1.
"தீஷு பல் தேய்கிறீயா?"
"கொஞ்ச நேரம் ஆகட்டும்.."
"ஏன்?"
"எனக்கு அப்ப தேச்சாத் தான் சந்தோஷமா இருக்கும்.."
2.
திங்கள் காலை எழுந்தவுடன்,
"இன்னைக்கு ஸ்கூலா?"
"ஆமா.."
"என்னைக்கு எனக்கு அடுத்து லீவு விடுவாங்க?"
(நான் மனதுக்குள்) அதுக்குள்ளேயும் இப்படி நினைக்க ஆரம்பிச்சாச்சா?
3.
சாப்பிடும் பொழுது நானும் என் கணவரும் முக்கியமான விஷயம் பேசிக் கொண்டு இருந்தோம். அவளுக்குப் புரியவில்லை என்றவுடன், "சாப்புடுறப்ப பேசக்கூடாது, Bad habit, பேசாம சாப்பிடுங்க"
4.
வேலை முடித்து உட்காரும் முன்
"பாத்ரூம் போகனுமா?"
"இல்லை.."
"பாத்ரூம் போகனுமா?"
"வேண்டாஆஆஅம்"
உட்கார்ந்தவுடன் 5-10 வினாடிகளில்
"பாத்ரூம் போகனும்"
(கோபமாக)"இப்பத்தான இரண்டு தடவக் கேட்டேன்.."
"வர்றப்பத்தான சொல்ல முடியும்"
5.
அப்பா தன் லஞ்ச் பையையும், தீஷு ஸ்கூல் பையையும் வைத்துவிட்டு வண்டி வரை சென்றுவிட்டனர். நான் எடுத்துக் கொண்டு சென்று
"உங்க இரண்டு பேருக்கும் பையா எடுத்துட்டு போக முடியாதா?"
அப்பா: "தீஷு, நீ ஏன் எடுத்துட்டு வரல?"
தீஷு: "நானும் உன்னைய மாதிரி தான்"
அப்பா: "என்ன என்னைய மாதிரி?"
தீஷு: "உன்னைய மாதிரியே மறந்துட்டேன்.."
அப்பாவால் ஒன்றும் பேச முடியவில்லை.
6.
"அப்பா, நாம டி.வி வாங்கினா இந்த இடத்தில் வைப்போம்"
"சரி"
"அங்க வைச்சா ஃப்ரிட்ச் இடிக்கும், அதனால இங்க வைப்போம்"
"சரி"
"இங்க எறும்பு வீடு இருக்குனு நினைக்கிறேன்..அப்புறம் எறும்பால போக முடியாது.. அதனால இந்த ஸைடு வச்சுடுவோம்"
எங்க வீட்டுல ஒரு டேகரேட்டர் இருக்காருனு நினைச்சிக்கிட்டேன்.
7.
தேதியைக் கிழித்து, தாளைத் தன் டிரெஸ் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே
"ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து இந்தத் தாளை வச்சி விளையாடுவேன் அப்பா"
"அப்புறம் எதுக்கு ஸ்கூல் டிரெஸுல வச்சு ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போற?"
இப்படி கேள்வியை எதிர்பார்க்காததால் சற்று யோசித்துவிட்டு
"வீட்டிலேயே வைச்சிட்டுப் போனா எங்கயாவது தொலஞ்சிடுச்சுனா.. அதான் பத்திரமா எடுத்துட்டுப் போறேன்.."
8.
காலையில் எழுந்தவுடன் ஒரு பையன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படத்தைப் பேப்பரில் பார்த்து,
Drinking Milk
Eating Food
Going School
Eating snacks
Going Sleep
என்று அவளேப் பாட்டை இயற்றி பாடிக்கொண்டிருந்தாள். அவள் மனதில் அன்றைய நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டுயிருந்திருக்கும்.
9.
அடுத்து பிரெஷ் பண்ணும் பொழுது
" Bacteria Bacteria go away"
"Bacteria Bacteria go away"
(Rain Rain go away) டியூனில் பாடினாள்..
Games to play with 3 year old without anything
2 years ago
அனுபவித்த தருணங்கள், கவர்ந்தன :-)
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
எதன்னு சொல்ல!!!
ReplyDeleteஇனிமையான தருணங்களை பகிர்ந்துகொண்டதுக்கு நன்றி.
தீஷுபாப்பாவுக்கு அன்பு முத்தங்கள்
குட்டிப்பொண்ணு தீஷுவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாய் எட்டடின்னா குட்டி பதினாறடி பாயத்தானே செய்யும்.தீஷு அப்பாதான் பாவம்.
எதிர்கால கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete1, 4 & 7 - அனுபவிச்சு சிரிச்சேன் :)-
ReplyDeleteThe moments are too goood..
ReplyDeleteநன்றி பைத்தியக்காரன்
ReplyDeleteநன்றி புதுகைத்தென்றல்
நன்றி துபாய் ராஜா
நன்றி சுந்தர்
நன்றி அமித்து அம்மா
நன்றி Dhanasakthi