சிறு வயதில் புளியங்கொட்டைகளை வைத்து விளையாண்ட ஒத்தையா இரட்டையாவிலிருந்து வந்தது இந்த ஐடியா. பல்லாங்குழி சொல்லிக் கொடுக்க அம்மா வீட்டிலிருந்து சோழி எடுத்து வந்திருந்தேன். அதை வைத்து ஆட் (odd) ஈவன் (even) சொல்லிக் கொடுத்தேன். முதலில் பத்து சோழிகள் எடுத்துக் கொண்டோம். அதில் சிலவற்றை கையில் எடுத்துக் கொண்டு இரண்டு இரண்டாக வைக்க வேண்டும். கையில் ஒன்று மீதமிருந்தால் ஆட் இல்லையென்றால் ஈவன் என்றேன். விருப்பமாக செய்ததால் பத்திலிருந்து சோழிகளை அதிகப்படுத்தினேன். ஆட் என்று சொல்லாமல் ஆடன் என்கிறாள். அவளுக்கு எப்பொழுதும் ஆட் வர வேண்டும் (கையில் மீதம் இருப்பது தான் பிடித்திருக்கிறது போல்).
வெகு நாட்களாக செய்ய நினைத்தது - பாட்டன்ஸ் (Patterns). இரு வகை காயின்ஸ்களை எடுத்துக் கொண்டு, ஒன்று மாற்றி ஒன்றாக சிலவற்றை வைத்து விட்டு தீஷுவைத் தொடரச் சொன்னேன். ஒரளவு செய்தவுடன் ABC பாட்டனுக்கு மூன்றையும் மாற்றி மாற்றி வைத்தேன். செய்கிறாள் ஆனால் என் உதவி தேவைப்படுகிறது.
மூன்று இலக்க எண்கள் வாசிக்கிறாள். சில நேரங்களில் நடுவில் பூஜ்ஜியம் இருந்தால் தப்பு வருகிறது. மற்றபடி ஓகே.
Games to play with 3 year old without anything
2 years ago
//ஆட் என்று சொல்லாமல் ஆடன் என்கிறாள். அவளுக்கு எப்பொழுதும் ஆட் வர வேண்டும் (கையில் மீதம் இருப்பது தான் பிடித்திருக்கிறது போல்).//
ReplyDelete:-) கலக்கல்!
பல்லாங்குழி சோழிகள் எங்க வீட்டுலேயும் ஹிட்! ஆனா ஒன்னொன்னா போட்டு விளையாட ரொம்ப பிடிக்கும்! ;-)
ReplyDeleteநாங்கள் மாண்டிசோரியில் 10 வரை கார்ட் + பட்டன் வைத்து ஆட் & ஈவன் சொல்லிக்கொடுப்போம்.
ReplyDeleteஉங்கள் முயற்சிக்குபாராட்டுக்கள். பத்துவரை கார்ட் வைத்து அதன் கீழ் சோழி வைத்து விளையாடினால் எண்ணின் உருவம் மனதில் பதியும். இது என் ஐடியா
நன்றி முல்லை.
ReplyDeleteநல்ல ஐடியா தென்றல்.. நாங்களும் அதே மாதிரி செய்து பார்க்கிறோம்.
சூப்பர் :)
ReplyDelete//
(கையில் மீதம் இருப்பது தான் பிடித்திருக்கிறது போல்).//
:)))
//
ReplyDeleteபத்துவரை கார்ட் வைத்து அதன் கீழ் சோழி வைத்து விளையாடினால் எண்ணின் உருவம் மனதில் பதியும். இது என் ஐடியா
//
நல்ல ஐடியா! பின்னாடி யூஸ் ஆகும் :)