Sunday, June 7, 2009

எரிமலை எப்படி வெடிக்கும்?

நேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்டுயிருப்பதைக் கேள்விப்பட்டவுடன் அப்பாவும் தீஷுவும் பட்டம் ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஃப்ரெண்டோட பட்டம் காத்து நிறைய அடிச்சதுனால ஒடிஞ்சு போனது தெரிந்தவுடன், கனமான பாலீத்தின் பேப்பர், மூண்ணு அடுக்கு பேப்பர் என வெயிட்டான பட்டம் தயார். மூன்று மாடி ஏறிப் போய் பட்டத்தப் பறக்க விட்டாத் தான் தெரியுது, வெயிட் பட்டத்தால் வெயிட்டத் தூக்கிக்கிட்டு மேல ஏற முடியவில்லனு. அதுல போட்டோ எடுக்க என்னைய வேற கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. மனந்தளராம வேறொரு பட்டம் ரெடி பண்ணிக்கொண்டு மாலையிலும் போய்விட்டிருக்காங்க. ஏதோ பறந்தது என்றும் கேள்வி. ஆனா மொத்தத்துல பட்டம் பெரிய flap.

Magical school bus ஸீரீஸில் இருக்கிற டைனோஸர்ஸ் புக்கில் எரிமலை (volcano) படம் ஒன்று இருந்தது. தீஷுவிற்குக் காட்டியவுடன், எப்படி வெடிக்கும், உள்ளிருந்து என்ன வரும் என்று ஆயிரம் கேள்விகள். எரிமலைப் பற்றிய ஏதாவது க்ராப்ட் கிடைக்குமா என்று தேடிய பொழுது, எளிதாகவே இருக்கும் ஒன்று கிடைத்தது. பேக்கிங் ஸோடாவை (Baking soda), வினிகருடன் (vinegar) கலந்தால் கர்பன் டை ஆக்சைடால்(cardbon-di-oxide) எரிமலை போல் வரும் என்று தெரிந்தது.



அப்பாவும் பொண்ணும் இரண்டு மூன்று வாரங்களாக இதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, நேரமின்மையால் செய்ய முடியாமல் போனது. நேற்று இரவு செய்தனர். ஒரு தட்டில் கிண்ணத்தை வைத்து விட்டனர். இந்த மாவை இதற்காகவே பத்திரபடுத்திருந்தேன். கிண்ணத்தைச் சுற்றி மாவை மலை போல் வைத்து விட்டனர். பின்பு தீஷு இரண்டு ஸ்பூன் பேக்கிங் ஸோடா கிண்ணத்தில் போட்டு விட்டாள். அதில் சிறிது கலரிங் சேர்த்துக் கொண்டாள். அதன் பின் வினிகர் ஊற்றியவுடன் எரிமலை பொங்கியது. தீஷுவிற்கு முதலில் நாங்கள் செயல்முறை விளக்கம் கொடுத்தவுடன் பயந்தாள். பார்த்தவுடன் பயம் நீங்கி விருப்பமாக ஸோடாவையுன், வினிகரையும் ஊற்றி ஊற்றி விளையாண்டு கொண்டிருந்தாள். குழந்தைகளுடன் செய்ய எளிதானது.

6 comments:

  1. கலக்கல் தீஷூ அம்மா! உங்க "டே வித் டேடி" செம ஐடியா! இந்த செய்முறை விளக்கத்தை(with steps/points) அம்மாக்கள் வலைப்பூவில் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்! நன்றி!

    ReplyDelete
  2. எரிமலை கூட வீட்டிலேயே செய்வீங்களா!

    ரொம்ப பெரிய ஆளுதான் நீங்க...

    தீஷுவிற்குக் காட்டியவுடன், எப்படி வெடிக்கும், உள்ளிருந்து என்ன வரும் என்று ஆயிரம் கேள்விகள்!!!

    தீஷு வளர்கிறாளே மம்மி

    ReplyDelete
  3. என்ன முல்லை பண்ணுறது? இந்த மாதிரி புது புது பெயர் வைச்சாத் தான் அப்பாவும் ஏதாவது செய்யனுமினு யோசிக்கிறாரு. கண்டிப்பா அம்மாக்கள் வலைப்பூவில் எழுதுறேன் முல்லை.

    எங்க வீட்டில அடிக்கடி எரிமலை வெடிக்கும் அமித்து அம்மா :-)

    ReplyDelete
  4. என்னன்னமோ செய்வீங்க போல... பேசாம உங்க கிட்ட சிஷ்யை ஆகிடலாம்னு ஒரு முடிவுல இருக்கேன்... :)

    ReplyDelete
  5. குழந்தைகளுடன் செய்ய எளிதான ஆர்வமான விளையாட்டுக்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost