தேவையானப் பொருட்கள் :
1. வண்ண அட்டைகள்
2. கத்திரிக்கோல்
3. கோந்து
செய்முறை 1:
1. வண்ண அட்டைகளை நமக்குப் பிடித்த வடிவத்தில் வெட்ட வேண்டும்.
2. அரை பேப்பருக்கு கோந்து தடவி, வெட்டிய வண்ண அட்டைகளை ஒட்ட வேண்டும்.
3. முழு பேப்பருக்கும் அட்டைகள் ஒட்ட வேண்டும் ஆனால் கோந்து காய்ந்து விடும் என்பதற்காக நாங்கள் அரை அரையாக பிரித்துச் செய்தோம்.
செய்முறை 2:
1. இந்த முறை ஒரு இன்ச் சதுரமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
2. ஒரு இன்ச் சதுரத்தில் நடுவில் வெட்டி (diagonal) இரு முக்கோணங்களாக ஆகிக் கொண்டோம்.
3. பேப்பரில் கோந்து ஒட்டி வெட்டிய பகுதியை சதுரம் வரும்படி ஒட்டினோம்.
4. ஒரு இன்ச் சதுரம் வெட்டும் பொழுது சில சதுரங்களை நாங்கள் சரியாக வெட்டவில்லை. தீஷுவிற்கு ஒரு இன்ச் அளப்பதும் சிரமமாக இருந்தது. அதனால் சில இடங்களில் இடைவெளிகள் உள்ளன.
செய்முறை இரண்டில் செய்தது எனக்குப் பிடித்திருந்தது. சிரமமான வேலை இல்லை. ஆனால் அழகாக இருக்கிறது.
அருமை வாழ்த்துக்கள்.அதிகப் பொறுமை வேண்டும் ?
ReplyDeleteநன்றி கவியாழி கண்ணதாசன்..
Deleteஅருமை..... பாராட்டுகள்....
ReplyDeleteநன்றி வெங்கட்...
Deleteவண்ணமயம்.. அருமை :)
ReplyDeleteநன்றி கிரேஸ்..
DeletePerfect Dhiyana!! dheekshuvin அந்த குட்டி விரல்களூக்கு என் அன்பு முத்தங்கள்!! :-)
ReplyDeleteThanks Mullai
Delete