Tuesday, June 23, 2009

ஸைலன்ஸ்...

புதுகைத்தென்றலின் ஐடியாப்படி, கார்ட்ஸ் & கவுண்டர்ஸ் செய்வது போல் வரிசையாக 1 முதல் 10 வரையிலான ஃப்லாஷ் கார்டுகளை அடுக்கி, அதன் கீழ் அதன் மதிப்புக்கு ஏற்றவாறு சோழிகளை அடுக்கி ஆட் ஈவன் சொல்லித் தந்தேன். முதலில் கார்டுகளை தரையில் பரப்பி, அதை வரிசைப்படி அடுக்கச் சொன்னேன். 55 சோழிகள் எடுத்து வைத்திருந்தேன். முடித்தவுடன் 1 சோழி எடுத்து ஒன்று எண் ஃப்லாஷ் கார்டுக்குக் கீழ் வைத்தேன். பின் தீஷுவே அனைத்தையும் செய்தாள். பின் ஒன்றை காட்டி ஒன்று தனியாக உள்ளது ஆட் என்றேன். அடுத்ததைச் சொல்லச் சொன்னேன். ஈவன் என்றாள். ஆனால் சோழிகள் அதிகமாக அதிகமாக அவளுக்குச் சொல்லுவதற்கு
நேரமானது. அதனால் ஆட் ஈவன் மாறி மாறி வருவது அவளுக்குத் தெரியவில்லை. பின் நான் அவள் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக மெதுவாக சொல்லிக் காட்டினேன். மாறி மாறி வருது என்றாள். சில நாட்களுக்கு விருப்பமாக செய்வாள். நன்றி தென்றல். இதுப் போல் கைடிங் கண்டிப்பா எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

மாண்டிசோரி ஸைலன்ஸ் கேம் போல் அமைதியாக சில நிமிடங்கள் உட்கார வைக்கலாம் என்று நினைத்தேன். ஸைலன்ஸ் கேமில் அனைத்து குழந்தைகளும் அமைதியாக உட்கார்ந்துயிருப்பர். சிறிது அசைவு கூட இல்லாமல் எங்கும் நிசப்தம். டைரட்டரஸ் ஒரு குழந்தையின் பெயரை மெதுவாக அழைத்தவுடன், அது அடுத்தவருக்குத் தொந்தரவு தரமால் மெதுவாக எழுந்து போய் விடும். இவ்வாறாக அனைத்து குழந்தைகளின் பெயர்களும் அழைக்கப்படும். படித்தவுடன் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும் சிறு குழந்தைகளுடன் இது சாத்தியமா என்று தோன்றியது. முதல் நாள் மாலை கண்ணை மூடி அமைதியாக உட்கார் என்றால் ஒரு விநாடி கூட இருக்க முடியவில்லை. மறு நாள் காலையும் அதேப் போல் சென்றது. மாலை நான் உட்கார்ந்து இருப்பதேப் போல் சில விநாடிகள் உட்கார்ந்து இருந்தாள். ஆனால் அசைந்து கொண்டே இருந்தாள். தினமும் செய்து சிறிது சிறிதாக பழக்கப்படுத்தலாம் என்று நினைத்திருக்கிறேன். மனதிற்கு அமைதியும், கவன ஒருங்கிணைப்புக்கும் மிகவும் ஏற்றது.

இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் சூப் கொண்டுவருவதைப் பற்றிப் படித்திருந்தேன். அதேப் போல் தண்ணீரைத் தூக்கி நடந்து வரச் செய்தேன். முதலில் சிறு குழியுள்ளத் தட்டில் தூக்கச் சொன்னேன். சிந்தாமல் கொண்டு வர முடியவில்லை. அதனால் சற்றே பெரிய கிண்ணத்தில் அரை கிண்ணம் மட்டும் தண்ணீர் கொடுத்தேன். சிந்தாமல் கொண்டு வந்தாள். ஆனால் சிறிது விநாடிகளில் வெயிட்டாயிருக்கு என்று கீழே வைத்து விட்டாள்.

நேற்று முதல் முறையாக வரிசையாக இரண்டு இலக்க எண்களை எழுத வைத்தேன். 50 வரை எழுதினாள். அவளுக்கு கை வலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எனக்குப் பிஞ்சி கைகளை இதற்கு மேல் உழைக்க
வைக்க விருப்பம் இருக்கவில்லை. போதும் என்று சொல்லிவிட்டேன்.

3 comments:

  1. தீஷூவிற்கு வாழ்த்துகள்! //ஆனால் எனக்குப் பிஞ்சி கைகளை இதற்கு மேல் உழைக்க
    வைக்க விருப்பம் இருக்கவில்லை. போதும் என்று சொல்லிவிட்டேன்//

    :-)

    ReplyDelete
  2. இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் சூப் கொண்டுவருவதைப் பற்றிப் படித்திருந்தேன். அதேப் போல் தண்ணீரைத் தூக்கி நடந்து வரச் செய்தேன். முதலில் சிறு குழியுள்ளத் தட்டில் தூக்கச் சொன்னேன். சிந்தாமல் கொண்டு வர முடியவில்லை.//

    அருமை. இந்த வகைகளை எசன்ஸ் ஆஃப் பிராக்டிகள் லைஃப் எனும் பெயரில் சொல்லிகொடுப்போம். அதை பேரண்ட்ஸ் கிளப்பில் வாழ்க்கைக்கு உதவும் கல்வி எனும் பெயரில் தொடராக எழுதிக்கொண்டிருக்கிறேன். E.P.L எனும் லேபிலில் தேடினால் கிடைக்கும்.

    உங்கள் முயற்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிறைய்ய பகிர்ந்துகொள்ளுங்கள். இவை பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  3. நன்றி முல்லை.

    நன்றி புதுகைத்தென்றல். கண்டிப்பாக பேரண்ட்ஸ் கிளப்பில் பார்க்கிறேன்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost