மெழுகால் ஒரு லைட் கலர் பேப்பரில் வரைந்து அதன் மேல் வாட்டர் கலர் பெயிண்டிங் செய்தால்(பெயிண்ட தண்ணீராக இருந்தால் நன்றாக வருகிறது), மெழுகால் வரைந்தது நன்றாகத் தெரியும். இதை நாங்கள் முன்பே செய்திருக்கிறோம். அதன் பின் இப்பொழுது தான் செய்கிறோம். சென்ற முறை Crayons உபயோகித்தோம். இந்த முறை பயன்படுத்தப்படாமல் இருந்த மெழுகு. தீஷுவே ஒரு படம் வரைந்து அதன் மேல் செய்தாள். என்னை நான்கு ஐந்து படங்கள் வரைய சொல்லி அதன் மேலும் செய்து கொண்டிருந்தாள். மறுநாள் காலை எழுந்தவுடன் அவளாகவே செய்ய ஆரம்பித்துவிட்டாள். குழந்தைகள் விருப்பமாக செய்வார்கள் என்று எண்ணுகிறேன்.
மீண்டும் ஒரு தண்ணீர் ஊற்றும் செயல் முறை. இந்த முறை நான் டம்பளரில் ஒரு டேப் ஒட்டி வைத்துவிட்டேன். நான் டேப் ஒட்டிய அளவு வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். அது அவளுக்கு விருப்பமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இரண்டு முறை செய்தவுடன் ஆர்வமிருக்கவில்லை.
அதனால் முறையை மாற்றி செம்பிலிருந்து நான்கு டம்ளர்களுக்கு ஊற்ற வைத்தேன். செம்பில் நான்கு டம்ளர் அளவு தண்ணீர் இருந்தால், தூக்குவதற்கே சிரமப்பட்டாள். ஆனால் இது கொஞ்சம் விருப்பமாக செய்தாள். அவள் ஆர்வமின்மையால் சிறிது நாட்களுக்கு ஊற்றும் செயல்முறைகள் செய்ய வேண்டாம் என்று நினைத்திருக்கிறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............இப்டில்லாம் ஓவர் நல்ல அம்மாவா இருந்தா எனக்கு காண்டாவும்:):):)
ReplyDelete