Friday, June 5, 2009

என்னைப் பற்றி

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

தீஷு என் மகளின் பெயர். என் இயற்பெயர் தியானா. மிகவும் பிடிக்கும். என் தந்தை வழி பாட்டி வைத்த பெயர். என் பெயரை முதல் முறை கேட்பவர்களுக்குக் குறைந்தது மூன்று முறையேனும் சொல்ல வேண்டும். ஸ்கூலிலும் அப்படித்தான். இதுவரை இந்த பெயர் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை. என் உறவினர் பலர் தன் குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும் என்று விருப்பப்பட்டு ஆனால் குடும்பத்தில் பெயர் குழப்பம் வரும் என்று விட்டுவிட்ட பெயர்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

23-01-2009. வாழ்வில் பல சந்தோஷங்களை தர வல்லதை அழித்த தினம். மறக்க விரும்பும் தினம். ஆனால் ஒவ்வொரு வருடம் மனதைப் பிசைய போகும் தினம். இவ்வளவு கஷ்டத்திலும் எனக்கும் என் கணவருக்கும் மன உறுதி தந்த இறைவனுக்கு நன்றிகள் பல.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும். எழுதியதை விட எப்பொழுதும் பத்து மார்க் வாங்கித் தரும் என் கையெழுத்து.

4.பிடித்த மதிய உணவு என்ன?

சாதம், சாம்பார், உருளைக்கிழக்கு
சாதம், பருப்பு, தக்காளிக்கொச்சி
புளி சாதம், கத்தரிக்காய் குழம்பு
எலும்பிச்சை சாதம், வடை.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை. எனக்கு பிறருடன் பழகுவதற்கு நேரம் ஆகும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி. ஆனால் அருவியில் குளித்து பத்து வருடங்களாகி விட்டன.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம். அதன் பின் அவர்கள் உடை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம் : நடப்பது எல்லாம் நம்மைக்கு என்று நம்புவது, கடவுள் நம்பிக்கை, சீக்கிரம் கலங்காத மனது, தீர யோசித்தே ஒரு வேலையில் இருங்குவது.

பிடிக்காத விஷயம்: கோபம், அதீத தன்னம்பிக்கை, பேசி விட்டு யோசிப்பது. கோபம் மிகவும் பிடிக்காத விஷயம். கோபத்தில் என்ன செய்கிறேன், சொல்லுகிறேன் என்று எனக்கேத் தெரிவதில்லை. மாற்றுவதற்கு யோகா வகுப்பிற்குப் போக போகிறேன்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் : என் மேலும் தீஷு மேலும் கொண்டுள்ள அன்பு. தீஷு பிறந்த பொழுது, எனக்குத் தாய் மட்டுமே செய்ய முடிந்த வேலைகளைச் செய்தவர்.

பிடிக்காத விஷயம் : அதீத அக்கறை. நேற்று தீஷுவை பள்ளியிலிருந்து விட்ட ஒரு மணி நேரத்தில் அழைக்க வேண்டும் என்பதால், வீட்டிற்கு வராமல் பாங்க் போய் விட்டு அழைத்து வருகிறேன் என்றேன். தீஷு பள்ளிக்கு நாங்கள் மூவரும் தான் சென்றோம். பாங்க் தீஷு பள்ளியிலிருந்து 100மீ தொலைவில் உள்ளது. தான் பாங்க் வந்து விடுவதாக சொன்னார். அவர் ஆபிஸ் போக திரும்பவும் யூ டார்ன் எடுக்க டிராபிக்கில் 30 நிமிடங்கள் ஆகும் என்றவுடன் மனதில்லாமல் ஒத்துக் கொண்டார். அடுத்து 100மீ போக அவர் சொன்னது "பாத்து நடந்து போ". இது போன்ற அதீத அக்கறை என் தன்னம்பிக்கையை குறைப்பது போல் உள்ளதால் சில நேரங்களில் பிடிப்பதில்லை.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்லை. யாரை பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும், போனில் பேசினாலே போதும், என் மனம் ஆறி விடும்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

பாட்டில் கிரின் சுடிதார்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இப்பொழுது ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் அடிக்கடி இப்பொழுது முணுமுணுக்கின்ற பாடல் "கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...". தீஷுவிற்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ஊதா. என் கணவருக்கும் மகளுக்கும் பிடித்த நிறம்.

14.பிடித்த மணம்?

ஜான்சன்ஸ் பேபி பவுடர் : குளித்த முடித்த என் மகளுக்குப் பவுடர் போட்டு விட்டவுடன், அவள் வயிற்றில் முத்தம் கொடுக்கத்தூண்டும் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அமுதா : அவருடைய கவிதைகளும், அவரின் குழந்தைகள் பற்றிய பதிவுகளும் பிடிக்கும்.

சிறு முயற்சி முத்துலெட்சுமி: அவரின் எழுத்து நடை மிகவும் அருமை. தன் பின்னூட்டத்திற்கு வழங்கும் பதிலும் அருமை.

அழைக்க விரும்பும் பதிவர்கள் சந்தனமுல்லை மற்றும் அமித்து அம்மா ஏற்கெனவே எழுது விட்டனர்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

ஆகாய நதி தன் கணவர் மேலும் தன் குழந்தை பொழிலன் மேலும் கொண்டுள்ள அன்பு ஒவ்வொரு பதிவிலும் தெரியும். பொழிலன் அப்டேட்ஸ் அருமை. அதைவிட கர்ப்பிணிகளுக்கு அவர் கொடுக்கும் அனுபவக் குறிப்புகள், நான் இப்படி எதுவும் செய்ததில்லை என்று என்னை யோசிக்க வைப்பவை. அடுத்தவருக்கு உதவுபவை.

17. பிடித்த விளையாட்டு?

தாயக் கட்டை, பிஸ்னஸ், சீட்டு. சிறு வயதில் நொண்டி, கல்லா மண்ணா, கபடி, வாலிபால்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மிகவும் கதை அம்சம் உள்ள, பாஸிட்டிவ் முடிவுள்ள, இரத்தம் & அருவால் இல்லாத திரைப்படங்கள். திரில்லர்ஸ், துப்பறியும் கதைகள், நகைச்சுவை திரைப்படங்கள் மிகவும் இஷ்டம். Sherlock Holmes கதைகள், Alfred Hitchcock இயக்கிய திரைப்படங்கள்,வசூல் ராஜா போன்ற நகைச்சுவை திரைப்படங்கள் என் சாய்ஸ்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

நாங்கள் படத்திற்கு அதிகம் போவது கிடையாது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் பார்த்த முதல் படம் தசாவதாரம் (தீஷுவிற்கு அப்பொழுது இரண்டு வயது).அது தான் இப்போதைக்கு கடைசியாகப் பார்த்த படமும். பசங்க படம் பார்க்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

21.பிடித்த பருவ காலம் எது?

இலையிதிர் காலம். இலை உதிர்வதற்கு முன்னால் இருக்கும் வண்ண மாற்றங்கள் அழகு.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

My big book of questions and answers. தீஷுவின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கணக்கில்லை. நல்ல படங்களைப் பார்த்தால் மாற்றுவேன். தீஷுவின் படங்களே மாறி மாறி வரும். வெகு சில நேரங்கள் இயற்கைக்காட்சிகள், பூக்கள் போன்றவை வைத்திருப்பேன்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த் சத்தம் : தீஷுவின் மழலை மொழி, நல்ல பாட்டு

பிடிக்காத சத்தம் : அலரும் தொலைக்காட்சி, இரைச்சலுடன் ஓடும் வண்டி, குக்கர் விசில், அலாரம் (எழுந்திருக்க வேண்டுமே என்று)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

வெகேஷனுக்காக என்றால் கூர்க், கன்னியா கும்ரி (எது தொலைவு என்று தெரியவில்லை)
பிழைப்புக்காக என்றால் யூஸ். அங்கு நையகரா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கு.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வெட்டி பந்தா, புறங்கூறுதல், பொய் சொல்லுதல்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

போக விருப்பம் உள்ளது : வட இந்தியா, சிங்கப்பூர்

போனதில் பிடித்தது : கூர்க்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

அடுத்தவருக்குத் தொந்தரவு தராமல், அடுத்தவரின் தலையீடு இல்லாமல் இருக்க ஆசை

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

அப்படி ஒன்றும் இல்லை.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

நான் பெரிதும் நம்பும் ஒரு வாக்கியம் :

"There are no accidents. Everything is a lesson. Everything has a PURPOSE, A PURPOSE, A PURPOSE "

Life is beautiful. Keep smiling, Keep enjoying.

12 comments:

  1. சுவாரசியமான பதில்கள் தீஷூ..இல்லல்ல..தியானா! மிக அழகான பெயர்!

    //அப்படி யாரும் இல்லை. யாரை பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும், போனில் பேசினாலே போதும், என் மனம் ஆறி விடும்.//

    ஏனோ தெரியலை, இந்த பதில் ரொம்ப பிடிச்சுருக்கு! :-)

    ReplyDelete
  2. //அலரும் தொலைக்காட்சி, இரைச்சலுடன் ஓடும் வண்டி, குக்கர் விசில், அலாரம் (எழுந்திருக்க வேண்டுமே என்று)//

    சேம் பிளட்! :-)

    ReplyDelete
  3. சூப்பர் பதில்கள் தீஷூ அம்மா!
    :))

    அழைப்பை ஏற்று எழுதியமைக்கு நன்றிங்க! :)

    ReplyDelete
  4. //அலாரம் (எழுந்திருக்க வேண்டுமே என்று)//

    எனக்கும் :)

    ReplyDelete
  5. /
    அடுத்தவருக்குத் தொந்தரவு தராமல், அடுத்தவரின் தலையீடு இல்லாமல் இருக்க ஆசை /

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    நன்றிங்க

    ReplyDelete
  6. நன்றி முல்லை.

    அழைப்பு விடுத்ததற்கு நன்றி ஆகாயநதி

    முதல் வருகைக்கு நன்றி திகழ்மிளிர். நீங்க எதுக்கு நன்றி சொன்னீங்கனு புரியல.

    ReplyDelete
  7. dhyana..nijamavae rare paer..!!

    :)

    ReplyDelete
  8. நல்ல பதில்கள். "தியானா"-மிக அழகான பெயர்.

    /*Life is beautiful. Keep smiling, Keep enjoying.*/
    :-)

    அழைப்பிற்கு நன்றி. விரைவில் பதிவு எழுதுகிறேன்

    ReplyDelete
  9. //பாங்க் தீஷு பள்ளியிலிருந்து 100மீ தொலைவில் உள்ளது. தான் பாங்க் வந்து விடுவதாக சொன்னார். அவர் ஆபிஸ் போக திரும்பவும் யூ டார்ன் எடுக்க டிராபிக்கில் 30 நிமிடங்கள் ஆகும் என்றவுடன் மனதில்லாமல் ஒத்துக் கொண்டார். அடுத்து 100மீ போக அவர் சொன்னது "பாத்து நடந்து போ". இது போன்ற அதீத அக்கறை என் தன்னம்பிக்கையை குறைப்பது போல் உள்ளதால் சில நேரங்களில் பிடிப்பதில்லை.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......... இதுக்கு நீங்க என்னைய நாலு அரை அரஞ்சிருக்கலாம். இப்டில்லாம் நூதனமா கணக்க புகுத்தி, மண்டக்காய வெக்கறீங்க:):):)

    //மிகவும் பிடிக்கும். எழுதியதை விட எப்பொழுதும் பத்து மார்க் வாங்கித் தரும் என் கையெழுத்து.//

    இப்டி அல்டிக்கிற நல்ல கைஎழுத்துக்காரங்கள நாங்கல்லாம் கரம் வெச்சு பழிவாங்குவோம்ள:):):)

    //இதுவரை இந்த பெயர் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை//

    நீங்களும் முல்லையும் இப்டி அல்டிக்கறீங்களே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  10. //இரத்தம் & அருவால் இல்லாத திரைப்படங்கள்//
    அப்ப படமே பார்க்கறது இல்லைன்னு சொல்லுங்க‌

    ReplyDelete
  11. லீவில் இருந்தப்ப உங்க பதிவு படிக்கல.. தியானா.. நானும் 32 கேள்விக்கு பதில் போட்டுட்டேன்.. நீங்கள் அழைத்ததுக்கு நன்றி..
    ராப் தான் நினைவுபடுத்தினார்கள்..

    ReplyDelete
  12. மிக மிக நேரம் தாழ்ந்த பின்னூட்டம் . ஆனாலும் படித்தவுடனே பின்னூட்டம் இட தோன்றியது . உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பிக்கும் போது மித்ரா என் வயிற்றில் 7 மாதம் , இதோ முழுதாய் 2 வருடங்கள் ஓடி விட்டன . எனினும் அலுக்காமல் படித்து கொண்டு இருக்கிறேன் ...

    உங்களை எனக்கு அறிமுக படுத்திய "அம்மக்களின் பதிவுகளுக்கு " என் நன்றி ...

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost