கடந்த வார இறுதியில் மழை பெய்வது போல் இருந்ததால் வெளியே போக முடியவில்லை. அதனால் அந்த சனி இரவை ஃபாமலி இரவாக மாற்றிவிட்டோம். தீஷுவும் அப்பாவும் பேப்பர் கிண்ணம் செய்தார்கள். ஐடியா நெட்டிலிருந்து எடுத்தது. பேப்பரை சிறிது சிறிதாக கிழித்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் பாலித்தீன் கவர் சுற்ற வேண்டும். பின்பு கிழித்தப் பேப்பரில் கம் தடவி பாலித்தீன் கவர் மேல் தீஷு ஒட்டிக் கொண்டே வந்தாள். கிண்ணத்தைச் சுற்றி ஒட்டி முடித்தவுடன், காய வைக்க வேண்டும். மறுநாள் காய்ந்தவுடன் மெதுவாக கிண்ணதிலிருந்து பேப்பரை எடுத்தால் பேப்பர் கிண்ணம் வந்துவிடும். தீஷு அதை வைத்து தன் டாலுக்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள்.
100 பீஸ் பஸில் தீஷு பின்னாளில் உபயோகப்படுத்தவதற்காக வாங்கியது இருந்தது. மூவருமாக சேர்த்தோம். அப்பா கீழிருந்து செய்தார். தீஷுவும் நானும் மேல் பகுதி செய்தோம். ஒரளவு முடித்தவுடன் இணைத்துவிட்டோம். கீழ் பகுதி முழுவதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததால் அப்பாவுக்கு நேரம் எடுத்தது. தீஷு அடிக்கடி "அப்பா பாரு.. நாங்க எவ்வளவு பெரிசா பண்ணிட்டோமினு" என்று சொல்லிக் கடுப்படித்துக் கொண்டேயிருந்தாள். நாங்கள் மூவரும் செய்ய அரைமணி நேரமானது. நல்லதொரு மாலை பொழுது.
Games to play with 3 year old without anything
2 years ago
//தீஷு அதை வைத்து தன் டாலுக்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள்.//
ReplyDeleteநல்ல ஐடியா!! :-)
/"அப்பா பாரு.. நாங்க எவ்வளவு பெரிசா பண்ணிட்டோமினு" என்று சொல்லிக் கடுப்படித்துக் கொண்டேயிருந்தாள்/
LOL!
//கடந்த வார இறுதியில் மழை பெய்வது போல் இருந்ததால் வெளியே போக முடியவில்லை. அதனால் அந்த சனி இரவை ஃபாமலி இரவாக மாற்றிவிட்டோம். தீஷுவும் அப்பாவும் பேப்பர் கிண்ணம் செய்தார்கள்//
ReplyDeletenice idea :)
நன்றி முல்லை.
ReplyDeleteநன்றி மிஸஸ்.தேவ்
நல்லா கொண்டாடி இருக்கீங்க :) நீங்க வேணும்னே தானே கிண்ணம் பண்ணும் போது அப்பாவோட செய்த குட்டிய பஷில்ல உங்க கூட சேத்துகிட்டீங்க.. :)
ReplyDelete//அப்பா பாரு.. நாங்க எவ்வளவு பெரிசா பண்ணிட்டோமினு" என்று சொல்லிக் கடுப்படித்துக் கொண்டேயிருந்தாள்//
ReplyDelete:)
/"அப்பா பாரு.. நாங்க எவ்வளவு பெரிசா பண்ணிட்டோமினு" என்று சொல்லிக் கடுப்படித்துக் கொண்டேயிருந்தாள்/
ReplyDelete:))
நல்லதொரு மாலை பொழுதுகள் தொடரட்டும்.
ReplyDelete