கடந்த ஒரு மாதத்தில் என்னை மிகவும் கவர்ந்த தீஷுவின் செயல்கள்.
1. எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். திடீரென்று என்னிடம் வந்து பால் எப்படி எழுத வேண்டும் என்றாள். சொல்வதற்குள் போன் அடித்ததால் நீ எழுது, அம்மா வருகிறேன் என்றேன். பேசி முடித்து, வந்து பார்த்தால் PAL என்று எழுதி வைத்திருந்தாள். எழுத்துக்களைக் கூட்டி அவளே எழுதியது ஆச்சரியமாக இருந்தது.
2. பள்ளியில் ஏதாவது ஒரு தப்பு செய்தால், தண்டிப்பதற்காக Time out கொடுப்பார்கள். யாரிடமும் பேசாமல் ஒர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். அப்பொழுது நடக்கும் எந்த வேலையும் செய்யாததே அவர்களுக்குத் தண்டனை. அன்று வீட்டில், ஏதோ தப்பு செய்ததால் "Time out" என்றேன். போய் ஸோபாவில் தனியாக உட்கார்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் ஸோபா கூஷன் கவரை சுரண்ட ஆரம்பித்தாள். கோபமான என் கணவர் உனக்கு டைம் அவுட் என்றார். ஏற்கெனவே டைம் அவுட்டில் இருந்த அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அதைப் பார்த்த எனக்கு சிரிப்பு. நான் சிரித்தவுடன்,டைம் அவுட் முடிஞ்சிருச்சி என்று ஓடி வந்து விட்டாள்.
3. என் பக்கத்தில் வந்து படுக்கும் பொழுது என் தலையில் முட்டிவிட்டாள். ஸாரி சொல்லு என்றாள். நீ தான முட்டின, நீ தான் ஸாரி சொல்ல வேண்டும் என்றவுடன், ஒகே என்று சொல்லி விட்டு, வேகமாக ஒரு முட்டு முட்டி ஸாரி என்றாள்.
4. புதுசு, பழசுக்கு பதில் நல்ல என்று சொல்கிறாள். ஹோட்டலுக்குப் போயிருந்தோம். புது ஹோட்டலா என்றாள். நானும் ஆமாம் என்றேன். ஏன் நம்ம நல்ல ஹோட்டலுக்கு வரல என்றாள்.
5. வாசல் அருகே நின்று கொண்டிருந்தாள். ஒரு முறை மட்டும் கூப்பிட்டேன். கேட்காதது போல் நின்று கொண்டிருந்தாள். திடீரென்று என்ன நினைத்தாளோ, என் அருகில் வந்து "நீ கூப்பிட்டது எனக்கு கேட்கல" என்றாள்.
6. எங்கள் நண்பர் ஒருவர் தீஷுவைப் பார்த்தால், காதை இழுத்து அதே நேரத்தில் நாக்கையும் தொங்க விட்டு விளையாட்டு காட்டுவார். காதை இழுப்பதனால் நாக்கு தொங்குவது போல் தோன்றும். தீஷு அதே மாதிரி செய்து கொண்டிருந்தாள்.
"இந்த மாதிரி எந்த ஆங்கிள் பண்ணுவாரு"
"தெரியல.. அவுங்க வீட்டுக்குப் போயிருந்தோம்ல"
"ஆமாம்டா.. அங்க சாப்பிட்டோம்ல"
"ஆமாம்.. காரமா இருந்திச்சு..ஏன் அம்மா?"
"மிளகாய் நிறையப் போட்டுயிருப்பாங்க"
"ஏன் மிளகாய் நிறையப் போட்டுயிருப்பாங்க?"
"டேஸ்ட்காக"
"ஏன் டேஸ்ட்காக?"
"அப்ப தான நல்லா சாப்பிட முடியும்"
"ஏன் நல்லா சாப்பிடனும்?"
"அப்ப தான எனர்ஜி வரும்"
"ஏதுக்கு எனர்ஜி வரனும்?"
"அப்ப தான எல்லா வேலையும் செய்ய முடியும்?"
"ஏன் எல்லா வேலையும் செய்யனும்"
"வேலை செய்யலேனா போர் அடிக்கும்"
"ஏன் போர் அடிக்கும்?"
"சும்மா உட்கார்ந்து இருக்க முடியாதுல"
"ஏன் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது?"
"போர் அடிக்கும்"
"ஏன் போர் அடிக்கும்?"
இந்த dead lock situationன எப்படி ஹாண்டில் பண்ண?
7. Astronaut பத்தி ஒரு புத்தகத்தில் இருந்தது. நானும் Astronaut மாதிரி மூனுக்குப் போகனும் என்றாள். நல்லாப் படிச்சி முடிச்சிட்டு போகலாம் என்றவுடன் சரி என்று இருந்து விட்டாள். இரண்டு மூன்று மணி நேரம் கழித்து சாப்பிடும் பொழுது, "நான் Astronaut ஆகி மூனுக்குப் போனால், அங்கப் போய் என்ன செய்யனும்?" என்றாள்.
8. சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என்னிடம் "வாயில தரவானு கேளு" என்றாள். நானும் வாயில தரவானு கேட்டேன். உடனே சரி என்று சொல்லிவிட்டாள். வாயில் தா என்றால் நான் தர மாட்டேன் என்று என்னை வைத்தே கேள்வி கேட்க வைத்து வேலையை முடித்துவிட்டாள்.
9. தரையில் உட்கார்ந்துக் கொண்டு காலை தூக்கி இடதிலிருந்து வலதுக்கு, வலதிலிருந்து இடதுக்கு என அசைத்துக் கொண்டிருந்தாள். என்ன செய்கிறாள் என பார்த்தவுடன், இது கால் இல்ல.. வைப்பர் (காரில் இருப்பது) என்றாள்.
10. விளையாண்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று வந்து எனக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். ஆன்ட்டி அப்ப அப்ப வந்து உங்க அம்மாவுக்கு கிஃப்ட் கொடுப்பியா என்றதற்கு கிஃப்ட் கொடுக்க மாட்டேன், வெறும் கிஸ் மட்டும் கொடுப்பேன் என்றாள்.
11. பெசன்ட் நகர் பீச்சிக்குச் சென்றிருந்தோம். தண்ணீரைப் பார்த்து தீஷு பயந்து விட்டாள். தானும் தண்ணீக்கு அருகில் போகவில்லை, எங்களையும் போகவிடவில்லை. இனிமேல் பீச்சிக்கே போகக் கூடாது என்று சொல்லிவிட்டாள். மறுநாள் எங்களுக்கு பீச் ரிசாட் போக வேண்டி இருந்தது. அதனால் போகும் பொழுது, பீச் பற்றி சொல்லிக் கொண்டே போனேன். 'சி' ல (sea) நிறைய தண்ணி இருக்கும் என்றவுடன், 'c'ல மட்டும் தான் தண்ணி நிறைய இருக்குமா இல்ல 'd'லையும் இருக்குமா என்றாள்.
12. நானும் தீஷுவும் வாகிங் போய் கொண்டிருந்தோம். என்ன ஸ்மல் வருது என்றாள். ஏதோ பூவிலிருந்து வருதுடா என்றேன். இல்ல யார் வீட்டிலேயோ வெங்காயம் குக் பண்றாங்க என்றாள்.
13. சென்னையில் கடைக்குச் சென்றிருந்த பொழுது, என் கணவரின் கையை விட்டு விட்டு, தெரியாமல் வேறு ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டாள். வேறு ஒருவர் என்று தெரிந்தவுடன் எங்களைத் தேடினாள். என் கணவர் அவளிடம் இப்படி தொலைந்து விட்டால், அப்பா அம்மாவை கண்டுபிடிக்க பதில் சொல்ல வேண்டியிருக்கும் என சொல்லி உன் பெயர் என்ன? அப்பா பெயர் என வரிசையாகக் கேட்டுக் கொண்டே வந்தார். உங்க வீடு எங்கயிருக்கு கேட்ட என்ன செல்லுவ என்றவுடன்,"ரைட்ல போய் லெஃப்ட்ல திரும்பனுமினு சொல்வேன்" என்றாள்.
14. பாயில் உட்கார்ந்துக் கொண்டு, காலை நீட்டி மடக்கி, காலால் பாயை விரித்து மடக்கிக் கொண்டிருந்தாள். எதற்கு என்றவுடன் பீச்சில் இப்படி தான் (அலை) வந்தது என்றாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
ரசித்தேன்..நல்ல கலெக்ஷன்!
ReplyDelete8 - இது மாதிரி நிறைய நடக்கும் எங்க வீட்டிலே! நமக்கு இந்த மாதிரி டெக்னிக் தெரியாம போச்சேன்னு இருக்கும் சில சமயம்!
11 - what a PJ! LOL!
தீஷூ பற்றிய அனைத்து பதிவுகளும் அருமையோ அருமை!
ReplyDeleteநன்றியும் கூட.... எங்களுக்கும் குழந்தை வளர்ப்பில் சில வழிமுறைகளை தெரிவுபடுத்தியமைக்கு...
உங்களை முதன் முதலில் வாசித்தது எப்போதென்று நினைவில்லை... ஆனால் சந்தனமுல்லை மூலமாக மறு அறிமுகம்... அசத்தலான பதிவுகள்! :)
இல்லை அசத்தலான தீஷுவும் அவளது செயல்களும்...
அட அடா என்ன ஒரு ஞானம் இந்த வயசுல..உங்களால் பதில் பேசமுடியாத தருணங்களை புரிஞ்சுக்க முடியுது :))
ReplyDeleteமிக அழகாக இருக்கிறது... ஒவ்வொரு செயலும்.
ReplyDeleteபல இடங்களில் ஆச்சரியப்பட் வைக்கிறாள் தீஷு.
அவ்வப்போது குறும்பான நகைச்சுவையுடன்!
கவர்ந்த தருணங்கள் - உங்களுக்கு மட்டுமல்ல...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
“டைம் அவுட்” Super Nanny ஷோவில்ல பார்த்திருக்கேன்...
- x - = +
அதனாலதான் எங்களுக்கு “டைம் அவுட்” முடிஞ்சிருச்சி!
கலக்கல் தீஷு ... இத நல்லா ஞாபகம் வச்சுக்க:)
ஆமாம் முல்லை. ஏதாவது கேள்வி கேட்க சொன்னாலே ஏதாவது வில்லங்கம் இருக்குமோனு யோசிக்க வேண்டியிருக்கிறது.
ReplyDeleteநன்றி ஆகாய நதி. You are making me blush. நன்றிகள்.
வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி. நம்ம பதிலிருந்தே அடுத்த கேள்வியை கேட்கிறாள்.
நன்றி அன்பு.
//கலக்கல் தீஷு ... இத நல்லா ஞாபகம் வச்சுக்க:)//
இந்த மாதிரி எதையாவது சொல்லிக் கொடுக்காதீங்க அன்பு.. அப்புறம் எனக்கு தான் கஷ்டம்.
தீஷு-நான் வளர்கினே மம்மி என்கிறார் போல.
ReplyDeleteகுழந்தைகள் அப்படித்தான் கேள்விகளின் நாயகர்கள், என் மகளின் கேள்விகள் என்னை சில சமயம் முட்டாளாக்கி விடும், ஆயினும் சந்தோசமே.
ஆஹா.....1 வருடம் 10 மாச குழந்தைக்கு இது ஆச்சர்யம் தான் ...
ReplyDeleteஅழகாக இருக்கிறது...தீஷுவின் பேச்சும் உங்களோட குறிப்புகளும்
14ம் ஆச்சரியம்....
ReplyDelete11.... செம,
வாழ்த்துக்கள் தீஷூ...
ஆமாம் ரிதன்யா. கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பாள்.
ReplyDeleteதீஷுவுக்கு 2 வயது 10 மாதங்கள் ஆகி விட்டன் நிலா அம்மா. Layout மாற்றும் பொழுது Lillypieயில் தப்பா போட்டுட்டேன்.
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
அழகு... என்னையும் கவர்ந்தன தீஷுவின் இந்த இனிய தருணங்கள்
ReplyDelete//"ஏன் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது?"
ReplyDelete"போர் அடிக்கும்"
"ஏன் போர் அடிக்கும்?
இந்த பிரச்சினைக்கு அவளுக்கு timeout குடுத்து புரிய வைத்திருக்கலாம் என நினைக்கிறேன்.