மாக்னெட்டிக் எழுத்துக்களாலான இரண்டு இலக்க எண்களை தீஷு வாசிக்கப்பழகிவிட்டதால், இன்று அடுத்த படியாக, நான் சொல்லும் எண்களை நோட்டில் எழுதச் சொன்னேன். 20, 70 போன்று பூஜ்ஜியத்தில் முடியும் எண்களை எழுத சிரமப்பட்டாள். மற்றபடி சரியாக எழுதினாள். 10,20 என்று வரிசையாகச் சொல்லி பூஜ்ஜியத்தில் முடியும் எண்களை மட்டும் ஒரு முறை எழுத வைத்தேன். இதுப்போல் தினமும் தொடர்ந்து செய்யும் எண்ணம் உள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் மாக்னெட்டிக் எழுத்துக்களால் எண்களை அறிந்து கொண்டதால், ஆங்கில வார்த்தைகளும் அவ்வாறே கற்றுத் தரலாம் என்று எண்ணினேன். இன்று IS & AS வைத்து பொனிடிக்ஸ் முறையில் வாசித்துக் காட்டினேன். ஒர் அளவு அவளாக சொல்ல ஆரம்பித்ததும், அவளுடைய புத்தகத்தில் IS வரும் இடங்களை மட்டும் சுட்டிக்காட்டச் சொன்னேன். இதன் மூலம் தான் வாசிப்பது போன்ற மகிழ்ச்சி அவளுக்கு வரும் என்பது என் எண்ணம். மூன்று நான்கு பக்கங்கள் தேடியப்பின் அவளுக்கு ஆர்வமிருக்கவில்லை.
Patterns நாங்கள் முன்பே பல முறை செய்திருக்கிறோம். ஞாபகப்படுத்தவும் அடுத்த படிக்கு எடுத்துச் செல்லவும் இன்று செய்தோம். முதலில் எப்பொழுதும் போல் AB pattern செய்து முடித்தப்பின் ABC மற்றும் AAB செய்தோம். ABCக்கு மூன்று வகையான பொருட்கள் எடுத்துக் கொண்டு மூன்றையும் அடுத்து அடுத்து வைக்க வேண்டும். AABக்கு இரண்டு வகை பொருட்கள். முதலில் முதல் வகையை இரண்டு தரம் வைத்து விட்டு இரண்டாவது வகையை ஒரு முறை வைக்க வேண்டும். இப்படியே தொடர வேண்டும். இரண்டையும் விருப்பமாக செய்தாள். அடுத்து நான் ஒரு pattern வைத்து, அவளைத் தொடரச் சொல்ல வேண்டும். நான் வைத்திருக்கும் patternயைக் கண்டுபிடித்துத் தொடர வேண்டும். இது சற்று சிரமமானது. முயற்சித்துப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். அவளுக்கு விரும்பமிருந்தால் தொடருவோம்.
Games to play with 3 year old without anything
2 years ago
தீஷூவைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது!! வாழ்த்துகள்!
ReplyDelete