சென்ற தந்தையர் தினத்திற்கு, தீஷு தன் அப்பாவுக்கு 3டி கோலாஜ் செய்ததைக் கொடுத்தாள். அதில் அரிசி போன்றவை இருந்ததால், அவரால் அதை வெகு நாட்கள் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆகையால் அவருக்கு இந்த முறை நல்லதொரு பரிசாக கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
தீஷு 2 வயது முதல் செய்த பெயிண்டிங்களை தேதியிட்டு பத்திரப்படுத்தி வருகிறேன். அதில் சிலவற்றைக் கொடுக்கலாம் என்று எண்ணினேன். முன்பு "Book Making tips" புத்தகத்தில் எவ்வாறு பேப்பர்களை மடித்து புத்தகமாக செய்யலாம் என்ற செயல்முறைகளில் எனக்கு அக்கார்டியன் (Accordion) மிகவும் பிடித்திருந்தது. அது பேப்பரில் விசிறி செய்வதற்கு மடிப்பது போல் மடிக்க வேண்டும். சார்ட் பேப்பரில் மடித்து, அதில் அவளுடைய பெயிண்டிங்களை ஒட்டி விட்டு, தேதியினை எழுதிவிட்டேன். புத்தக வடிவில் ஒட்ட பெயிண்டிங்களை வெட்ட வேண்டியிருந்தது. வெள்ளை ஒரங்களை வெட்டிவிட்டேன்.
அதை முன் பக்கத்திலிருந்து விரித்தால் சிலவற்றையும், பின் பக்கத்திலிருந்து திருப்பி விரித்தால் மற்றும் சிலவற்றையும் பார்க்கலாம். முன் பக்கத்தில் I Love you Dheekshu 2009 என்று எழுத வைத்தேன். பின் அட்டையில் அவளை ஏதாவது வரை என்றவுடன், ஸ்மைலி போட்டு, உடம்பு போட்டு உருவங்கள் வரைந்தாள். நன்றாக வந்திருந்தது. தந்தைக்குப் பிடித்திருந்தது.
பாப்பாவின் அப்பாவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeletewow தீஷுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி துபாய் ராஜா
ReplyDeleteநன்றி புதுகைத் தென்றல்
நல்லாருக்கு ஐடியா! புத்தகம் அழகா வந்துருக்கு! வாழ்த்துகள்! :-)
ReplyDeleteஅருமையான அழகான யோசனை
ReplyDeleteநல்ல யோசனை :)-
ReplyDelete:)))
ReplyDeleteநல்ல முயற்சி தீஷூ குட்டி மற்றும் தியானா...