06/04/2009
தீஷுவிற்கு மதியம் 2 முதல் 3 மணி நேரம் தூங்கும் பழக்கம் உண்டு. அந்த நேரம் மட்டும் தான் அவள் அருகிலில்லாமல் நான் இருக்கும் நேரம். சில நாட்களில் அதுவும் கிடைக்காது. அப்பொழுது தான் பிளாக் எழுதுவது, படிப்பது, தீஷு செய்ய வேண்டிய ஆக்டிவிட்டீஸுக்கு தயார் ஆவது, புத்தகம் படிப்பது, என் ஹாபி ஆன தையல்,பெண்டிங் எல்லாம் செய்ய வேண்டும். அவள் எழும் பொழுது முக்கால்வாசி நேரம் இப்பொழுது தைத்துக் கொண்டிருக்கிறேன். அதைப் பார்த்து அவளும் தைக்க வேண்டும் என்றாள். நான் விசாரித்த வரை இங்கு குழந்தைகளுக்குக்கான ஊசி கிடைக்கவில்லை. தீஷு பழைய பள்ளியில் குழந்தைகள் செய்யும் வேலைகளின் புகைபடத்தை ஒவ்வொரு வாரம் அப்டேட் செய்வார்கள். நான் கேட்டுக் கொண்டதற்காக என்னை அந்த குரூப்பிலிருந்து நீக்கவில்லை. அதில் ஒரு குழந்தை துளைகள் இட்ட ஒரு மரப்பலகையில் நூலால் தைத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் நான் ஒரு பட்டாம் பூச்சி படத்தை எடுத்து Foam Sheetடில் வெட்டி, அதில் துளைகள் போட்டேன். இந்த வேலையை வெள்ளி இரவு செய்து கொண்டிருந்தேன். செய்து முடித்தவுடன் அப்பொழுதே தைக்க வேண்டும் என்றாள். இரவு ஒன்பதரை முதல் பதின்னொன்று வரை செய்து கொண்டிருந்தாள். அது தான் அவள் மிகுந்த நேரம் கவனச்சிதறல் இல்லாமல் செய்த முதல் ஆக்டிவிட்டி.ஆனால் அந்த பட்டாம் பூச்சி கிழிய ஆரம்பித்தது. ஆதனால் வீட்டிலிருந்த ஒரு வெல்வட் துணியில் துளைகளிட்டு கொடுத்தேன். அதையும் விருப்பமாகச் செய்தாள்.
வார விடுமுறையில், குழந்தைகளுக்கு ஷு லேஸ் கட்டுவதற்குப் பழக்குவதற்காக இருந்த சாதனத்தைப் பார்த்தேன். பாதம் போன்ற வடிவிலுள்ள மரப்பலகையில் துளைகள் இருந்தன. அதைப் பார்த்தவுடன் இதை தைப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று வாங்கி வந்தேன். தீஷு மிகவும் விருப்பமாகச் செய்கிறாள். சீக்கிரமாக கற்றுக் கொள்வாள் என்று நினைக்கிறேன். இது கை கண் ஒருக்கிணைப்புக்கு ஏற்றது.
Sequencing Flash card செய்தோம். அதில் ஒரு செயலைக் குறித்த மூன்று அல்லது நான்கு அட்டைகள் இருக்கும். அந்த அட்டைகளை, எந்த வரிசையில் அந்த செயலை செய்வோமோ அந்த வரிசையில் அடுக்க வேண்டும். இந்த முறை விதையிலிருந்து செடி வளர்வது, வண்டுகள் மரத்தில் ஏறுவது போன்வற்றை செய்ய சொன்னேன். விருப்பமிருக்கவில்லை. ஆனால் அட்டைகளை வாங்கி ஒவ்வொரு அட்டையின் படத்தையும் பார்த்து அடுத்த படத்தை யூகித்துக் கொண்டிருந்தாள். இது sequencing மற்றும் கற்பனைத்திறனுக்கு ஏற்றது.
Games to play with 3 year old without anything
2 years ago
மகளின் விளையாட்டுகளை நன்றாக ரசிக்கின்றீர்கள்..
ReplyDelete/*நான் விசாரித்த வரை இங்கு குழந்தைகளுக்குக்கான ஊசி கிடைக்கவில்லை.*/
ReplyDeleteஅது என்ன குழந்தைகளுக்குக்கான ஊசி?
நன்றி ஞானசேகரன்
ReplyDeleteநுனி கூர்மையாக இருக்காது அமுதா. குழந்தைகளுக்கு கையில் குத்தாது.
நல்லாருக்கு ஆக்டிவிட்டீஸ்..எங்அ வீட்டில் அந்த ஷூ லேஸ் சாதனம் செல்போன் ஹோல்டராக மாறியிருக்கிறது..:-))..நீங்கள் முதலில் சொல்லியிருக்கும் லேஸ் கிட் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது..பகிர்தலுக்கு நன்றி!
ReplyDelete