1. "அம்மா, இன்னைக்கு எங்க ஸ்கூல சாக்லேட் கொடுத்தாங்க"
"எதுக்குக் கொடுத்தாங்க?"
"சாப்பிடத்தான்"
2. "தீஷு, கம்ப்யூட்டர மிதிக்காத"
"ஏன்மா க்ராஷ் ஆகிடுமா?"
3. அவளுக்கும், அவள் அப்பாவுக்கும் பிடித்த விளையாட்டு, ஏதாவது பாட்டை நானா நானா என்று அந்த பாட்டின் மெட்டுலேயே பாடுவர். அடுத்தவர் பாட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். தீஷு ஏதோ மெட்டில் பாடிக் காண்டினாள். அவள் அப்பாவும் நான்கு, ஐந்து முறை முயற்சித்து விட்டு தெரியல என்றார். தீஷு கூலாக "எனக்கும் தெரியல.. சும்மா சொன்னேன்" என்றாள்.
4. தீஷு நான்கு டம்பளர்களை ஒன்றுக்குள் ஒன்றாக போட்டுக் கொண்டிருந்தாள். கடைசி டம்பளர் சரியாக பொருந்தவில்லை. ஏன் என்றதற்கு நீ சொல்லு என்றேன்.
"அது பெருசா இருக்கு.. ஆமா எப்ப சிறுசா ஆகும்"
"எதுவுமே சிறுசா ஆகாது"
"விளக்கமாறு (வீடு கூட்ட பயன்படுத்துவது) சிறுசா ஆகுமா ஆகாதா?"
"???"
Games to play with 3 year old without anything
2 years ago
தீஷூ - கடைசி கேள்வி சான்ஸே இல்ல
ReplyDeleteயெப்படி ரூம் போட்டு யோசிப்பீங்களோ
//"எதுக்குக் கொடுத்தாங்க?"
ReplyDelete"சாப்பிடத்தான்"//
:-))
//"விளக்கமாறு (வீடு கூட்ட பயன்படுத்துவது) சிறுசா ஆகுமா ஆகாதா?//
அவ்வ்வ்!
நன்றி அமித்து அம்மா. அவ கேள்வி கேட்க ரூம் போட்டு யோசிக்கிறாளா என்று தெரியவில்லை. ஆனா நான் பதில் சொல்ல ஹோட்டலே போட்டு யோசிக்க வேண்டியிருக்கு..
ReplyDeleteநன்றி முல்லை.
என்னோட பின்னூட்டங்களைக் காணோமே...
ReplyDelete:-))
ReplyDeleteசுட்டிப் பொண்ணே!!! சுட்டிப் பொண்ணே!!!