்ள கட்டங்களை எண்ணி, 1 முதல் 10 வரை அடுக்க வேண்டும். மர ராடில், அளவுகளை கண்ணாலும் அளக்க முடியும் என்பதால், visual discriminationக்கு நல்லது. ஆனால் பேப்பரில் எண்ணி அடுக்க மட்டும் தான் முடியும்.



தீஷு ஒரளவுக்கு எண்ணுவதற்கு பழகிவிட்டதால், கார்ட்ஸ் & கவுண்ட்டர்ஸ் சொல்லி கொடுத்தேன். 1 முதல் 10 வரை கார்ட்ஸும், 55 penguins எடுத்துக் கொண்டோம். ஒரு வலைதளத்திலிருந்து தான் எடுத்தேன். எது என்று மறந்து விட்டது. முதலில் ஒன்று முதல் 10வரை நீளவாக்கில் அடுக்க வேண்டும். அடுத்து ஒன்றுக்கு நேராக ஒரு penguinனும், இரண்டுக்கு நேராக இரண்டு என வைத்துக் கொண்டே வர வேண்டும். இதே போல், நோட்டில் 1 முதல் 10 வரை எழுதிக் கொடுத்து, எண்ணிற்கு தகுந்தாற் போல் வட்டம் போட சொல்லுகிறேன். தீஷு இரண்டையும் விருப்பமாக செய்கிறாள்.

Monday, January 12, 2009

மாட்சிங், கட்டிங், பேண்ட்டிங்

மற்றுமொரு மாட்சிங். இன்னும் கொஞ்ச நாளில தீஷுவே மாட்சிங் போதும் என்று சொல்லப் போகிறாள். இது வரை இஷ்டமாக செய்து கொண்டிருக்கிறாள். இது Snowflakes மாட்சிங். இங்கிருந்து download செய்து கொண்டேன். மாட்சிங் visual discriminationக்கு மிகவும் நல்லது. தீஷு மிகவும் எளிதாக செய்தாள்.





Snowflakes வெட்டினோம். Idea இந்த வீடியோ மூலம். பேப்பரை நான் மடித்து கொடுத்து, வெட்ட மட்டும் சொன்னேன். நான்கு முறைக்கு மேல் பேப்பரை மடித்திருந்ததால், அவளுக்கு வெட்டுவதற்கு கஷ்டமாக இருந்தது. ஆகையால் அவளுக்கு வேறு விதமாக மடித்து, வெட்டக் கொடுத்தேன். ஏதோ முக்கோண வடிவத்தில் வந்தது. மேலே உள்ள படம் நான் வெட்டியது. சற்று பெரிய குழந்தைகளுக்கு, அவர்களே மடிக்க வைத்து வெட்டப் பழக்கலாம். நாம் வெட்டுவதைப் பொருந்து, டிஸேன் மாறுவதால், அவர்களுக்கு வெகு நேரத்திற்கு interest இருக்கும்.


பேப்பர் டவல் உருளையில் woolen நூல் சுற்றி, ஒட்டி வைத்துக் கொண்டேன். இன்னொரு உருளையில் 'V' shapeபில் ஒட்டினேன். அதன் மேல், பேண்ட்டைத் தடவி, பேப்பரில் உருட்டினால், zig zag lines வரும். நான் எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை. ஆனால் டைம் பாஸாக இருந்தது.

Sunday, January 11, 2009

பட்டாம்பூச்சி விருது

அமுதா பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்காங்க. நன்றி அமுதா.

தமிழ்மணம் எனக்கு நான்கு வருடங்களாகத் தெரியும் என்றாலும், நான் தொடர்ந்து படித்தது கிடையாது. படிக்கும் என் கணவரை திட்டியதும் உண்டு. தீஷுவின் குறிப்புகளை எழுதுவதற்கே நான் ப்ளாக் தொடங்கினேன். முதலில் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். என் சொந்தங்களுக்கு படிக்க கஷ்டமாக இருந்ததால், தமிழிலில் எழுதத் தொடங்கினேன். தமிழ்மணத்தில் இணைக்கச் சொன்னது என் கணவர். பதிவை அவர் தான் இணைக்கவும் செய்தார். நன்றி என் கணவருக்கு.

விருதின் விதிப்படி ஏழு பேருக்கு நான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். நான் வாசிக்கும் பலர் ஏற்கெனவே வாங்கி விட்டார்கள். சில ஜாம்பவான்களிடமிருந்து வாங்க மட்டும் தான் முடியும். கொடுக்க முடியாது. ஆகவே நான் இரண்டு பேரிடம் மட்டும் பகிர ஆசைப்படுகிறேன்.

1. நிலா - நான் முதல் முதலில் பின்னோட்டம் போட்டது நிலாவுக்கு தான். எனக்கு முதல் பின்னோட்டம் வந்ததும் நிலாவிடமிருந்து தான். எனக்கு நிலா ப்ளாக்கில் பிடித்தது புகைப்படங்கள். நானும் புகைப்பட எடுக்கப் பழக வேண்டும் எனும் ஆசையை தூண்டியவை.

2. பட்டூ - அம்மாக்களின் வலைப்பூக்கள் மூலம் அறிமுகமானது. எனக்கு பிடித்தது - E-books, பாடல்கள், விடுகதைப் பற்றிய பதிவுகள். தொடர்ந்து எழுதியிருக்காங்கனு அடிக்கடி நான் செக் பண்ணும் ப்ளாக்.

தொடர்ந்து ஊக்குமளிக்கும் சந்தனமுல்லை, அமிர்தவர்ஷினி அம்மாவுக்கும் என் நன்றிகள்.

Friday, January 9, 2009

கூட்டல்



முன்பு எண்ணும்,
அதற்குரிய அளவுள்ள வட்டங்களையும் வைத்து எண்ண கற்றுக் கொடுத்தேன். அதை ஒரளவு தீஷு பழகி விட்டதால், இப்பொழுது அடுத்த step. வெறும் எண்ணை மட்டும் வைத்து, அதற்குரிய கற்களை அவளாக வைக்க வேண்டும். முதலில் நான்கு எண்களை மட்டும் செய்தோம். தீஷு புரிந்து கொண்டவுடன், பத்து எண்கள் வரை செய்தோம்.




பத்து பாகங்கள் கொண்ட டப்பாவை எடுத்துக் கொண்டோம். முதலில் ஒன்று முதல் பத்து வரை வரிசையாக அடுக்க வேண்டும். அடுத்து எண்ணிற்குத் தகுந்தாற் போல், கற்களைப் போட வேண்டும். இது மாண்டிசோரியின் Spindle boxயை ஒத்தது. தீஷு சரியாக செய்தாள். எண்ணுவதற்குப் பழகி விட்டாள் என்று நினைக்கிறேன்.


அடுத்து அந்த எண் அட்டைகளை வைத்து, மெம்மரி விளையாட்டு விளையாண்டோம். ஒன்பது அட்டைகளை 3x3 யாக திரும்பி வைத்துக் கொண்டோம். ஒரே வரிசையிலுள்ள 3 எண்ணையும் பார்த்து விட்டு, அவளுக்கு அந்த எண்களை இரண்டு முறை சொன்னேன். அடுத்து அந்த 3 எண்களில் வரிசையை மாற்றி எடுத்து தர சொன்னேன். சரியாக செய்தாள். மெம்மரி விளையாட்டு புரிய ஆரம்பித்து விட்டது என நினைக்கிறேன்.

Monday, January 5, 2009

We are back

Cold, cough, fever, ear infection எல்லாத்தையும் 2008யிலிருந்து 2009க்கும் கொண்டு வந்திட்டோம். இப்ப கொஞ்சம் பரவாயில்லை. We are back. புது வருஷத்தில இன்னும் activities ஆரம்பிக்கவில்லை.


No sew, Fancy kids pocket book template எடுத்துக் கொண்டு, தீஷுவை ஒட்ட வைத்தேன். பாக்கெட் செய்து முடித்தவுடன், அவள் shopping cart பொம்மையிலிருந்த credit cardடை எடுத்து வைத்துக் கொண்டு, அவள் பொம்மை strollerயையும் தள்ளிக் கொண்டு ஷாப்பிங் கிளம்பி விட்டாள். பயமா இருக்கு எதிர்காலத்தில் வர போகும் பாக்கெட் மணி சண்டைகளை நினைத்தால்.


மற்றுமொரு Mystery Bag. இந்த முறை shape கண்டுபிடிக்க வேண்டும். வேவ்வேறு வடிவமுடைய் அவளுடைய shape sorter ப்ளாக்ஸ் பையில் வைத்து விட்டோம். நான் கேட்கும் வடிவத்தை, கண்னை மூடிக் கொண்டு, கையால் உணர்ந்து பையிலிருந்து எடுத்து தர வேண்டும். தீஷுவிற்கு மிகவும் பிடித்து விட்டது. Turn எடுத்துக் கொண்டு திரும்ப திரும்ப விளையாடிக் கொண்டுயிருந்தோம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost