தீஷுவிற்கு டிரேஸிங் செய்ய இப்பொழுது மிகுந்த ஆர்வம் இருக்கிறது. ப்ரொஜக்டரில் ஸ்லைட் (தீஷுவைப் பொருத்தவரை இது சி.டி) போட்டு, ஸ்லைட் படத்தைப் பெரிதாக்கி, படத்தை டிரேஸ் செய்வதை விருப்பமாக செய்ததால் நான் டிரேஸிங் பேப்பரால் செய்யக் கொடுத்தேன். கலரிங் செய்வதற்காக பிரிண்ட் அவுட் செய்ய வைத்திருந்த பூவை டிரேஸ் செய்ய வைத்தேன். ஓரளவு பூ வந்திருந்தது.
அடுத்து அந்த பூவின் வரை கோடுகளில் (outline) ஸேப்டி பின்னால் ஒட்டைப் போட்டாள். கையில் பேப்பரை வைத்துக் கொள்ள சிரமமாக இருந்ததால் தெர்மோக்கோல் மேல் பேப்பரை வைத்து விட்டேன். விருப்பமாக செய்யவில்லை. ஆனால் பென்சிலால் தெர்மோக்கோலில் வரைய பிடித்திருந்தது. அதை விருப்பமாக செய்தாள்.
மாண்டிசோரியின் தெர்மிக் பாட்டில்கள் போல் செய்ய வைக்கலாம் என்று தோன்றியது. பாட்டில்களை சூட்டின் அளவில் பிரிக்க வேண்டும் என்பது அதன் அடிப்படை. ஒரே வகையான ஆறு டம்ளர்களை எடுத்துக் கொண்டு, வெந்நீரை இரு டம்ளர்களிலும், தண்ணீரை இரு டம்ளர்களிலும், குளிர்ந்த நீரை இரு டம்ளர்களிலும் வைத்து விட்டேன். ஒரு டம்ளரைத் தொட்டு பார்த்து, அதன் ஜோடியைக் கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் விருப்பமாக திரும்ப திரும்ப செய்து கொண்டுயிருந்தாள். ஆனால் வெந்நீரில் சூடு தணிய ஆரம்பித்ததும், அதை ஊற்றும் (Pouring) ஆக்டிவிட்டியாக மாற்றிவிட்டாள். அதை மிகவும் விரும்பமாக செய்தாள். சலிக்காமல் டம்ளர்களிலும் பாட்டிலும் மாற்றி மாற்றி ஊற்றுவதை எப்படித்தான் ஒரு மணி நேரம் அவளால் செய்ய முடிந்ததோ.
இது ஒரு புத்தகத்தில் படித்தது. இரு கைகளிலும் பென்சிலைக் கொடுத்து வரைய செய்தல். இரண்டு கைகளும் எதிர் திசையில் வரைய வேண்டும். நிறைய வட்டங்கள் வரைந்தோம். ஆனால் சில நிமிடங்களில் ஆர்வமிருக்கவில்லை.

போரிங் ஆக்டிவிட்டி பிள்ளைகளுக்கு மிகவும் விருப்பமாக இருக்க காரணம் நாம் தண்ணீரில் விளையாட அதிகம் அனுமதிக்க மாட்டோமே.
ReplyDeleteஇரண்டு கைகளில் வரைதல் அருமையான முயற்சி. பாராட்டுகக்ள்
பூ நல்லா வந்திருக்கு தியானா! அந்த ரெண்டு கையிலேயும் பென்சில் படம் அழகு! ஆமா, போரிங்-ன்னா இப்பவும் பிடிக்கும் பப்புவிற்கு..ஆனா அது தண்ணியா இருக்கணும்! :-)
ReplyDelete