தருணம் 1: BSNL ஆபிஸ் போயிருந்தோம். அங்கு ஒருவரைப் பார்த்து விட்டு என்னிடம் ஒடி வந்து, "ஏன் அந்த ஆங்கிள் வாயில முடியா வைச்சிருக்கார்" என்றாள். பார்த்தால் அவர் தாடி வைத்திருந்தார். அவளுக்கு அதை விளக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
தருணம் 2 : ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தேன். அதை ஏன் எடுக்குற? அது ஸ்பைடரோட வீடு என்றாள். ஸ்பைடர் வேற வீடு கட்டிட்டு போயிடுச்சி என்று அரைமணி நேரம் விளக்கியப்பின் அரைமனதோடு ஒத்துக்கொண்டாள்.
தருணம் 3: ஒரு நாயை நான்கு ஐந்து பேர் தடவுவதைப் பார்த்து விட்டு, என் கணவரிடம், "நாய் ஒண்ணும் செய்யாதா?" என்றாள். அது நல்ல நாயாயிருக்கும், கடிக்காது என்று அவர் சொன்னவுடன், " கெட்ட நாயாயிருந்தா ஒண்ணும் செய்யும்(ஒண்ணும் செய்யாதுக்கு எதிர்பதம்) என்றாள். அதே போல் பரவாயில்லையா என்றால், பதில் பரவாயில்லை இல்லை என்கிறாள்.
தருணம் 4: அவளுக்குப் பிடித்த போர்டு கேம் விளையாண்டு கொண்டிருந்தோம். அவள் மஞ்சளில் நிற்க வேண்டும். ஆனால் மஞ்சள் கட்டத்தை ஆரஞ்ச் என்று சொல்லி விட்டு, என் காயின்னைத் தாண்டி அடுத்த மஞ்சளில் நிறுத்தினாள். நிறுத்தி விட்டு என்னைப் பார்த்து, "நான் வேணும்னே தப்பா சொல்லல. ஜோக் சொன்னேன்" என்று புன்னகைத்துக் கொண்டாள். இப்படி எல்லாம் பண்ணக்கூடாது என்று ஒரு முறை சொன்னவுடன், "சாரி" என்று சொல்லி விட்டு, சரியான கட்டத்தில் நிறுத்தினாள்.
தருணம் 5: ஆரஞ்ச் சாப்பிடுறியா என்றதற்கு, ஆரஞ்ச எப்படி சாப்பிட முடியும் என்றாள். ஆரஞ்ச் பழம்டா என்றவுடன், பெரிய மனுஷித் தோரணையில்,"ஓ, ஃபூரூட் ஆரஞ்ச் சொல்லுறீயா? என்றாள். தோலை உறித்து முடித்தவுடன், பழத்தைப் பார்த்து, இதப்பார்த்தால் எனக்கு பம்கின் மாதிரி இருக்கு. உனக்கு எப்படி இருக்கு? என்றாள். ஆரஞ்ச் மாதரி தான்டா இருக்கு என்றவுடன், எனக்கு பம்கின் மாதிரி இருக்கு என்றாள். நான் என்ன சொன்னாலும் அது தான் சரி என்று நினைத்தவள், எனக்கும் அவளுக்கும் தனித்தனி எண்ணங்கள் இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
ஒவ்வொரு தருணமும் ஒவ்வொரு விதத்தில் தீஷூவைக் காட்டுகிறது :)
ReplyDeleteதருணம் 1 சூப்பர் காமெடி:)
தருணம் 2 அவளுடைய உயர்ந்த மனசு :)
/*கெட்ட நாயாயிருந்தா ஒண்ணும் செய்யும்*/
ReplyDelete:-))
/*எனக்கும் அவளுக்கும் தனித்தனி எண்ணங்கள் இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டாள்.
*/
becoming more independent?
நன்றி ஆகாயநதி. எங்க வீட்டில தினமும் ஏதாவது இந்த மாதிரி நடக்குது.
ReplyDeleteஆமாம் அமுதா. இப்பொழுதெல்லாம் கேள்வி கூட ரொம்ப மெச்யூர்டா கேட்கிறாள்.
தாடி - :-)) பப்பு என்னைப் பார்த்து ஏன் உனக்கு மீசை இல்லேன்னு கேட்டதுதான் நினைவுக்கு வருது! எல்லா தருணங்களும் தீஷுவின் கற்பனை வளத்தை காட்டுகிறது..
ReplyDelete