Friday, September 26, 2008

One-to-one correspondence & AB Pattern - கணிதத்தின் அடிப்படைகள்

கணித அடிப்படையின் முக்கியமானதான - One-to-One correspondence and Pattern formation இரண்டையும் வீட்டிலேயே எளிய பயிற்சிகள் மூலம் உணர்த்த முயற்சி செய்தோம்.

எண்ணுவதற்கு அடிப்படை One-to-One correspondence. இரண்டு குழுவில் (2 sets) எந்த குழுவியில் அதிக பொருட்கள்(Members of the set) இருக்கின்றன என்பதை இரண்டு முறையில் செய்யலாம். ஒன்று - இரண்டு குழுவிலுள்ள பொருட்களையும் தனி தனியாக எண்ணி எதில் அதிகமாக உள்ளது என்று கண்டுபிடித்தல். மற்றொன்று One-to-One correspondence. முதலில் ஒரு குழுவிலிருந்து ஒரு பொருளை எடுத்து வைக்க வேண்டும். அதற்கு correspondingஆக மற்றொரு குழுவிலிருந்து ஒரு பொருளை எடுத்து வைக்க வேண்டும். இப்படியாக வைத்துக் கொண்டு வரும் பொழுது எந்த குழுவில் பொருட்கள் மீதமுள்ளதோ, அதில் அதிகமாக இருப்பதாக அர்த்தம்.

Brainvita என்று ஒரு விளையாட்டு உள்ளது. அந்த விளையாட்டு போர்டில் சிறு குழிகளும், குழி மேல் வைப்பதற்கு கோலி குண்டுகளும் இருக்கும். அது போலுள்ள ஒரு சாதனத்தை எடுத்துக் கொண்டேன். ஒவ்வொரு குழியிலும் ஒரு கண்ணாடி கல்லை வைக்க செய்தேன். இது One-to-One correspondence கற்று தருவதுடன் கவனம் (Concentration) வளர்க்கிறது.

அடுத்தது Pattern. Patterns help children to analyze relationship and make predictions. ஒரே எண்ணிக்கையிலான கற்கள் மற்றும் பட்டன்களையும் எடுத்து கொண்டேன். ஒரு கல், ஒரு பட்டன் என்று மாறி மாறி வைக்க வேண்டும். இதில் மாண்டிசோரி சாதனங்களில் உள்ளது போன்ற Build in Error of Control உள்ளது. அதாவது வைக்கும் பொழுது தவறு செய்து விட்டால், மீதம் இருக்கும் பொருளைக் கொண்டு குழந்தைகளே தவறை சரி செய்து கொள்வார்கள். தீஷு இரண்டு விளையாட்டுகளையும் ரசித்து செய்தாள்.

No comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost