1/4/2009
மீண்டும் ஸ்கேலில் கோடு போட வேண்டும் என்றாள். அவளாகவே புள்ளிகளை வரைந்து இணைத்தாள். நான் முக்கோண வடிவில் மூன்று புள்ளிகள் வரைந்து இணைக்கச் சொன்னேன். முக்கோணத்தைப் பார்த்தவுடன், சதுரம் வரைய வேண்டும் என்றாள். நான்கு புள்ளிகளை இணைக்கச் சொன்னேன். ஆனால் எந்த எந்தப் புள்ளிகளை இணைக்க வேண்டும் என்பதை நான் சொல்ல வேண்டியிருந்தது.
இன்று கலரிங், ஒட்டுதல் போன்றவற்றை முடித்தவுடன் வேற ஏதாவது சொல்லிக் கொடு என்றாள். நான் எண்களில் பெரியது சிறியது சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்து, கண்ணாடிக்கற்களை எடுத்துக் கொண்டேன். முதலில் பத்து கற்களை ஒரு புறமும், ஒரு கல்லை மறுபுறமும் வைத்துக் கொண்டு, பத்து தான் பெரியது என்றேன். அடுத்து ஒன்றையும் ஐந்தையும் வைத்து ஐந்து பெரியது என்ற பொழுது அவள் முகத்தில் விருப்பமில்லாலது போன்று இருந்தது. நீ இன்னும் கொஞ்சம் பெரிய பாப்பா ஆனவுடன் பண்ணலாம் என்றவுடன், she felt offended. அழுகை வந்து விட்டது. கோபத்துடன் நீ திரும்பவும் சொல்லிக் கொடு என்றாள். இப்பொழுது தன்னுடைய எல்லா வேலைகளையும் தானே செய்ய வேண்டும், செய்ய முடியவிட்டால் trauma.
நான் என் முறையை மாற்றினேன். நான்கு தாள்களில் ஒன்று முதல் நான்கு வரை எழுதிக் கொண்டேன். இரண்டு கிண்ணங்கள் எடுத்து, கம்பார் பண்ணும் இரண்டு எண்களையும் அந்த கிண்ணத்தின் அருகில் வைத்து விட்டேன். கம்பார் பண்ணும் இரண்டு எண்களுக்கு ஏற்ப அந்த கிண்ணங்களில் கற்களைப் போடச் சொன்னேன். அதன் பின் one-to-one correspondence முறையில் கற்களை வைத்து எந்த கிண்ணத்தில் மீதம் கற்கள் இருக்கின்றனவோ அதுவே பெரியது என்றேன். புரியவில்லை.
கற்களுக்குப் பதில் கறுப்பு மற்றும் சிவப்பு காயின்ஸ் எடுத்துக் கொண்டேன். ஒரு கிண்ணித்தில் ஒரு கலர் மற்றொரு கிண்ணத்தில் வேறு கலர். one-to-one correspondenceக்குப் பதில் AB pattern. கறுப்பு சிகப்பு என்று மாறி மாறி வைத்துக் கொண்டே வரவேண்டும். அது புரிந்தது. இரண்டு எண்களுக்கு சரியாகச் செய்தாள். எங்களுக்கு நேரமாகி விட்டதால் எடுத்து வைத்து விட்டோம். எனக்கும் அவள் confidenceயைக் கெடுக்காததில் நிம்மதி. அவளுக்கும் சந்தோஷம். ஆனால் இதை இன்னும் ஆறு மாததிற்கு எடுக்கக் கூடாது என நினைத்துக் கொண்டேன்.
3/4/2009
தீஷுவிற்கு போர்ட் கேம்ஸ் பழக்கலாம் என்று நினைத்தேன். வாசிப்பதற்கோ அல்லது மிகுந்த விதிமுறைகளை கையாளத் தெரியாததால் எளிமையானதாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். Smart preschoolers early learning gamesக்கு வாசிப்பது தேவையில்லை. நான்கு விளையாட்டுகள் இருக்கின்றன் - கலர், கவுண்டிங், பாட்டன்ஸ், ஷேப்ஸ். கலர் விளையாட்டுக்கு, போர்டில் ஸ்டார்ட்டிலிருந்து முடிவிற்கு போட்டுள்ள பாதையில் ஆறு வண்ணங்களில் படங்கள் வரிசை மாறி மாறி இருக்கும். அதே ஆறு கலர்களுள்ள ஒரு அட்டையில் அம்பு இருக்கும். அம்பைச் சுற்றி, அது குறிக்கும் நிறத்தில் போர்டில் நம் கயின்ஸை வைத்து பாதையில் முன்னேற வேண்டும். முதலில் பாதையைக் கடக்கின்றவர்கள் வெற்றிப் பெற்றவர்கள். கடந்த வாரத்திலிருந்து நாங்கள் இதை முயற்சித்து வந்தோம். இத்தனை நாளாக அவளுக்குப் புரியவில்லை.கலரிலிருந்து ஆரம்பித்தோம். அம்பை சுற்றுவாள், ஆனால் தன் காயின்ஸ் கலர் எதுவோ, அந்த இடத்தில் போர்டில் தன் காயின்ஸை வைப்பாள், பாதையில் பின்னால் வருவாள். ஆனால் விருப்பமாக தினமும் ஒரு முறையேனும் எடுத்து வந்து விளையாட வேண்டும் என்பாள். இன்று போர்டை எடுத்தவுடன், நான் அந்த பாதையை விளக்கினேன். அவளை கையால் வரையச் சொன்னேன். Mazes மாதிரியா என்றாள். ஆமாம் என்றவுடன் பாதை பற்றிய தெளிவு பிறந்தது. முன்னால் மட்டுமே போக வேண்டும் என்று புரிந்தது. கலரில் குழப்பம் இருந்ததால் இன்று கவுண்டிங் போர்டை எடுத்துக் கொண்டோம். புரிந்து கொண்டாள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நான்கு விளையாட்டுகளையும் மாறி மாறி விளையாண்டு கொண்டிருந்தோம். போர்டு கேம்ஸ் ஆர்வத்தை இது தூண்டும் என்று நினைக்கிறேன்.
இன்று சைனீஷ் செக்கர்ஸ் காயின்ஸை கலர் மூலம் பிரிக்கச் சொன்னேன். பிரிக்கும் பொழுதே எண்ணத் தொடங்கினாள். பிரித்து முடித்தவுடன் போர்டில் அடுக்கச் சொன்னேன். விருப்பமாக செய்தாள். ஆனால் சரியாக வட்டத்தில் வைப்பதற்கு சிறிது கஷ்டப்பட்டாள். இது கை கண் ஒருங்கினைப்புக்கு ஏற்றது.
கோபத்துடன் நீ திரும்பவும் சொல்லிக் கொடு என்றாள். இப்பொழுது தன்னுடைய எல்லா வேலைகளையும் தானே செய்ய வேண்டும், செய்ய முடியவிட்டால் trauma.
ReplyDeleteஆச்சரியமா இருக்குங்க தீஷூ வைப் பத்தி இப்படி படிக்கும்போது.
வந்தேன், நானும் கற்றுக்கொண்டேன். வரேன்
//நீ இன்னும் கொஞ்சம் பெரிய பாப்பா ஆனவுடன் பண்ணலாம் என்றவுடன், she felt offended. அழுகை வந்து விட்டது. கோபத்துடன் நீ திரும்பவும் சொல்லிக் கொடு என்றாள்//
ReplyDeleteoh..baby! :-)
சுவாரசியமாக இருந்தது உங்க பகிர்தல்! நானும் பப்புவிற்கு சைனீஸ் செக்கர்ஸ் ரொம்ப நாட்கள் முன்பு முயற்சி செய்தேன்...அப்போ வொர்க் அவுட் ஆகலை! திரும்ப எடுக்கணும்!நினைவூட்டியதிற்கு நன்றி!
நன்றி அமித்து அம்மா
ReplyDeleteநன்றி முல்லை