Wednesday, June 3, 2009

மருந்துக்கு ஒன்று

தீஷுவிற்கு சல்லடை உபயோகப்படுத்தப் பழக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்னால் சாதம், காய்கறி, எண்ணெய் வடிக்கப் பயன்படுத்தப்படும் கண் தட்டை (நாங்கள் இப்படிச் சொல்லுவோம் - வேறு பெயர் தெரியவில்லை) பழக்க இரண்டு காரணங்கள். ஒன்று - சல்லடையைப் பிடிக்க கைபிடி கிடையாது. ஆகையால் கைகளை விரித்து இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் அசைக்க வேண்டும். தீஷுவிற்கு இவ்வாறு செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இரண்டாவது காரணம் - எங்கள் வீட்டில் சல்லடை இல்லை.


கண்ணாடி கற்களை ரவையில் போட்டு விட்டேன். இரண்டையும் பிரிக்க வேண்டும். கலவையை கண் தட்டில் போட்டு, கைபிடியை சிறிது ஆட்ட வேண்டும். ரவை ஏன் விழுது? கல்லு ஏன் விழல? போன்ற கேள்விகள் கேட்டு அவளே பதிலும் சொல்லி விட்டாள். மிகவும் விரும்பமாக செய்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். கீழே சிந்திய ரவையையும் அள்ளி வைத்து விட்டாள். இது கைகளுக்கானப் பயிற்சி. கவன ஒருங்கினைப்புக்கும் ஏற்றது.




தீஷு ஊற்றும் பயிற்சி (Pouring activities) மிகவும் எளிதாக செய்கிறாள். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பாலை ஊற்றி ஆற்ற பழகி விட்டாள். அதன் அடுத்த படி. சிறு பாட்டிலிருந்து ஸ்பூனுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். (சென்ற முறை மருந்து ஊற்றிய பொழுது இந்த ஐடியா தோன்றியது). அப்புறம் ஸ்பூனிலிருந்து கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கு மிகுந்த கவனம் தேவை. முதலில் ஸ்பூன் நிறைந்தவுடன் நிறுத்த முடியவில்லை. அதன் பின் சிறிது சிறிதாக ஊற்றினால் நிறுத்த முடிகிறது என்பதை கண்டுபிடித்து விட்டாள். பாட்டில் காலியானவுடன், கிண்ணத்திலிருப்பதை மீண்டும் பாட்டிலில் ஊற்ற வேண்டும். பாட்டில் வாய் சிறிதாகயிருந்ததால் ஒவ்வொரு முறையும் ஆரம்பிக்கும் பொழுது சிறிது வெளியே ஊற்றினாள். அப்புறம் கிண்ணத்தை நகற்றி சரியாக ஊற்றினாள். இதுவும் மிகவும் பிடித்த செயல்முறை.

5 comments:

  1. சூப்பர் :)))

    இதெல்லாம் நான் எப்போ சொல்லித் தரட்டும்...

    ReplyDelete
  2. நான் தீஷுவிற்கு இரண்டு வயதில் ஆரம்பித்தேன். ஆனால் அப்பொழுது அரை மணி நேரம் மட்டுமே செய்வோம். மெதுவாக அதிகரித்து இப்பொழுது இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை செய்கிறோம். பொழிலனோட ஆர்வத்தைப் பொறுத்தது. ஒன்றரை வயதில் முயற்சித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  3. This is my first comment. I have a daughter who is 2.9 years old.

    Four days before I tried this activity by mixing toor dal with rava and gave her the seiver. But she was more interested in playing with rava than using the seiver:-))

    ReplyDelete
  4. நீங்க சொல்லிருக்க பயிற்சியெல்லாம் நானா, கிரியேட்டிவிட்டியோட செஞ்சா, எங்கம்மா நாலு சாத்துதான் சாத்தினாங்க:(:(:( இந்தக்கால அம்மாக்கள் எவ்ளோ நல்லவங்களா இருக்கீங்க:):):)

    ReplyDelete
  5. இந்தத் தண்ணி சரியா பாட்டிலில் ஊத்தற பழக்கம்தான் என்னைய பயங்கரமா கவர்ந்திடுச்சி, இப்போக் கூட நான் பாக்குற பல பேரால கீழ சிந்தாம தண்ணி ஊத்த முடியாது. சூப்பர்:):):)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost