Wednesday, January 27, 2010

ந‌ம்ப‌ர் வீல்


நெட்டிலிருந்து நம்பர் வீல் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். துணி உலர்த்தப் பயன்படுத்தும் கிளிப்பில் 1 முதல் 10 வரை மார்க்கரால் எழுதிக் கொண்டேன். தீஷு புள்ளிகளை எண்ணி அந்த எண்ணை கொண்ட கிளிப்பைப் பொருத்த வேண்டும். இதன் மூலம் எண்ணுதல் மற்றும் கை விரல்களுக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் 1,2 என புள்ளிகள் வரிசையாக இருந்ததால் அவளுக்கு எண்ணும் வேலை இல்லை.
அப்பளம் சுட பயன்படும் tongs கொண்டு கற்களை ஒரு கிண்ணத்திலிருந்து மற்றொரு கிண்ணத்திற்கு மாற்றினோம் (Transfer). Tongs பெரியதாக இருந்ததால் கற்கள் மாற்றுவதற்கு வசதியாக இல்லை. அதனால் மெக்னெட்டிக் எழுத்துகளை 1 முதல் 9 வரை கிண்ணத்தில் எடுத்துக் கொண்டோம். ஒவ்வொரு எழுத்தாக tongsசுல் எடுத்து, இந்த எண்ணைச் சொல்லி அடுத்த கிண்ணத்தில் போட வேண்டும். தீஷு ஒரு முறை செய்தாள். அடுத்து அவளுக்குச் செய்ய விரும்பம் இல்லை.இது முன்பே செய்த‌து. சையினீஸ் செக்க‌ர்ஸ் போர்டில் அத‌ன் காயின்க‌ளை வைத்த‌ல். முன்பு க‌ல‌ர்க‌ள் மூல‌ம் பிரித்தோமா என்று நினைவில்லை. இந்த‌ முறை வைக்கும் பொழுதே க‌ல‌ர் க‌லராக‌ பிரித்து வைத்தாள். இர‌ண்டு முறை செய்து ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்தினாள். This improves fine muscles and hand eye coordination.

Sunday, January 24, 2010

பொரிகடலை சாதம்


புளி குழம்புக்கு, புளியை தண்ணில போட்டு, அடுப்புல வைச்சு, உப்பும் சுகரும் போடனும்..


தேங்காயை பருப்போட(பொரிகடலை) போட்டு, மிஃக்சியில அரைச்சா சட்னி வரும்.


இதுவெல்லாம் தீஷு சொன்ன ரெசிபிஸ். தீஷுவிற்கு சமைக்க வேண்டும் என்ற ஆசையைப் புரிந்து கொண்டு, குழந்தைகள் சமையல் ஏதாவது செய்ய ஐடியா தேட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இரண்டு மூன்று மாதங்களை ஓட்டி விட்டேன்.

நேற்று சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவளை திசை திருப்ப, பொடி செய்ய பயன்படும் உரலைக் கொடுத்தேன். அவளாகவே பொரிகடலையை எடுத்து பொடி செய்ய ஆரம்பித்துவிட்டாள். அவள் சிறிது பொடி செய்தப்பின் அவளுக்கு சிறிது சர்க்கரை கொடுத்தேன். அதையும் பொடி செய்து ஒரு கிண்ணத்தில் கொட்டி சமைத்து முடித்து விட்டாள். சமைத்ததை எடுத்து அப்பா வந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று சிறிது சிறிதாக சாப்பிட்டு முடித்து விட்டாள். அப்பாவிற்காவது எடுத்து வைக்க வேண்டும் என்று தோன்றியது. அம்மாவுக்கு.. அம்மாவின் ஞாபகமே இல்லை. ஏன் எனக்குக் கொடுக்கவில்லை என்றதற்கு நீ சாப்பிட்டா ஃபுல்லா சாப்பிட்டு விடுவ என்று பதில் வேறு. என்னத்தச் சொல்ல?

மறுநாளும் இதே மாதிரி செய்து அப்பாவிற்கு, அம்மாவிற்கு (ஏதோ போகிறது என்று) கொடுத்தாள். இப்பொழுது எப்பவும் உரலும் கையுமாக இருக்கிறாள். நேற்று என்னை அழைத்து சொன்னாள், "வா உனக்குச் சமைக்கச் சொல்லித்தருகிறேன்"


?????

Saturday, January 23, 2010

சோழிகளுடன் விளையாடு - 2

மேலும் சில சோழி விளையாட்டுகள்...1. இருவரும் விளையாண்டோம். சோழிகளை இருவரும் பிரித்துக் கொண்டோம். தாயக்கட்டை உருட்டி, அந்த எண்ணிற்கு மற்றவரிடமிருந்து சோழிகள் வாங்க வேண்டும். முதலில் நான் தாயக்கட்டையை உருட்டினேன். பின்பு தீஷுவிடம்,
" Can you please give me (that many number )"
கொடுத்தவுடன்
"Thanks"
என்றேன். பின்பு அவள் முறை..

இதன் மூலம் எண்ணுதல் (தாயக்கட்டையில் புள்ளிகள் மற்றும் கொடுப்பதற்கு சோழிகள்), பிறரிடம் எப்படி கேட்க வேண்டும் என்ற courtesy மற்றும் முறை எடுத்து விளையாடுவது முதலியன கற்றுக் கொள்ளலாம்.

2. Patterns : ஒரு சோழி கவிழ்த்தும், மற்றொன்றை விரித்தும் மாறி மாறி வைத்துக் கொண்டே வர வேண்டும். மற்ற பொருட்கள் கொண்டு நாங்கள் பல முறை விளையாண்ட விளையாட்டு.
3. இது நான் சிறு குழந்தையாக இருந்த பொழுது விளையாடியது. சோழிகளை குவியலாக போட்டு, மற்ற சோழிகளுடன் இடிக்காமல் ஒவ்வொரு சோழியாக எடுக்க வேண்டும். தீஷு மிகவும் விருப்பமாக விளையாண்டாள். இது கவன ஒருங்கினைப்புக்கும், விரலுக்கும் ஏற்ற பயிற்சி ஆகும்

Tuesday, January 19, 2010

சோழிகளுடன் விளையாடு

தீஷுவிற்கு சோழிகள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதை வைத்து சில ஆக்டிவிட்டீஸ் செய்தோம்.சோழிகளை கோட்டின் மேல் வைத்தல். இது கண் கை ஒருங்கினைப்புக்கு ஏற்றது.


இரு அளவில் சோழிகளை ஒரு சிறு பையில் எடுத்துக் கொண்டு, நான் கேட்கும் அளவை கண்களை மூடிக் கொண்டு எடுத்து தர வேண்டும். இது தொடுதல் உணர்ச்சியை மேம்படுத்தும்.
சோழியை தரையில் குவியலாகக் கொட்டி, அதை கையில் அள்ளுதல். இது கை விரல்களையும் கையையும் வலுப்படுத்தும்.

சோழிகளை இரு அளவில் பிரித்து கூட்டல் செய்தல். முதல் எண் அளவு பெரிய சோழிகள் எடுக்க வேண்டும். இரண்டாவது எண்ணிற்கு சிறு சோழிகள். பின்பு இரண்டையும் இணைத்து கூட்ட வேண்டும். தீஷுவிற்கு கணக்கையும் எழுதி விடையையும் எழுத வேண்டும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost