Wednesday, April 17, 2013

இலையில் த‌ண்ணீர் செல்லுமா?

நேற்றைய‌ ப‌திவின் முடிவில் இலையில் த‌ண்ணீர் க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌தா என்ப‌தை ஒரு சோத‌னையின் மூல‌ம் செய்தோம் என்று செல்லியிருந்தேன். நாங்க‌ள் முன்பே பூக்காம்பு த‌ண்ணீர் க‌ட‌த்துவ‌தை சோதித்திருந்தோம். அதே வ‌ழியில் இலைக்கும் செய்தோம். ஆனால் இந்த‌ முறை ச‌ற்று வித்தியாச‌ப்ப‌டுத்த‌ இலையின் ந‌டுவில் வெட்டிச் செய்தோம்.

தேவையான‌ப் பொருட்க‌ள்:

1. ஒர் இலை ‍- நாங்க‌ள் Lettuce இலை எடுத்துள்ளோம். முட்டைக்கோஸின் இத‌ழ் (இத‌ழ் என்றா சொல்ல வேண்டும்?) கூட‌ எடுத்துக் கொள்ள‌லாம்.

2. த‌ண்ணீர்

3. இர‌ண்டு கோப்பைக‌ள்

4. க‌ல‌ரிங்

செய்முறை:


1. இர‌ண்டு கோப்பைக‌ளிலும் த‌ண்ணீர் எடுத்து, வெவ்வேறு வ‌ண்ண‌ க‌ல‌ரிங் சேர்க்க‌வும். நாங்க‌ள் ப‌ச்சை ம‌ற்றும் ஊதா எடுத்துக் கொண்டோம்.

2. இலையின் ந‌டுப்ப‌குதியில் க‌த்தியால் வெட்ட‌வும். இர‌ண்டாக இலையைப் பிரிக்க‌ வேண்டாம். இறுதியில் 2 இன்ச் விட்டு விட‌வும். இலை பிரிந்து இருக்கும், ஆனால் இர‌ண்டு துண்டுக‌ளாக இருக்காது.

3. பிரிந்த‌ ப‌குதியை கோப்பைக்குள் விட‌வும். இர‌ண்டு கோப்பைக்குள்ளும் இலை இருக்கும்.


4. ஆறு ம‌ணி நேர‌த்தில் ப‌ச்சை நிற‌த் த‌ண்ணீரிலிருந்த‌ இலை பாக‌த்தில் ப‌ச்சை நிற‌ப் புள்ளிக‌ள் தோன்றின‌. ஊதா நிற‌த் த‌ண்ணீரிலிருந்த‌ இலை பாக‌த்தில் ஊதா நிற‌ப் புள்ளிக‌ள் தோன்றின‌.

5. நாங்க‌ள் மூன்று நாட்க‌ள் வைத்திருந்தோம். இலைக‌ளிலும் த‌ண்ணீர் செல்வ‌தை அறிந்து கொண்டோம்.

புகைப்ப‌ட‌த்தில் நிற‌ங்க‌ள் ந‌ன்றாகத் தெரிய‌வில்லை... அப்ப‌டிச் சொல்லிச் சமாளிச்சுக்கிறேன்...போட்டோ எடுக்க‌த் தெரிய‌லையேனு யாரும் சொல்ல‌க்கூடாது பாருங்க‌..




விள‌க்க‌ம்:

விளக்க‌ம் ஆங்கில‌த்தில் கொடுப்ப‌து எளிதாக‌ இருக்கிற‌து.
  
Veins of the leaves are made up of bundles of vascular tubes. There are two types of vascular tubes -  xylem tubes and a phloem tubes. Xylem tubes transport water and minerals upward from the roots through the plant. Phloem tubes transport water and food manufactured in the plant's leaves throughout the plant. In this experiment, we saw the results of colored water moving through xylem tubes.
 
இந்த‌ இரு எளிமையான‌ சோத‌னைக‌ள் மூல‌ம் நிறைய‌ தெரிந்து கொண்டோம்.

10 comments:

  1. நன்று நன்று தியானா...நான் சமைப்பது எப்படியோ செடி சமைப்பது நன்றாய்ப் புரிந்தது :)

    ReplyDelete
    Replies
    1. கிரேஸ், இங்கேயும் அப்படித் தான்.. மறுமொழிக்கு நன்றி..

      Delete
  2. அருமையாகச் செய்து காட்டியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி மேடம்..

      Delete
  3. நல்லா முயற்சி தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவியாழி கண்ணதாசன்..

      Delete
  4. ஒவ்வொரு பகிர்வும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தனபாலன்..

      Delete
  5. அட புதியதாய் பல முயற்சிகள்......
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ந‌ன்றி வெங்க‌ட்..

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost