பருப்பு வகைகள் பற்றி சொல்லிக் கொடுத்தேன். மூன்று கிண்ணத்தில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு எடுத்துக் கொண்டோம். முதலில் கடலைப்பருப்பையும், உளுத்தம் பருப்பையும் கொடுத்தேன். மாண்டசோரி Three period Lessonபடி முதலில் இரண்டையும் தொட்டு பெயர் சொன்னேன். அடுத்து நான் பெயர் சொல்லி அவளை காண்பிக்கச் சொன்னேன். அடுத்து நான் தொட்டு காண்பித்து, பெயர் கேட்டேன். முடித்தவுடன் அடுத்து துவரம் பருப்பும் சேர்த்துக் கொண்டேன். இந்த முறை பெயர்களை மாற்றி மாற்றி சொல்ல ஆரம்பித்தாள். நான் கண்ணைக் கட்டி கண்டுபிடிக்கச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதுவே தப்பாகச் சொன்னதால், இன்னும் சிறிது நாட்கள் கழித்து முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.
ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு அப்பொழுது என்ன என்ன சத்தம் கேட்கிறது என்பதை நான் சொன்னேன். இரண்டாவது முறை குயில் கத்துது என்றவுடன் ஏற்கெனவே சொல்லிட்ட என்றாள். அடுத்து அவள் முறை. கண்ணை மூட மாட்டேன் என்று சொல்லி விட்டாள். ஆனால் சத்தங்களைச் சொன்னாள். ஆட்டோ சத்தத்தைக் கூட சரியாக கண்டுபிடித்துவிட்டாள். Since all knowledge begins with sensory perception, this is good for hearing sense. சில நிமிடங்கள் கழித்து, வேறு ஏதோ செய்து கொண்டிருந்தவள், யார் வீட்டு குக்கர் விசிலையோ, விசில் சத்தம் தானே என்றாள்.
இன்று ஷூ பாலீஷ் போட சொல்லிக் கொடுத்தேன். முதலில் பாலீஷ் டப்பாவை திறக்க சொல்லிக் கொடுத்தேன். ஆனால் திறக்கத்தெரியவில்லை. அடுத்து பிரஷில் எடுத்து, எப்படி ஷூவை பிடிக்க வேண்டும், எப்படி பாலீஷ் போட வேண்டும் என்று சொன்னேன். அவளிடம் கறுப்பு ஷூ இல்லாததால், அவள் அப்பா ஷூவை எடுத்துக் கொண்டோம். ஷூவை சரியாக எடுத்தாள். ஆனால் கனம் காரணமாக, பாலீஷ் போடும் பொழுது வேறு மாதிரி பிடித்துக் கொண்டாள். அப்பாவின் இரண்டு ஜோடி கறுப்பு ஷூகளுக்கு இன்று பளபளக்கின்றன.
அவள் அப்பா தினமும் சில்லரை காசுகளை ஒரு கிண்ணத்தில் போட்டுவிடுவார். அதை எடுத்து அவள் உண்டியலில் போட சொன்னேன். நிரம்பியவுடன் பாங்க்கில் போட்டு வைத்து, கொஞ்ச நாளைக்கு அப்புறம் உனக்கு வேண்டியதை வாங்கலாம் என்று சொல்லி விட்டு, உனக்கு என்ன வாங்கனும் என்றவுடன், எனக்கு எதுவும் வேண்டாம் என்று செல்லிவிட்டாள். இப்படியே வளர்ந்த பின்பும் இருந்தால், நல்லாத்தான் இருக்கும்.
:-) புதிய செய்தி எனக்கு! நல்ல பதிவு! சமத்து தீஷு!
ReplyDelete//இப்படியே வளர்ந்த பின்பும் இருந்தால், நல்லாத்தான் இருக்கும்./
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பேராசைங்க!!
என்ன முல்லை பண்ணறது? அவள் நடவடிக்கைகளைப் பார்த்தா, இந்த பேராசை நிராசைனு நல்லாவே தெரியும்.
ReplyDeleteம்.. நல்ல முறைகள்.. பருப்பில் இவ்வளவு விஷயமா?
ReplyDelete/*எனக்கு எதுவும் வேண்டாம் என்று செல்லிவிட்டாள். இப்படியே வளர்ந்த பின்பும் இருந்தால், நல்லாத்தான் இருக்கும்.*/
உங்களுக்கு பேராசை தான் போங்க...