தீஷு ஹண்ரட் போர்ட் விருப்பமாக செய்ததால், இங்கிருந்து இந்த 1-100 மேஸை எடுத்துக் கொண்டேன். 1 முதல் 100 வரை இணைக்க வேண்டும். அடுத்த எண்ணை அருகிலுள்ள கட்டங்களில் மட்டும் தான் தேட வேண்டும் என்பது புரியவில்லை. முழு பக்கத்திலும் தேடினாள். ஆகையால் என் உதவி மிகுதியாக தேவைப்பட்டது. என் உதவி கேட்க நேர்ந்தால், சில நேரங்களில் எடுத்து வைத்து விடுவாள். ஆனால் விருப்பமாக செய்தாள். பிரிண்ட் அவுட் எடுக்கும் பொழுது, இரண்டு பக்கமாக வந்தது. ஆகையால் 60 உடன் நிறுத்தி விடுவாள் என்று நினைத்தேன். ஆனால் என்னை எழுதி தர சொல்லி, 80 வரை செய்தாள். ஆனால் நான் தான் எண்களைக் காட்டினேன்.
நேராக வெட்டப் பழக்குவதற்காக படங்களை இங்கிருந்து எடுத்துக் கொண்டேன். முழுவதும் நேராக வெட்டவில்லை, ஆனால் தன்னால் முடிந்தவரை வெட்டினாள். நான்கு படங்கள் மட்டுமே வெட்டினாள். அதற்குள் ஆர்வம் போய்விட்டது.
பாக்கிங் செய்ய பயன்படும் பபிள் ராப்(Bubble wrap) பயன்படுத்தி பெயிண்டிங் செய்வதைப் பற்றி ஒரு புத்தகத்தில் படித்திருந்தேன். பெயிண்டை Bubble wrapயில் தடவி பேப்பரில் ஒற்றி எடுக்க வேண்டும். நன்றாக வந்திருந்தது. நான் காமிரா எடுத்து வருவதற்குள் தண்ணீரைக் கொட்டி, பிரஸால் தேய்த்து விட்டிருந்தாள். அவளைப் பொறுத்த வரை எல்லாம் பெயிண்டிங் தான்.
Games to play with 3 year old without anything
2 years ago
சுவாரசியம் அதேசமயம் உபயோகமான தகவல்! நான் பப்புவிற்கு நியூஸ்பேப்பரில் கட் செய்ய வைத்தேன்..அது பின்னர் தலைவரை போய்விட்டது! LOL!
ReplyDeleteதீஷூ சற்று உயரமாகிவிட்டாற் போல இருக்கிறது!