தீஷுவிற்கு ஒரு வாரமாய் உடம்பு சரியில்லை. வைரல் ஃபீவர், இருமல் எல்லாம் சேர்ந்து படுத்தி எடுத்துவிட்டது. நாள் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருந்தாள். நேற்று முதல் மருந்தை நிறுத்தியிருக்கிறேன். ஆனால் இன்னமும் இருமலும், அதனால் வாந்தியும் இருக்கிறது. காலை எழுந்தவுடன், சிறிது நேரம் முழிந்திருந்து விட்டு, மீண்டும் தூங்க வேண்டும் என்றாள். ஆனால் தூக்கம் வரவில்லை போலும். சிறிது நேரத்தில் எழுந்து உட்கார்ந்து, ஏதாவது டாய் (மாண்டிசோரி ஆக்டிவிட்டி) பண்ணலாமா என்றாள். நான் தயார் நிலையில் இல்லை. ஆனாலும் ஆரம்பித்தோம்.
எப்பொழுதும் ஆரம்பிக்கும் பொழுது புத்தகங்கள் வாசிப்போம். இன்று ஒரு புத்தகத்துடன் போதும் என்றாள். அடுத்து அவளாகவே பேஃக் பஸில் எடுத்து செய்தாள். குறைந்தது ஆறிலிருந்து ஏழு பஸில் வரை செய்வாள். இன்று மூன்றோடு எடுத்து வைத்து விட்டாள். அடுத்து அவளாகவே பிக்சர் மாட்சிங் செய்ய வேண்டும் என்றாள். ஒரு முறை முடித்துவிட்டு மீண்டும் அடிக்கினாள். திரும்ப செய்யப்போறீயா என்றவுடன், புன்னகையுடன் உன் turn என்றாள். அழகாக இருந்தது. நான் செய்யும் பொழுதே, என் மேல் படுத்துக்கொண்டாள். ரெஸ்ட்டு எடுத்துக்கோ என்றாலும் அவளுக்கு இஷ்டமில்லை. அதனால் நான் படுக்கப்போகிறேன் என்றேன். உடனே தானும் படுக்க வேண்டும் என்றாள்.
அருகில் படுத்துக் கொண்டே, காலைத் தூக்கிக் காட்டி, தனக்கு இரண்டு கால்கள் தான் என்றாள். ஆமாம் என்றவுடன் ஸ்பைடருக்கு எட்டு கால்கள் என்றாள். சிறிது நேரம் கழித்து, லேடி பஃக்குக்கு எத்தனை கால்கள் என்றாள். அம்மாவுக்குத் தெரியல, பாத்துச் சொல்றேன் என்றவுடன் கம்பியூட்டரில் தான பாப்ப என்றாள். அதுல எப்படிப் பாக்கனும் என்றாள். ஸர்ச் பண்ணிப் பாக்கனும் என்றவுடன், தலையைத் தூக்கி, கண்களை உருட்டி, தேடுவது போல் தலையை ஆட்டி "இப்படியா" என்றாள். கூகுள் பற்றித் தெரிந்து கொண்டவுடன், இன்றைய ஸேஸன் முடிந்தது. அதன் பின் பேசிக் கொண்டேயிருந்தாள். ஒரு வாரமாக பேசாமல் இருந்ததற்கு சேர்த்து பேசியது போலிருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரு வித்தியாசமான ஸேஸன்.
பிகு: லேடி பஃக்குக்கு ஆறு கால்கள்.
Games to play with 3 year old without anything
2 years ago
இனிமையான தருணம்!!!
ReplyDeleteபாவம் குழந்தை...அவளுக்கும் ஒரு change வேணும் இல்லையா?how is she now?
\\கண்களை உருட்டி, தேடுவது போல் தலையை ஆட்டி "இப்படியா" என்றாள்.//
ReplyDelete:)
ம்.. குழந்தைகள் உடம்பு சரியாக இல்லாவிட்டாலும் தங்களால் இயன்ற அளவு ஏதேனும் செய்கிறார்கள். தீஷுவுக்கு சீக்கிரம் சரியாகி ந்ன்றாக விளையாடட்டும்.
ReplyDelete/*ஸர்ச் பண்ணிப் பாக்கனும் என்றவுடன், தலையைத் தூக்கி, கண்களை உருட்டி, தேடுவது போல் தலையை ஆட்டி "இப்படியா" என்றாள்*/
க்யூட்...
//தீஷுவிற்கு ஒரு வாரமாய் உடம்பு சரியில்லை. //
ReplyDelete:( இப்போ எப்படி இருக்கிறாள்?!
//, பாத்துச் சொல்றேன் என்றவுடன் கம்பியூட்டரில் தான பாப்ப என்றாள். //
;-)
//தலையைத் தூக்கி, கண்களை உருட்டி, தேடுவது போல் தலையை ஆட்டி "இப்படியா" என்றாள்//
சோ க்யூட்!
Get well soon, baby!
வருகைக்கு நன்றி சசி. இப்பொழுது பரவாயில்லை. ஆனால் இன்னும் ஒய்வு எடுக்க விரும்புகின்றாள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி முத்துலெட்சுமி.
நன்றி அமுதா.
நன்றி முல்லை. புத்தகத்தில் தேட வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் சிறிதும் இல்லை. கொண்டு வர வேண்டும். நான் கம்பியூட்டரில் தேடுவதைக் குறைத்துக் கொண்டு, புத்தகத்தில் தேடலாம் என்று இருக்கிறேன்.