Wednesday, June 3, 2009

திறந்தாச்சு ஸ்கூலு

தீஷுவுக்கு ஜூன் ஒன்று முதல் பள்ளி ஆரம்பித்து விட்டது. அவளுக்கும் மூன்று மாதமாக வீட்டிலிருந்து போர் அடித்து விட்டது. இந்த வாரம் தினமும் ஒரு மணி நேரம் தான் ஸ்கூல். அதன் பின் மெதுவாக அதிகமாக்கலாம் என்றார்கள். தீஷு க்ளாஸில் 25 பேர். அதில் திங்கள் 7 பேர் மற்றும் புதன் 9 பேர் என 16 குழந்தைகளை அழைத்திருக்கிறார்கள் (மொத்தமாக அழைத்தால் அவர்களால் பார்த்துக் கொள்ள முடியாதாம்). மீது உள்ளோர் அடுத்த திங்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன். ஒரு மணி நேரம் தான் போவதால், சில ஆக்டிவிட்டீஸ் செய்ய மட்டும் வைக்கின்றனர். தீஷு தினமும் ஏன் சாங்க்ஸ் பாடல? கதை சொல்லல என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள். இன்று 9 புது குழந்தைகள் வந்ததால் இவளை சென்ற வருடமே பள்ளியில் சேர்ந்த பழைய குழந்தைகள் அறையில் விட்டுவிட்டனர். அங்கு ஏதோ பாட்டு பாடியிருக்கிறார்கள். அவளுக்கு மிகுந்த சந்தோஷம். யாருக்கோ பிறந்த நாள் என்று சாக்லேட்டும் வாங்கி வந்திருந்தாள்.

தீஷுவிற்கு பொதுவாக 9:30 முதல் 12:30 வரை பள்ளி. தீஷுவிற்கு மதியம் தூங்கும் பழக்கம் இருக்கிறது. மாலையில் 2 மணி நேரம் சைக்கிள், பார்க் என்று எங்கள் பொழுது போகும். இனி எங்கள் ஆக்டிவிட்டீஸ்கான நேரம் குறைவு. இப்பொழுது போல் எங்களால் 2 மணி முதல் 3 மணி வரை செலவிட முடியாது. முடிந்தால் தினமும் அரை மணி நேரம் செலவிடலாம் என்று நினைக்கிறேன். எனக்கு இதில் வருத்தம் தான்.

3 comments:

  1. :-) தீஷூவிற்கு வாழ்த்துகள்!! ஒரு இனிய வருடத்தை பள்ளிக்கூடத்தில் கடக்க வாழ்த்துகிறேன்! ஹ்ம்ம்..உங்கள் கஷ்டம் புரிகிறது! பப்புவிற்கு அடுத்த வாரத்திலிருந்து!!

    ReplyDelete
  2. வாழ்த்துகள் தீஷு!

    வருத்தப் படாதீங்க தீஷு அம்மா... பள்ளி செல்வதும் சிறந்த ஆக்டிவிடி தான் :) வெளி உலகம் பிள்ளைகளுக்கு நிறையக் கற்றுத் தருகிறது :)))

    ReplyDelete
  3. நன்றி முல்லை. பப்புவிற்கு எங்கள் வாழ்த்துகள்..

    ஆமாம் ஆகாயநதி. வெளி உலகம் குழந்தைகளுக்கு நிறையக் கற்றுத் தருகிறது. ஆனால் அதில் என் பங்கு குறைவு என்பது தான் வருத்தமே..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost