வரைந்த கையை 3டியில் மாற்றியது தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அதே மாதிரி வேறு ஏதாவது செய்யலாம் என்று இணையத்தில் தேடிய பொழுது இந்தத் தளம் கிடைத்தது. அதிலிருந்து டெம்பிளேட் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டோம். அந்தத் தளத்தில் கொடுத்திருக்கும் செய்முறையை அப்படியே பின்பற்றினோம். அவர்களுக்கு வந்திருக்கும் எபெஃக்ட் எங்களுக்கு வரவில்லை. அந்த உருண்டைகள் 3டியாகத் தெரியவில்லை என்றதும் தீஷு சென்னாள், "ஒரு கண்ணை மூடிட்டுப் பாருங்க தெரியும்". எப்படி பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு 3டி எபெஃக்ட் தெரிகிறதா?
தீஷுவிற்கு கலர் செய்யத் தொடங்கிய சில நிமிடங்களில் ஆர்வம் போய் விட்டது. நானும் சேர்ந்து செய்தேன். கறும்பு நிறத்தில் ஆரம்பித்து, அது காலியாக ஊதாவில் தொடர்ந்தோம். அதே தளத்தில் க்யூப் (Cube) 3டி செய்ய வழிமுறை உள்ளது. தீஷுவிற்கு இது கடினம் என்று தோன்றியதால் நாங்கள் செய்யவில்லை. விரும்பமுள்ளவர்கள் முயன்று பார்த்துச் சொல்லுங்களேன்!!
தீஷுவிற்கு கலர் செய்யத் தொடங்கிய சில நிமிடங்களில் ஆர்வம் போய் விட்டது. நானும் சேர்ந்து செய்தேன். கறும்பு நிறத்தில் ஆரம்பித்து, அது காலியாக ஊதாவில் தொடர்ந்தோம். அதே தளத்தில் க்யூப் (Cube) 3டி செய்ய வழிமுறை உள்ளது. தீஷுவிற்கு இது கடினம் என்று தோன்றியதால் நாங்கள் செய்யவில்லை. விரும்பமுள்ளவர்கள் முயன்று பார்த்துச் சொல்லுங்களேன்!!
நடுவில் உள்ள கட்டங்கள் சிறிது பெரிதாக இருக்க வேண்டுமா...? (கொடுத்துள்ள தளத்தில் முடிவில் உள்ள பச்சை கட்டங்கள் போல)
ReplyDeleteநன்றி தனபாலன். இரண்டு படங்கள் உள்ளன. முதலிலுள்ள கறுப்பு வெள்ளை முறையை நாங்கள் முயன்றோம். பச்சை சற்று வித்தியாசமாக உள்ளது. அவர்களுக்கு கறுப்பு வெள்ளை நன்றாக வந்திருக்கிறது. :))
Deleteதீஷு அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பல திறன்களை வளர்க்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் பல...
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு நன்றி தனபாலன்..
Deleteகருப்பு வெள்ளையில் சுமாராக வந்திருப்பினும் ஊதாவில் நன்றாகவே தெரிகிறதே.
ReplyDeleteநன்றி மேடம் வருகைக்கு.. கறுப்பு வெள்ளை முதலில் செய்தோம். அது நன்றாக வரவில்லை என்றதும் ஊதாவில் செய்யும் பொழுதும் கோடுகளை சற்று வளைத்தோம். அதனால் அதில் தெரிகிறது என்று நினைக்கிறேன். :))
Deleteசிறிது squint கண்ணால் பார்த்தால் தெரிகிறது. ஆனால் ஆ.வி,யில் வந்த படங்களை நான் தொகுத்து வைத்துள்ளேன், அதில் தெரிவது போல் தெளிவில்லை. இருந்தும் ... இது நாம் செய்து பார்ப்பதல்லவா ...!
ReplyDeleteஆமாம் தருமி ஸார். நன்றாக வரவில்லையென்றாலும் நாம் செய்தது எனும் பொழுது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. தீஷுவும் வளைந்த கோடுகள் வரைந்தால் 3டி வருகிறது என்று புரிந்து வைத்திருக்கிறாள்.
Deleteஎப்படியும் குழந்தையை விஞ்ஞானி ஆக்கிரனும்னு முடிவோட இருக்கீங்க போல...வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஅப்படி எல்லாம் இல்லை மனோ.. இது மாதிரி செய்வது எங்கள் இருவருக்கும் விருப்பமான ஒன்று. வருகைக்கு நன்றி..
Deleteசிறப்பான முயற்சி..... பாராட்டுகள் தியானா....
ReplyDeleteவருகைக்கு நன்றி வெங்கட்
DeleteVisit : http://omnibus.sasariri.com/2013/06/blog-post_4.html
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தகவலுக்கு நன்றி தனபாலன்!!
ReplyDelete