தொலைபேசி எண்கள் எழுதியிருந்த பழைய டைரி ஒன்று இருந்தது. தீஷு வார்த்தைகளின் முதல் எழுத்தைக் கூறுவதால், பெயரை சொன்னால், அந்த பெயரின் முதல் எழுத்தைக் கண்டுபிடித்து, அந்த எழுத்தின் பக்கதை எடுக்க வேண்டும். இது முதல் எழுத்தைக் கண்டுபிடிப்பது தான், ஆனால் எப்பொழுதும் போலில்லாமல், சற்று வித்தியாசப்படுத்த இப்படி மாற்றினேன். நான்கைது பெயர்களைக் கண்டுபிடித்ததும், அவளுக்கு எப்படி எண்கள் press செய்கிறோம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. சொன்னதும் புரிந்து கொண்டாள் ஆனால் எண்களை வாசித்து அதை அழுத்தும் அளவிற்கு அவளிடம் வேகமில்லை.
இன்றும் கூட்டல் செய்தோம். சற்றே அவள் ஆர்வத்தைத் தூண்டவும், வித்தியாசப்படுத்தவும் தாயக்கட்டைகள் எடுத்துக் கொண்டோம். முதலில் தாயக்கட்டையை உருட்டி, அந்த எண்களை எழுதி முன்பு செய்தது போல் கூட்டல் செய்ய வேண்டும். விருப்பமாகச் செய்தாள்.
நிறைய நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருக்கும் செயல்முறை இது. மாண்டிசோரி டிரெஸிங் பிரேம் போன்று ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் சோம்பேறித்தனத்தை நான் அறிந்ததால், இன்று தீஷுவின் உடைகளை எடுத்துக் கொண்டு செய்தோம். ஜிப், பட்டன், கூக் போன்று வித்தியசமான உடைகளை எடுத்துக் கொடுத்தேன். கூக் உள்ளதை எளிதாக செய்தாள். அவள் அப்பாவின் பட்டனை போட்டு விடுவாள். ஆனால் இன்று எடுத்துக் கொண்ட உடையில் போட முடியவில்லை. வேறு உடையை மாற்றி கொடுத்தும் அவளால் முடியவில்லை. ஜிப்பை லாக்கில் மாட்ட முடியவில்லை. முன்பு அவள் ஜெர்க்கினில் போடுவாள். இன்று முடியவில்லை. முயற்சி செய்து பார்த்தாள். முடியவில்லை என்றவுடன் எடுத்து வைத்து விட்டாள். சில நாட்கள் கழித்து முயல வேண்டும்.
Games to play with 3 year old without anything
2 years ago
ஆகா....தீஷூ அசத்துகிறாள்! ஹோம்ஸ்கூலிங் செய்துவிடுவீர்கள் போலிருக்கிறதே! :-)
ReplyDeleteஹோம்ஸ்கூலிங் செய்ய ஆசை முல்லை. நம் குழந்தைக்கு விருப்பமானதை சொல்லித் தரலாம். ஆனால் நம் கல்வி முறைக்குச் சரி வராது என்பது கருத்து.
ReplyDeleteநல்ல முயற்சி
ReplyDelete