Thursday, May 23, 2013

அமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..

இன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ள்..

1. ப‌ள்ளியில் நட‌க்கும் வ‌ருடாந்திர புத்த‌க‌க் க‌ண்காட்சி ந‌ட‌க்கும் முன் அனைத்துக் குழ‌ந்தைக‌ளும் ஒரு க‌லரிங் பேப்ப‌ர் கொடுப்பார்க‌ள். விருப்ப‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் க‌ல‌ர் செய்து திரும்ப‌க் கொடுக்க‌ வேண்டும். திருப்பிக் கொடுத்த‌ அனைவ‌ரின் பெய‌ரையும் எழுதிப் போட்டு,  இர‌ண்டு பெய‌ர்க‌ள் எடுத்து, அவ‌ர்க‌ளுக்குப் புத்த‌க‌க்க‌ண்காட்சியில் வாங்குவ‌த‌ற்கு ஐந்து டால‌ர்க‌ள் கொடுப்பார்க‌ள். எல்லா குழ‌ந்தைக‌ளும் ஒரு வேலை செய்திருக்க‌ இர‌ண்டு பேரை ம‌ட்டும் அதிர்ஷ்ட‌வச‌மாக‌ தேர்ந்து எடுப்ப‌து ம‌ற்ற‌ குழ‌ந்தைக்கு ஊக்க‌ம‌ளிப்ப‌தாக‌ இல்லை. இந்த‌ முறை தீஷுவின் நெருங்கிய‌த் தோழிக்குக் கிடைக்க‌, என் நிலைமையை யோசித்துப் பாருங்க‌ள்.   ‌


2. வீட்டுப்பாட‌ம் வார‌ம் ஒரு முறை தான். திங்க‌ள் கொடுக்கும் வீட்டுப்பாட‌த்தை வெள்ளி அன்று திருப்பிக் கொடுத்தால் போதும். வீட்டுப் பாடங்க‌ளும் மிகவும் குறைவாக இருப்ப‌தால், தினமும் செய்யும் அவ‌சிய‌ம் இருப்ப‌தில்லை. சிறுது என்றாலும் தின‌மும் கொடுத்தால் தின‌மும் செய்யும் ப‌ழ‌க்க‌ம் ஏற்ப‌டும்.


3. வாசித்துப் ப‌ழ‌குவ‌த‌ற்கு ஒரு இணையத்த‌ள‌ம், க‌ணக்குக்கு ஒன்று என்று Userid/Password ப‌ள்ளியில் கொடுத்துள்ள‌ன‌ர். நான் வெறும் ஹோம் வொர்க்குத் தான் க‌ம்ப்யூட்ட‌ர் பார்க்கிறேன்.. ம‌த்த‌ எதுவும் செய்ய விட‌ மாட்டேங்கிற‌ என்று அவ‌ள் த‌னியாக‌ சில‌ நேர‌ங்க‌ள் பார்ப்பாள். அது போக டீவி தின‌மும் அரை ம‌ணி நேர‌ம்.. வ‌குப்பிலும் க‌ம்ப்யூட்டர். ஸ்கீரின் நேர‌த்தைக் குறைக்க‌ வேண்டும் என்று எண்ணும் எனக்கு இதில் வ‌ருத்தம். இந்த‌ வ‌ருடத்திலிருந்து IPad வேறு வ‌குப்ப‌றைக்கு வ‌ருகிற‌து. வாசித்துப் ப‌ழ‌குவ‌த‌ற்கு ம‌ற்றும் க‌ணித‌ வீட்டுப் பாட‌த்திற்கு புத்த‌க‌ம் ப‌ய‌ன்படுத்தினால் அரை ம‌ணி நேர‌ ஸ்கீரின் நேர‌ம் குறையும்.

4.  ஒவ்வொரு வெள்ளியும் ஒரு க‌ட்டுக் காகித‌ம் வீட்டிற்கு வ‌ரும். அதில் பாதிக்குப் பாதி எக்ஸ்ட்ரா வ‌குப்புக‌ள் ப‌ற்றிய‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள். அப்ப‌டியே தூக்கிப் போடுவோம். ப‌ள்ளியிலிருந்து வார‌ம் ஒரு முறை நிக‌ழ்வுக‌ள் பற்றிய‌ ஒரு இ‍மெயில் வ‌ரும். அதில் ஒரு லிங்க் கொடுத்தால் தேவைப்ப‌டுப‌வ‌ர்க‌ள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள‌லாம்.


5. ஹாலோவின் பார்ட்டி, வால‌ண்ஸ்டே பார்ட்டி, கிறிஸ்தும‌ல் பார்ட்டி  என்று எந்த‌ப் பார்ட்டி ந‌ட‌ந்தாலும் வீட்டிற்கு சிறு சிறு பொருட்க‌ள் ஒரு சிறு பையில் வ‌ரும். அதில் க‌ண்டிப்பாக பென்சில், அழிப்பான், மிட்டாய் போன்ற‌ன இருக்கும். உண்மையாக‌வே வீட்டில் இப்பொழுது ஒரு ஐம்ப‌து பென்சில்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஒன்று கூட‌ நாங்க‌ள் வாங்கிய‌து அல்ல‌.


ம‌ற்ற‌ப் பள்ளிக‌ளில் வேறு மாதிரி இருக்கலாம். தீஷுவின் ஆசிரியையிட‌மும் ஒரு முறை சொல்லியிருக்கிறோம். நிறைய‌ பேர் சொல்கிறார்க‌ள், வ‌ரும் ஆண்டில் சில‌வ‌ற்றில் மாற்ற‌ம் வ‌ரும் என்றார்.  பார்க்க‌லாம்.


12 comments:

 1. When in Rome, do as the Romans do...-:)

  ReplyDelete
  Replies
  1. Yeah.. Very true.. We usually do but with cribbing :-)).. Certain things like bombarding them with gifts, lot of paper wastage can be easily avoided.. Thanks

   Delete
 2. ***5. ஹாலோவின் பார்ட்டி, வால‌ண்ஸ்டே பார்ட்டி, கிறிஸ்தும‌ல் பார்ட்டி என்று எந்த‌ப் பார்ட்டி ந‌ட‌ந்தாலும் வீட்டிற்கு சிறு சிறு பொருட்க‌ள் ஒரு சிறு பையில் வ‌ரும். அதில் க‌ண்டிப்பாக பென்சில், அழிப்பான், மிட்டாய் போன்ற‌ன இருக்கும். உண்மையாக‌வே வீட்டில் இப்பொழுது ஒரு ஐம்ப‌து பென்சில்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஒன்று கூட‌ நாங்க‌ள் வாங்கிய‌து அல்ல‌. ***

  இதுவும் பிடிக்காத ஒண்ணா?!!

  Are you sending her to KUMON? That will keep her busy if there is no homework!

  ReplyDelete
  Replies
  1. They get lots of petty things and hence do not know the value. My daughter uses/plays with them for few times. It is a shame to throw away too. My feeling is she has 2 pencils, she keeps them safe. Since she has 20, she does not know the value and moreover doesn't have the responsibility.

   No, I am not sending her to Kumon or Aloha or any other academic oriented courses.

   Delete
 3. ஆமாம் ஸ்க்ரீன் நேரம் அதிகம் தான், கட்டுப்படுத்த நினைக்கும் நான் தான் குழம்பிப் போகிறேன். இனிமேல் காலம் அப்படிதான் என்று ஆதரவு அளிக்கும் கணவர் ஒருபுறம்..என்ன செய்ய? :) பென்சில் 50தானா இருக்கிறது..இங்கு நூறைத் தாண்டும் போல..சீவுவதற்குள் பையன்களிடமிருந்து ஒளித்து வைத்து ஊருக்கு போனபொழுது அங்குள்ள பள்ளியில் கொடுத்தேன்..சீவியவற்றை என்ன செய்ய!!!! நல்ல பதிவு தியானா!

  ReplyDelete
 4. சிறப்பான அனுபவப்பகிர்வுகள்..!

  ReplyDelete
  Replies
  1. ந‌ன்றி இராஜ‌ராஜேஸ்வ‌ரி அம்மா..

   Delete
 5. Good observation. My daughter goes to second grade in a public school in Minneapolis and when she started kindergarten we did not like some of the stuff you mentioned here and then my wife wanted to make a change and she started volunteering in the school and she is able to make some changes in the last 2 years. I completely agree the screen time is increasing and the way we are controlling is through book reading. We go to library and encourage her to read physical books. Wish i can control the paper wastage.

  ReplyDelete
  Replies
  1. ந‌ன்றி செந்தில். நீங்க‌ள் சொல்லுவ‌து உண்மை தான். Volunteering செய்தால் சில‌வ‌ற்றை மாற்ற‌ முடியும். பேப்ப‌ரை வேஸ்ட் ஆக்குவ‌துப் பார்த்தால் க‌ஷ்ட‌மாக இருக்கிற‌து.

   Delete

 6. இங்கு இந்தியாவிலும் பெற்றோர்கள் அளவிற்கு அதிகமாக எல்லாம் வாங்கிக் கொடுத்து குழந்தைகளை கெடுக்கிறார்கள். 'ஜஸ்ட் நூறு ரூபாய் தான்மா' என்று என் பேரன் சொல்லும்போது நூறு ரூபாய் 'ஜஸ்ட்' ஆகிவிட்டது அல்லவா என்று தோன்றுகிறது. என்ன செய்ய?

  ReplyDelete
  Replies
  1. ஆம் அம்மா.. வருத்தமாக இருக்கிறது. நாம் வளர்ந்த சூழ்நிலை வேறு.இவர்கள் வளரும் சூழ்நிலை வேறு. பணத்தின்/பொருட்களின் அருமையை எப்படியாவது சொல்லித் தர வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு மேலோங்கி நிற்கிறது..

   Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost