Sunday, April 21, 2013

குழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்

ச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.

"ஏன் நான் ப்ர‌வுன் க‌ல‌ரில் இருக்கேன்?"

 "நான் (அம்மா) ப்ர‌வுன் க‌ல‌ரில் இருப்ப‌தால், நீயும் ப்ர‌வுன் க‌ல‌ரில் இருக்க‌" என்றேன்.

 "ஏன் ச‌ம்மு (த‌ங்கை) ம‌ட்டும் பீச் க‌ல‌ரில் இருக்கா?"

 "அவ‌ அப்பா மாதிரி இருக்கா"

அன்றைய‌ உரையாட‌ல் முடிவு பெற்ற‌து. நானும் பெரிய‌ விஷய‌மாக‌ எடுத்துக் கொள்ள‌வில்லை. தோல் நிற‌த்தை எப்பொழுதும் பெரிய‌ விஷ‌ய‌மாக‌ எடுத்துக் கொள்ளாத‌தால். எங்க‌ள் வீட்டில் இதைப் ப‌ற்றி பேசும் ப‌ழ‌க்க‌மும் இல்லை.

 சில‌ நாட்க‌ள் க‌ழித்து தோல் நிற‌ம் ப‌ற்றிய‌ பேச்சு வ‌ந்த‌து ஆனால் இந்த‌ முறை வேறு வ‌டிவ‌த்தில் ..

 "நான் ஹேலிக்கு ஹாய் சொன்னேன்.. அவ‌ளும் சொன்னாமா.. நான் கூட‌ அவ‌ என் கூட பேச‌ மாட்டானு நினைச்சேன்"

 "ஏன் பேச‌ மாட்டானு நினைச்ச?"

"ஏன்னா, நான் ப்ர‌வுன் க‌ல‌ரில் இருக்கேன்ல‌..."

 இது ம‌ன‌தை பாதித்து உள்ள‌து என்ப‌து என‌க்குப் புரிந்த‌து..சில‌ விள‌க்க‌ங்க‌ள் கொடுத்தேன். தோல் நிற‌த்தை வைத்து த‌ன்னைத் தாழ்த்திக் கொள்ள‌க் கூடாது என்று என் வாழ்க்கை நிகழ்ச்சிக‌ள் வைத்து விள‌க்கினேன். விருப்ப‌மாக‌க் கேட்டாள்.

 இன்னும் சில‌ நாட்க‌ள் க‌ழித்து நான் கோப‌ப்ப‌ட்ட‌த‌ற்கு, அவ‌ளிட‌மிருந்து வ‌ந்த‌ சொற்க‌ள், "Nobody likes me because I am dark"

தெளிவாக‌ விள‌க்குவ‌த‌ற்கான‌ நேர‌ம் என‌ப் புரிந்தது. அன்றைய‌ பொழுது விட்டு, அடுத்த‌ நாள் மெதுவாக‌ ஆர‌ம்பித்தேன். யாரும் தோல் நிற‌த்தை வைத்து ம‌திக்க‌ப் ப‌டுவ‌தில்லை என்றேன் (உண்மை சில‌ நேர‌ங்க‌ளில் வேறு வித‌மாக‌ இருந்தாலும்..). உண்மையாக‌வும், நேர்மையாக‌வும், உத‌வுவ‌தையும், தொல்லைக் கொடுக்காத‌வ‌ர்க‌ளையுமே எல்லாருக்கும் பிடிக்கும் என்றேன்.

சின்ன‌ க‌தை ஒன்றே நானே உருவாக்கிச் சொன்னேன்.. "ஒரு சின்ன‌க் குழ‌ந்தை த‌ன் தோல் நிற‌த்தைப் ப‌ற்றி வ‌ருந்தி, தேவ‌தையிட‌ம் சென்று தன்னை வெள்ளையாக‌ மாற்ற‌ச் சொன்ன‌து. தேவ‌தை நீ யார் க‌ல‌ர் போல் ஆக‌ வேண்டும் என்ற‌த‌ற்கு,குழ‌ந்தை மேக‌ம் என்ற‌து. நீ மேக‌த்திட‌ம் சென்று அத‌ன் க‌ல‌ர் அத‌ற்கு பிடிக்குமா என்று கேட்டு வா என்றுது தேவ‌தை. குழ‌ந்தை மேக‌த்திட‌ம் சென்று உன‌க்கு உன் க‌ல‌ர் பிடிக்குமா என்று கேட்ட‌து. அப்பொழுது மேக‌ம், நான் வெண்மையான‌ இருக்கும் பொழுது யாருக்கும் உத‌வ‌ முடியாது, எப்பொழுது என் நிற‌ம் க‌ருமையாக‌ மாறுகிற‌தோ, அப்பொழுது தான் என்னால் ம‌ழை பொழுந்து அனைவ‌ருக்கும் உத‌வ‌ முடியும் என்ற‌து. மேலும், நிற‌த்தில் என்ன‌ இருக்கிற‌து.. உத‌வுவ‌தே முக்கியம் என்ற‌து. குழ‌ந்தைக்கு த‌ன் நிற‌த்தின் மேல் பெருமை உண்டாகிய‌து. தேவ‌தையிட‌ம் த‌ன் நிற‌த்தை மாற்ற‌ வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட‌து"

 இது தான் நான் சொன்ன‌ க‌தை. கேட்ட‌வுட‌ன் என்னைக் க‌ட்டிக் கொண்டாள். அத‌ன் பின் நிற‌த்தைப் ப‌ற்றி பேச‌வில்லை. என் க‌தையைக் கேட்கும் கொடுமைக்கு ப‌ய‌ந்து கொண்டு இருக்கிறாளா என்று தெரிய‌வில்லை. ந‌கைச்சுவைக்குச் சொன்னாலும் என் ம‌ன‌தின் ஓர‌த்தில் என்றாவ‌து ஒரு நாள் திரும்ப‌வும் வ‌ரும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிற‌து.

16 comments:

 1. மிக நல்ல கதை...உங்களை அம்மாவாக அடைந்ததற்கு உங்க குழந்தை மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்


  வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி மதுரை தமிழன்

   Delete
 2. குழந்தை இப்படிப் பேச எது தூண்டியிருக்கும்?? நல்ல கதை தியானா.
  -/Agila

  ReplyDelete
 3. குழந்தை இப்படிப் பேச எது தூண்டியிருக்கும்? நல்ல கதை தியானா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அகிலா.. நான் கேட்டுப் பார்த்தேன்..சரியான பதில் கிடைக்கவில்லை.
   அவள் வகுப்பில் ஆறு இந்திய குழந்தைகள் உள்ளன. எங்கள் வீட்டிற்கு விளையாட வரும் பொழுது நிறத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு இருக்கிறேன். குழந்தைகள் தமக்குள் பேசியது என்று நினைக்கிறேன். மற்றொன்று நம் இந்திய மக்கள் என் இரு குழந்தைகளையும் எப்பொழுதும் ஒப்பிடுவதுமாகும்.

   Delete
 4. நல்ல கதை... கதையும் மையக் கருத்தை குழந்தை முழுமையாக புரிந்து கொண்டால் தான்...

  அனைத்திற்கும் காரணம் இந்த ஒப்பீடு...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை திண்டுக்கல் தனபாலன்.. நன்றி வருகைக்கு..

   Delete
 5. மிக அழகாகப் புரிய வைத்துள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமலக்ஷ்மி மேடம்

   Delete
 6. குழந்தைகள் மனதில் எத்தனை கேள்விகள்? நீங்கள் சொன்ன பதில் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
 7. நன்றி வெங்கட்

  ReplyDelete

 8. நிறத்தை வைத்துக் கேள்வி கேட்பதை பெரியவர்கள் நிறுத்த வேண்டும் தியானா..நம் மக்கள் புரிந்துகொள்வதில்லை..நல்ல கதை..தீக்ஷு புரிந்திருப்பாள், இப்பொழுது இல்லை என்றாலும் ஒன்று இரண்டு வருடங்களில்...வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உண்மை கிரேஸ்..அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை..வருகைக்கு நன்றி..

   Delete
 9. இந்த கலர்தான் எவ்வளவு பாதிக்குது இல்ல!! இப்போ பப்புவுக்கு கலர் போயிட்டு, 'அழகு' கான்ஷியஸ்!! வீட்டுல அதை பத்தி நாம எதுவும் பேசுறது இல்லன்னாலும்...:‍( இப்பவே கண்ணாடி முன்னால நின்னு ஒரே அழகு ரசிக்கும் படலம்!!

  உங்க போஸ்ட் நல்லாருக்கு.

  ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost