Saturday, June 22, 2013

தறி

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தீஷுவிற்கு நூலினால் பின்னுவதற்கு சொல்லிக் கொடுத்தேன். இது கைத்தொழில் என்பதே விட அவளுக்குத் தன்னம்பிக்கை மற்றும் பல விஷயங்கள் கற்றுக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  

ஒரு 5 * 5 இன்ச் சதுர அட்டை எடுத்துக் கொண்டோம். அதில் அரை இன்ச் இடைவெளியில் நூலால் சுற்றி, தறி செய்து கொண்டோம். அந்தத் தறியில் மற்றொரு நூலினால் பின்னல் செய்ய வேண்டும். தீஷு விடுமுறையில் இருப்பதால், என்னால் பதிவுக்கு நேரம் செலவிட முடியவில்லை. நேரமின்மையால் என்னால் முழுமையாக எழுத முடியவில்லை.





செய்து பார்க்கும் ஆர்வமிருப்பவர்கள் இங்கே சென்றால் படிப்படியான விளக்கம் கிடைக்கும்.


15 comments:

  1. நேர்த்தியான பின்னல். அழகு. பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி மேடம்..

      Delete
  2. ஆகா என்ன அழகு...! தீஷு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்ல கைவேலைகளை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா வந்திருக்கு தீஷு!! லீவுல எத்தனை புத்தகம் முடிச்சிருக்கீங்க?

    ReplyDelete
    Replies
    1. நன்றி முல்லை Aunty. வெறும் ஆறு புத்தகங்கள் தான் படித்திருக்கிறேன் :))

      Delete
    2. அட!! ஆறுபுத்தகங்கள் முடிச்சாச்சா? கலக்குங்க தீஷூ குட்டி!! :‍)

      Delete
    3. எல்லாமே சின்ன புக் தான் Aunty!!

      Delete
  5. அழகான பின்னல் வேலை..கலர் காம்பினேஷன் அருமையாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மஹி!!

      Delete
  6. நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் போய் பார்த்தேன். செய்முறை சுலபமாக இருக்கிறது. சொல்லிக் கொடுக்கும் பெண்மணியின் பெயரும் உங்கள் பெயர் போலவே இருந்தது. Diane!
    குழந்தைகளின் கற்பனை பல மடங்கு பெருகும் இப்படிச் செய்வதால், இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னவுடன் தான் பெயரை கவனித்தேன். செய்முறை மிகவும் எளிது தான். நீங்கள் சொன்னது போல் கற்பனைத் திறனும் பெருகுகிறது. நன்றி அம்மா உங்கள் வருகைக்கு!!

      Delete
  7. ஹை.. ரொம்ப அழகாயிருக்கே.. மும்பையிலும் குழந்தைகளுக்காக இதுமாதிரியான கிட்கள் கிடைக்கின்றன என்றாலும் மொத்தத்தையும் நாமே செய்தால் கூடுதல் மகிழ்ச்சிதானே..

    ReplyDelete
  8. மிகவும் நன்று நல்ல பொழுதுபோக்கு

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost