சனிக்கிழமை நடந்த இரண்டு நிகழ்ச்சிகள்
1. தீஷு ஒரு காலி பாட்டிலிருந்து, எண்ணெய் ஊற்றுவது போல் கையில் ஊற்றி, டாலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தாள். முடித்தவுடன் பாட்டிலின் மூடி எங்க என்றாள். தீஷுவிற்கு இது ஒரு பழக்கம். அப்பொழுது வைத்து விளையாண்ட பொருள் காணோம் என்றாலும் தேடுவதற்கு ஒரு ஆள் வேண்டும். வேலையாய்யிருந்த நான், நீ தான திறந்த? எங்க வச்சிருக்கனு பாரு என்று கோபமாகச் சொன்னேன். நான் சொல்வதைக் கேட்டு விட்டு, பொறுமையோடு சொன்னாள், "நான் உன்கிட்ட கேட்கல, டால் கிட்ட கேட்டேன்".
2. பைக்கில் சென்று கொண்டிருந்தோம். தீஷு ரெட் வேணா என்றாள். எந்த ரெட் என்றவுடன், கீழே கை காண்பித்தது போலிருந்தது. ரோட்டில் சிகப்பு கலரில் கோடுயிருந்தது. நான் அவளுக்கு ஏதேதோ விளக்கிக் கொண்டுயிருந்தேன். அதை வேணாமுனுச் சொல்லக்கூடாது என்றெல்லாம் சொன்னேன். அவளும் விடாமல் ரெட் வேணா என்று சொல்லிக் கொண்டிருந்தாள். என் கணவரும் அவர் பங்கிற்கு விளக்கினார். ஆனால் கேள்வி நின்ற பாடில்லை. சிக்னலில் நிற்கும் பொழுது அருகில் நின்று கொண்டிருந்த ஒரு சிகப்பு வேனைக் காட்டி "ரெட் வேனா?" என்றாள். வேன் போன்ற வண்டிகளை இப்பொழுது தான் பார்ப்பதால், எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருப்பாள். அதே போல் கேட்டிருக்கிறாள்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குள் நடந்த இரு நிகழ்ச்சிகளும், நான் அவளை இன்னும் குழந்தையாக நினைத்து, நான் என்ன சொன்னாலும் கேட்பாள் என்று நினைக்கிறேனா என்று எண்ணத் தோன்றியது.
Games to play with 3 year old without anything
2 years ago
:-))) ரெட் வேனா- செம கலக்கல் தீஷூ அம்மா! சான்ஸே இல்ல! பார்வைகள் தான் எப்படி மாறுபடுது! இப்படி நான் நிறைய பல்பு வாங்கியிருக்கேன்! :-))
ReplyDelete/*நான் அவளை இன்னும் குழந்தையாக நினைத்து, நான் என்ன சொன்னாலும் கேட்பாள் என்று நினைக்கிறேனா என்று எண்ணத் தோன்றியது.*/
ReplyDeleteநான் வளர்கிறேனே மம்மி என்கிறாளோ?
ஆமாம் முல்லை. சரியான பிரகாசமான பல்பு.. அன்னைக்கு லீவு நாள் என்பதால் ஒட்டுறதுக்கு இன்னொரு ஆள் வேற வீட்டிலிருந்தார்.
ReplyDeleteஆமாம் அமுதா. நாமெல்லாம் இப்படி கேட்டிருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.
;))
ReplyDelete//, "நான் உன்கிட்ட கேட்கல, டால் கிட்ட கேட்டேன்".//
ReplyDeleteஆகா, குழந்தைகள் கிட்ட பல்பு வாங்கிறதே ஒரு தனி சந்தோசம் தான் :)
தீஷூ கண்ணா, கலக்கிட்டே :)
பொழிலன் கிட்ட சீக்கிரமா பல்பு வாங்க ஆரம்பிக்க வாழ்த்துகள் பிரேம்குமார்.
ReplyDelete//தீஷு said...
ReplyDeleteபொழிலன் கிட்ட சீக்கிரமா பல்பு வாங்க ஆரம்பிக்க வாழ்த்துகள் பிரேம்குமார்.
//
என்ன வில்லத்தனம் ?? ;-)