தீஷு இரண்டு இலக்க எண்களை வாசிப்பதால், இன்று அதற்கு அடுத்த படி செய்தோம். எப்பொழுதும் நான் மாக்னெட்டிக் எழுத்துக்களால் எண்களை வைத்து, அவளை வாசிக்கச் சொல்வேன். ஆனால் இன்று நான் சொல்லும் எண்னை அவள் வைக்க வேண்டும். முதலில் இரண்டாவது இலக்கத்தை முதல் இலக்கமாக வைத்தாள். சொன்னதும் புரிந்து கொண்டாள். கிட்டத்தட்ட 15 எண்கள் வரை செய்திருப்போம். அனைத்தையும் சரியாக செய்தாள்.
மாக்னெட்டிக் எழுத்தை வைத்தே பொருட்களை magnetic / non-magnetic என பிரித்தோம். நான் பொருட்களைத் தட்டில் எடுத்துத் தராமல், வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் காந்தத்தால் தொட்டு, magnetic / non-magnetic என சொல்லச் செய்தேன். சரியாக செய்தாலும் மாக்னெட்டிக் என்ற வார்த்தையை சொல்லத் தெரியவில்லை.
மாண்டிசோரி முறையில் அனைத்து புலங்களின் மூலம் கற்கிறோம் என்பது அடிப்படை. தொடு புலனுக்கு இந்தப் பயிற்சி மாண்டிசோரி புத்தகங்களின் இருந்தது. வெவ்வேறு வகையான துணிகளை(தையல் கடையில் கேட்டு வாங்கினேன்), ஒவ்வொரு வகையையும் இரண்டு 15cm சதுரங்களாக வெட்டிக் கொண்டேன். இரண்டு கிண்ணிங்களில் வைத்து விட்டேன். கண்னைக் கட்டிக் கொண்டு, முதல் கிண்ணத்திலிருந்து ஒரு துணியை எடுத்து, அடுத்த கிண்ணத்திலிருந்து அதற்கு இணையானதை எடுக்க வேண்டும். முதலில் இரண்டு வகையான துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு இணைத்தோம். புரிந்து கொண்டவுடன் 4 வகை செய்தோம். அடுத்து நான் ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு துணி கொடுத்தவுடன், இரண்டும் ஒரே வகையா இல்லையா என்று சொல்ல வேண்டும் என்றேன். அனைத்தையும் விருப்பமாக செய்தாள். முடித்தவுடன் அனைத்துத் துணிகளையும் எடுத்து, எல்லா துணியும் காஞ்சிருச்சு, மடித்து வைத்து விடுகிறேன் என்று மடித்து வைத்து விட்டாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
ஓ துணி வகைகள் எல்லாம் தெரியுமா தீஷூவிற்கு! கூல்! அடுத்த பிறந்தநாளுக்கு பட்டு சல்வார் தானே?!!! :-)
ReplyDeleteவீட்டில் இருப்பதை வைத்தே எவ்வள்வு கற்றுக்கொடுக்கலாம் என்று உங்கள் மூலம் தான் புரிந்து கொள்கிறேன்.
ReplyDelete