Thursday, September 19, 2013

என்ன செய்வது? ‍- நானூறாவது பதிவு


ஒரு டைரியைப் போல் தான் பதிவுகள் எழுதத் தொடங்கினேன். ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். பின் தமிழில் தொடர்கிறேன். குழந்தைகளின் ஆக்டிவிட்டீஸ் பற்றிய பதிவுகளுக்கு வரவேற்பு இருக்குமா என்றெல்லாம் ஆரம்பிக்கும் பொழுது யோசிக்கவில்லை. ஐந்தாண்டு காலத்தில் நானூறு பதிவு எழுதியிருக்கிறேன். தொடர்ந்து பதிவு எழுதுபவர்களுக்குத் தெரியும் இது ஒன்றும் பெரிய எண்ணிக்கை இல்லை என்பது. 

எனக்கு ஒரு நாளில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் கணணிக் கிடைப்பது அரை மணி நேரம் தான். அந்த நேரத்தில் தான் பதிவு எழுத வேண்டும் மற்ற அனைத்து கணணி வேலைகளையும் முடிக்க வேண்டும். சில பதிவுகள் டிராஃப்ட்டிலேயே இரண்டு மாதங்கள் வரை இருக்கும். அப்புறம் அழித்துவிடுவேன். சில பதிவுகள் நான்கு நாட்கள் வரை சிறிது சிறிதாக எழுதியிருப்பேன். அதனால் வாசிக்கும் பொழுது முழுமையை அடையாதது போல் இருக்கும். சற்று வேலை அதிகரித்தாலும் நான் முதலில் நிறுத்துவது பதிவு எழுதுவதைத் தான். 

பின்னூட்டம் எழுதுவதும் அரிது தான். எழுதக் கூடாது என்று இல்லை. முதலில் சொன்னது போல் நேரமின்மை மற்றும் என் குணம். பிறரிடம் எளிதில் என்னால் பேசவோ பழகவோ முடியாது. 

எழுதும் ஸப்ஜெக்ட் ட்ரை, தொடர்ந்து எழுதுவது கிடையாது மேலும் பின்னூட்டம் எழுதுவது கிடையாது என்று ஏகப்பட்ட குறைகள் என்னிடம் இருந்தாலும், பதிவுகள் மூலம் சில நண்பர்களைப் பெற்று இருக்கிறேன். நிறைய பேரிடம் பதிவுகள் சென்று அடையாவிட்டாலும் பலர் தொடர்ந்து பின்னூட்டம் எழுதி என்னை உற்சாகப்படுத்துகின்றனர். அவர்களுக்கு என் நன்றிகள்.

நானூறு பதிவுகள் வரை எழுதியாகி விட்டது. தொடர்ந்து இந்தத் தளத்தில் எழுத வேண்டுமா என்கிற எண்ணம் சிறிது நாளாக என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. எழுதுவதை நிறுத்திவிடலாமா? ஆங்கிலத்தில் தொடரலாமா? ப்ரைவேட்டாக மாற்றிவிடலாமா? அல்லது அவ்வப்பொழுது நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் எழுதலாமா? எனக்குக் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  

Updated : இடைவெளிகள் இருந்தாலும் தொடர்ந்து எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். கருத்துரையிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!! 

31 comments:

 1. நானூறுக்கு இனிய பாராட்டுகள் தியானா.

  மேன்மேலும் வளர்ந்து ஆயிரம்தொட வாழ்த்துகின்றேன்.

  ReplyDelete
 2. ''எழுதுவதை நிறுத்திவிடலாமா? '' என்று ஏன் யோசிக்கிறீர்கள். எப்பொழுதெல்லாம் எழுத முடிகிறதோ அப்போது எழுதுங்கள். நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இப்பதிவுகள் நிச்சயம் உதவும்
  நானூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி Viya Pathy. கண்டிப்பாக அய்யா. முடியும் பொழுது எழுதுகிறேன்..

   Delete
 3. "நிறுத்த வேண்டும்" என்கிற எண்ணமே வேண்டாம்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி தனபாலன்!!

   Delete
 4. அப்படியே மனதைத் திறந்து எழுதிவிட்டாய் தியானா. நேரமின்மை, கணினி கிடைக்கும் நேரம் எல்லாம் தெரிந்ததே..ஆனால் டிரை என்று நீ சொல்லுவதை என்னால் ஏற்க முடியவில்லை. பிள்ளைகளுடன் செய்யும் பல வித கைவேலைகள், விளையாட்டுகள், எளிதாக கற்றுக்கொடுத்த பாடங்கள் என்று பலவிதங்களிலும் பயனுள்ள பதிவுகளையே எழுதியுள்ளாய். பலருக்கும் உன் பதிவுகள் உதவியிருக்கும் என்பதே என் எண்ணம், சிறிதும் அதில் ஐயமில்லை. அதனால் டிரை என்ற எல்லாம் யோசிக்காதே. மற்றபடி நேரம் கிடைப்பதைப் பொருத்து பதிவிடுதலைத் தொடர்ந்து பார். இடைவெளி அதிகரித்தாலும் பரவாயில்லை..சில நாட்கள் அப்படி முயற்சித்துப் பார் தியானா.
  நான்கு சதத்திற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
  நான்கு சதம் அடித்துவிட்டு தாழ்மையுடன் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லுகிறாயே.. :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிரேஸ்.. இடைவெளிகள் சோம்பேறித்தனத்தை அதிகரித்து எழுத விடாமல் செய்கிறதே. முடிந்தவரை எழுதாலம் என்று இருக்கிறேன் கிரேஸ். உன் ஊக்கத்திற்கு நன்றிகள் !!.

   Delete
 5. நானூறுக்கு இனிய பாராட்டுகள் தியானா.

  //ப்ரைவேட்டாக மாற்றிவிடலாமா? ///

  மிக நல்லா கோபம் வருகிறது. உங்கள் கூட பழக்கம் இல்லை. இல்லையென்றால் நல்லா திட்டி இருப்பேன்

  ReplyDelete
  Replies
  1. கோபத்தில் கூட நல்ல கோபம் என்று இருக்கிறதா மதுரைத்தமிழன்? :))

   ப்ரைவேட் என்று நினைத்தற்கு காரணம் நினைத்ததை எழுதலாம், நிறத்தலாம் போன்ற விஷயங்களுக்காகத் தான். வேறு ஏதும் காரணம் இல்லை..நன்றி உங்கள் வருகைக்கு!!

   Delete
 6. //ஆங்கிலத்தில் தொடரலாமா? //

  இதில் நண்பர்கள் குழாம் அமைவதில்லை. ஆக ‘வறுத்தெடுக்க’ ஆளில்லை என்று ஓடி வந்து விட்டேன்.

  தொடருங்கள் ....

  ReplyDelete
  Replies
  1. நன்றி தருமி அய்யா :))

   அதுவும் உண்மை.. யாரும் இல்லாத ஊரில் டீ ஆற்றிக் கொண்டுயிருக்க வேண்டும்..

   Delete
 7. Hi Dhiyana,
  Congrats on such good number especially on kids & their activities.
  As I said earlier, I am a silent spectator of your blog and use this as a reference for educational activities for my 4 year old daughter.
  I suggest you to continue blogging. :) :)

  Regs
  Gayathri S

  ReplyDelete
  Replies
  1. Thanks Gayathri for your suggestion. I really appreciate it. I have planned to continue blogging whenever time permits.

   Delete
 8. தொடர்ந்து பதிவு எழுதுபவர்களுக்குத் தெரியும் இது ஒன்றும் பெரிய எண்ணிக்கை இல்லை என்பது.//

  யார் சொன்னது? இது ஒரு பெரிய சாதனைதான். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வாழ்த்துகள்.....

  தொடர்ந்து எழுதுங்க...

  ReplyDelete
 10. வாசகர்களுடன் ஊடல் கொள்வதற்கு எழுத்தாளர்களுக்கு உரிமையுண்டு. எழுதுவதை நிறுத்தலாமா என்று யோசிக்க விரும்புவதும் அத்தகைய ஒன்றே. ஆனால் 1330ஆவது திருக்குறளை ஞாபகப்படுத்திக்கொள்ள மறவாதீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா உங்கள் வருகைக்கு!! நீங்கள் சொல்லுவது போல் நான் எழுத்தாளர் எல்லாம் இல்லை :)). நிறுத்தலாமா என்று யோசிப்பதற்கு காரணம் நேரமின்மை மட்டுமே..வேறு எதுவும் இல்லை..

   Delete
 11. மிகப்பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள், தியானா. தொடர்ந்து எழுதுங்கள் படிக்க நாங்கள் நிறைய பேர்கள் இருக்கிறோம். நானூறு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
  அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன். சமூக தளங்களில் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொள்பவர்கள் உண்மையில் மிகவும் சங்கோஜப் பிராணிகள் என்று. உங்களை நினைத்து வியப்பாகத் தான் இருக்கிறது.

  எப்போது முடிகிறதோ அப்போது எழுதுங்கள். நிறுத்த வேண்டாம்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா!! நீங்கள் நினைக்கும் அளவிற்கு நான் சங்கோஜப் பிராணி இல்லை. எனக்கு பழக நேரம் எடுக்கும். பழகியப்பின் எளிதாக அவர்களுடன் நட்பு பாராட்ட முடியும். ஆனால் இணைத்தில் நட்புக்களுடன் இணைய ஏனோ பல வருடங்கள் எனக்கு எடுக்கிறது :))

   Delete
 12. Hi,

  I'm reading your blog before my son is born. You inspired me to join him in a montessori school. He 2.9 years old now. I use your blog as reference for the activities I do with him. Please never stop writing. This is the only tamil blog that talks about the kids activities I think. I want you to continue this whenever possible.

  ReplyDelete
 13. Hi dhiyana ..
  Iam also a silent reader in your blog .l like Montessori teaching and really few years back I happen to see ur blog with kids activities it was so impressive .though i m not regular visitor I've referred so many articles and we have tried in home. My child also going to Montessori now jus started she is three yr .the very important thing is I love reading tamil and was so proud of u. I am poor in writing tamil so made this comment in English pl excuse .but seeing this post I thought I must leave a word saying thr r many peoples like me who reffer ur writing .tk cr .

  ReplyDelete
  Replies
  1. Thanks Prabhamadhan. I am very happy to hear that..

   Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost